உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோடை வெப்பம் அதிகரிப்பு; தாகம் தணிக்கும் தர்பூசணி

கோடை வெப்பம் அதிகரிப்பு; தாகம் தணிக்கும் தர்பூசணி

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக் காட்டில் கோடைகால வெப்பம் அதிகரித்துள்ளதால், தாகம் தணிக்க மக்கள் தர்பூசணியை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.கேரள மாநிலத்தில் சமீப நாட்களாக கோடை கால வெப்பம் அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் தாகம் தணிக்க தர்பூசணியை அதிகம் விரும்புகின்றனர். பல்வேறு வகை தர் பூசணி பழங்கள் பாலக்காடு சந்தைக்கு வர துவங்கியுள்ளன. மாவட்டத்தின் முக்கிய சாலை ஓரங்களில் தர்பூசணி விற்பனை விறுவிறுப்பாக நடக்கிறது.இதுகுறித்து, தர்பூசணி மொத்த வியாபாரி கரிம்பா பகுதியைச் சேர்ந்த மோகன் தாஸ் கூறுகையில்:தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து, தர்பூஸ், கிரண், விஷால் ஆகிய ரக தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இரண்டு முதல் 12 கிலோ எடையில் தர்பூசணி பழங்கள் உள்ளன. தமிழகத்தில், திண்டி வனம், பொள்ளாச்சி, பழநி, ஆண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து தர்பூசணி பழங்கள் கேரளாவுக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது கேரளவின் பலப்பகுதிகளிலும் இருந்தும் தர்பூசணி பழங்கள் வரத்து உள்ளது. கிலோ, 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.ஏப்ரல் மாதத்தில், கர்நாடக மாநில மைசூரில் இருந்தும் அதிக அளவில் தர்ப்பூசணி விற்பனைக்கு வரும். பாலக்காடு நகரில் சுற்றுப்பகுதிகளிலும், மொத்த வியாபாரிகளிடமிருந்து, தினமும் சராசரியாக, ஐந்து டன்னுக்கும் அதிகமாக விற்பனை நடக்கிறது. சாலை ஓரங் களில் விற்கப்படும் தர்பூசணி ஜூஸ்சை தாகம் தணிக்க மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ