உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல முறை சம்மன்: பல நாள் கெடு: "பிடி" கொடுக்காத கெஜ்ரிவால்

பல முறை சம்மன்: பல நாள் கெடு: "பிடி" கொடுக்காத கெஜ்ரிவால்

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், 9வது முறையாக டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நேற்று டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் ஜாமின் பெற்றார். இதுவரை 8 முறை அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை கெஜ்ரிவால் புறக்கணித்து விட்டார்.டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத்துறை எட்டு முறை சம்மன் அனுப்பியது. ஆனால், கெஜ்ரிவால் அவற்றை நிராகரித்தார். இதையடுத்து, டில்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=0udo2dfu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த வழக்கு, கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் திவ்யா மல்ஹோத்ரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தன் வழக்கறிஞர்களுடன் கெஜ்ரிவால் ஆஜரானார். அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனால் கெஜ்ரிவால் கொண்டாட்டத்தில் இருந்தார்.

விடாத அமலாக்கத்துறை

இந்நிலையில், மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், இன்று (மார்ச் 17) 9 முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. வரும் மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவால் நேரில் ஆஜர் ஆக வேண்டும் என சம்மனில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

சட்டவளையம்

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், திஹார் சிறையில் நீண்ட காலமாக முன்னாள் டில்லி முதல்வர் மணிஷ் சிசோடியோ சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சமீபத்தில் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாக அமலாக்கத்துறையினர் நம்புகின்றனர். கெஜ்ரிவாலுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கெஜ்ரிவாலை சட்டவளையத்திற்கு கொண்டு வர வேண்டும் என அமலாக்கத்துறையினர் கடும் முயற்சி செய்து வருகின்றனர்.

நீர்வளத்துறையில் முறைகேடு

நீர்வளத்துறையில் ஜல் போர்டு திட்டத்தில் ஊழலில் ஈடுபட்டதாக கூறி, டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. மார்ச் 18ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆகுமாறு சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், கெஜ்ரிவாலை கைது செய்ய முடியாது என்ற சந்தேகம் பிரதமர் மோடிக்கு எழுந்துள்ளது. இதனால் இந்த சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது என டில்லி அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

M Ramachandran
மார் 18, 2024 00:09

கேஜ்ரிவால் என்றால் சட்டத்தை மிகவும் மதிப்பவர். போற்று தலுக்குறிய பழைய அரசு அதிகாரி


M Ramachandran
மார் 18, 2024 00:07

படித்த மிக நல்ல சட்டத்தை மதிக்கும் யோக்கியா சிகாமணி


duruvasar
மார் 17, 2024 16:09

தனக்கு வந்த சந்தேகத்தை எதற்காக பகிர்ந்து கொண்டார். வியப்பாக இருக்கிறது.


vbs manian
மார் 17, 2024 15:40

வரையறுக்கப்பட்ட நீதி நெறிமுறை நீதிமன்ற நடவடிக்கை எல்லாற்றையும் துச்சமாக மதித்து பந்தாடுபவர். இவர் ஒரு முதல்வர். அரசியலமைப்பு சட்டத்தின் மீது பிரமாணம் செய்து பதவியில் இருப்பவர்.


Dharmavaan
மார் 17, 2024 14:01

நேர்மையற்ற நீதி உள்ளவனை குற்றவாளிகள் பிடிபட மாட்டார்கள்


Pandi Muni
மார் 17, 2024 13:43

போதை மருந்து மாபியா கும்பல் முழுதும் சிக்கும் பொழுது தி.மு.க காணாமல் போகும்.


HoneyBee
மார் 17, 2024 13:19

இவன் என்ன ஜென்மம்.... ஊழலின் மறு உருவம்... பயம் பயம் பயம் வேற எதுவும் இல்லை.... கர்மா... அடிக்காமல் விடாது


kSethu
மார் 17, 2024 12:56

கோர்ட் எப்படி கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கொடுத்தது . இது ஒரு தவறான செயல்


bal
மார் 17, 2024 12:40

இந்த ஸ்வட்டெர் காரனை ஒன்னும் பண்ணமுடியாது.


bal
மார் 17, 2024 12:26

ஸ்வெட்டர் கரணை உள்ளே போடுங்கள்..


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி