உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கு தேசத்துக்கு ஆதரவு!

தெலுங்கு தேசத்துக்கு ஆதரவு!

லோக்சபா சபாநாயகர் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரை நிறுத்தினால், இண்டியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் இணைந்து ஆதரவு தர முயல்வோம். அந்த பதவியை பா.ஜ., கைப்பற்றினால், கூட்டணி கட்சிகளை உடைக்கும்.சஞ்சய் ராவத், மூத்த தலைவர்,சிவசேனா உத்தவ் அணி

பிரதமருக்கு இது அழகல்ல!

நீட் தேர்வில் மோசடி நடந்திருப்பது வெளிவந்துள்ள நிலையில், பிரதமர் இது குறித்து மவுனம் காப்பது அவருக்கு அழக்கல்ல. எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் இது குறித்து பேச வேண்டும். உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் விசாரணை நடக்க வேண்டும்.கபில் சிபல், ராஜ்யசபா எம்.பி., - சுயேச்சை

பொது சிவில் சட்டம் வரும்!

பா.ஜ., தேர்தல் அறிக்கையில், பொது சிவில் சட்டம் பற்றி குறிப்பிட்டு உள்ளோம். கோவா, உத்தரகண்ட் போன்ற மாநிலங்கள் அவற்றை நடைமுறைப்படுத்த துவங்கியுள்ளன. மத்தியில் பலம்வாய்ந்த அரசு அமைந்துள்ளதால், அதை பற்றி கவலைப்பட தேவையில்லை.அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய சட்ட அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ