உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அரசு அதிகாரிகள் வழக்கை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு அதிகாரிகள் வழக்கை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'மத்திய அரசு அமைப்புகளின் ஊழியர்கள், அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகளை மாநில விசாரணை அமைப்புகள் விசாரிக்க முடியும்' என உச்சநீதிமன்றம் நேற்று கருத்து தெரிவித்தது.ஈ.டி., எனப்படும், அமலாக்கத்துறையின் மதுரை துணை மண்டல அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் அங்கித் திவாரி.இடைக்கால ஜாமின்இவர், கடந்த ஆண்டு டிச., 1ல், மாநில அரசு அதிகாரியிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது, தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அவரது ஜாமின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமின் வழங்கியது. இந்நிலையில், அங்கித் திவாரியை தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும், இந்த விவகாரத்தை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, 'லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை விசாரிக்கும் எங்கள் நடைமுறைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'மத்திய அரசு அதிகாரிகள் குற்றங்களில் ஈடுபடும் போது அதை மத்திய விசாரணை அமைப்புகளும் விசாரிக்கலாம், மாநில விசாரணை அமைப்புகளும் விசாரிக்கலாம். மாநில அரசு விசாரணை அமைப்புகள் விசாரிக்கவே கூடாது என்று நாங்கள் கூறவே இல்லை' என, நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.உரிமை இல்லை'அதே நேரத்தில், மத்திய அரசு அதிகாரிகள் தொடர்புடைய வழக்குகள் அனைத்திலும் மத்திய விசாரணை அமைப்புகள் விசாரணை கூடாது என, கேட்கவும் முடியாது. 'ஏனெனில், மத்திய அரசு அதிகாரிகள் தொடர்பான அனைத்து வழக்குகளையும், மாநில விசாரணை அமைப்புகள் விசாரிப்பது சரியானதாக இருக்காது. நம் கூட்டாச்சி அமைப்பும் அவ்வாறு கட்டமைக்கப்படவில்லை' என, நீதிபதிகள் தெரிவித்தனர்.அப்போது குறுக்கிட்ட தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், 'குற்றம் சாட்டப்பட்டுள்ள அங்கித் திவாரி தன்னை எந்த விசாரணை அமைப்பு விசாரிக்க வேண்டும் என கேட்க முடியாது; அவருக்கு அதற்கான உரிமை கிடையாது' என, திட்டவட்டமான வாதத்தை முன்வைத்தார்.அதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், 'அங்கித் திவாரி தனக்கு ஜாமின் போன்ற நிவாரணங்களை மட்டுமே கேட்க முடியும்' என கூறினர்.

நிபந்தனை தளர்வு

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:அங்கித் திவாரிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் நீட்டிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை இல்லாத போது, மத்திய பிரதேசத்தில் உள்ள அவரது குடும்பத்தினருடன் அவர் தங்கியிருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் விசாரணை அமைப்புகள் அழைக்கும்போது, விசாரணை நீதிமன்றத்தின் முன் தவறாமல் ஆஜராக வேண்டும். விசாரணை நீதிமன்றம் அனுமதிக்கும்பட்சத்தில். 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக அங்கித் திவாரிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Subash BV
நவ 30, 2024 19:19

CREATE SPECIAL COURTS FOR GOVT OFFICIALS LIKE MLA AND MPS.


S.Martin Manoj
நவ 30, 2024 13:14

மத்திய அரசு ஊழியர் என்ன ஸ்பெஷல் வரம் எதும் வாங்கிட்டு பிறந்தவங்களா எந்த அமைப்பு கேஸ் ஃபைல் பண்ணுதோ அந்த அமைப்பு விசாரிக்க வேண்டியதுதான், இடி மற்றும் சிபிஐ அமைப்புகள் என்ன உத்தமர்களால் நிறைந்துள்ளதா? அதை வழி நடதுபவர்களே திருடர்கள்தானே.


visu
நவ 30, 2024 14:42

அப்ப மாநில அரசு துறைகள் மட்டும் உத்தமர்களை கொண்டதா ? ஒரு அமைச்சர் ஊழல் செய்தால் அதை விசாரிக்க கவெர்னோர் அனுமதி அளிக்க வேண்டும் என்ற முறைகள் மட்டும் ஏன் அவர்கள் மட்டும் என்ன வரம் வாங்கி பிறந்தவர்கள் ?


James Mani
நவ 30, 2024 13:05

இந்த கேஸ் காங்கிரஸ் ஆட்சில் இருந்தால் ?


GMM
நவ 30, 2024 12:10

உச்ச நீதிமன்றம் நிர்வாக விதி மற்றும் தேச பாதுகாப்பு கருத்தில் கொண்டு இயங்குவது போல் தெரியவில்லை. சட்ட விரோதிகள் மறைவில் இருந்து உச்ச நீதிமன்றத்தில் செயல்படுவது போல் தெரிகிறது. மத்திய அரசு இதன் தாக்கத்தை உணர தவறி வருகிறது. போலீஸ் கான்ஸ்டபிள் இன்ஸ்பெக்டரை விசாரிக்கலாம் என்றால், எப்படி நிர்வாகம் புரிய முடியும்? . பொன்முடி விவகாரத்தில் விசாரணை அமைப்புகள் நீதிமன்றம் உள் சென்று நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். கட்டுப்பாடு இல்லாத நீதிமன்ற அதிகார முறையில் அரசியல் சாசனம் பாதுகாக்க மத்திய அரசால் முடியாது.


தமிழ்வேள்
நவ 30, 2024 12:07

எதிர்க்க்கட்சி ஆளும் மாநில அரசுகள் அதிகம் பொய்வழக்கு போட்டு ,கைது அது இது என்று அட்டகாசம் செய்யும் வாய்ப்புகளே அதிகம் .....திராவிடம் பிரதமர் மீது கூட வழக்கு போடும்


ஆரூர் ரங்
நவ 30, 2024 08:36

மாநில அரசு ஊழியர்கள் அமைச்சர்கள் லஞ்சம் வாங்கினால் மாநில காவல்துறைதான் விசாரித்து வழக்குப் பதிவு செய்யலாம். அதனடிப்படையில் மட்டுமே ED பண மோசடி வழக்கு போட முடியும். தமிழக கிரிமினல் வழக்குகள் மற்றும் மாநில அரசு அமைச்சர்கள், ஊழியர்களின் மீதான லஞ்சப் புகார்களை CBI விசாரிக்க முடியாது என மாநில அரசு தடுத்துள்ளது. அப்படியிருக்க மத்திய அரசு ஊழியர்களின் மீதுள்ள புகார்களில் மாநில அரசு எப்படி தலையிட முடியும்? கூட்டாட்சித் தத்துவம் இதுதானா? இது அரசியலமைப்பு சட்டத்தை கேலி செய்வது போல உள்ளது.


ஆரூர் ரங்
நவ 30, 2024 08:30

அடுத்து அன்னிய நாட்டு தலைவர்கள் மீது இங்குள்ள உள்ளூர் கான்ஸ்டபிள் வழக்கு நடத்தலாம்ன்னு உ‌த்தரவு போடுங்க எஜமான்.


GMM
நவ 30, 2024 08:23

மத்திய அரசு அதிகாரிகள் குற்றங்களில் ஈடுபடும் போது, மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் விசாரிக்கலாம் என்ற உத்தரவு நிர்வாக குழப்பம் விளைவிக்கும். தமிழக மாநில அதிகாரிகள் குற்றத்தை கேரள, ஆந்திர மாநிலம் ... விசாரிக்க முடியும். உச்ச நீதிமன்றம் ஒரு அரசு துறை . ஒரு நாள் தமிழக போலீஸ் நீதிபதியை / ராணுவத்தை / சிபிஐ யை விசாரிக்க துணியும். அரசு நிர்வாக நடைமுறையில் நீதிமன்றம் கருத்து கூற, உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை. நிர்வாகத்தில் தன் எல்லைக்கு உட்பட்ட, தன் அதிகாரத்திற்கு கீழ் உள்ள அதிகாரியை மட்டும் தான் விசாரிக்க முடியும். இதன் மூலம் தாசில்தார் கலெக்டரரை விசாரிக்க முடியும். மத்திய அரசு, மற்றும் அதிகாரிகள் இதனை சட்டபூர்வமாக தடுக்க வேண்டும். நிர்வாக குழப்பம் ஏற்பட்டு நாடு சிதறிவிடும்.


Dharmavaan
நவ 30, 2024 08:19

அரசியல் காழ்ப்புணர்ச்சியை எதிரி கட்சி மாநிலங்கள் எதுவும் செய்யும் கேவலமான நீதி சட்டத்தில் இது தெளிவாக இருக்கிறதா எப்படி கோர்ட் இதை நுழைக்க முடியும் வரம்பு மீறிய அதிகாரம் .மோடி அரசு கொலீஜியத்தை நீக்க வேண்டும் துணிவோடு


Barakat Ali
நவ 30, 2024 07:58

சட்டத்தில் தெளிவில்லை .......


Dharmavaan
நவ 30, 2024 08:16

தெளிவில்லாமல் ஆக்குவது இக்கால கொலீஜியும் நீதியே .மத்திய அரசை கேவலப்படுத்தி மாநில அரசை ஆதரித்தும் பிரிவினை வாதத்தை தூண்ட வேண்டும் என்பதே நோக்கம் .


புதிய வீடியோ