உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யானைகளை பயன்படுத்த விதித்த கட்டுப்பாடுகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

யானைகளை பயன்படுத்த விதித்த கட்டுப்பாடுகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த கேரள உயர் நீதிமன்றம் விதித்த பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.கேரளாவில், கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது வழக்கம். அப்போது யானைகளுக்கு மதம் பிடித்து சில அசம்பாவிதங்களும் நடந்துள்ளன. இந்நிலையில், கோவில் விழாக்களில் யானைகள் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்தது.

அதன் விபரம்:

* திருவிழாவில் யானைகளை பயன்படுத்தும் போது ஒரு யானைக்கும், மற்றொரு யானைக்கும் இடையே, 10 அடி துார இடைவெளி இருக்க வேண்டும்* பொது மக்கள் இருக்கும் பகுதியில் இருந்து, குறைந்தது 25 அடி துாரத்தில் மட்டுமே யானைகளை நிறுத்த வேண்டும்* பட்டாசுகள் வெடிக்கும் இடத்தில் இருந்து, 320 அடி துாரத்தில் யானைகளை நிறுத்த வேண்டும்* யானைகளுக்கு குறைந்தது மூன்று நாட்கள் ஓய்வு அளிக்க வேண்டும்* கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது அத்தியாவசிய மத சம்பிரதாயம் அல்ல.இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த உத்தரவை எதிர்த்து பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவை நடத்தும் திருவம்பாடி மற்றும் பரமேக்காவு தேவசம் வாரியங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், 'கேரள உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் சாத்தியமற்றவை' என தெரிவித்தது.'மேலும், விதிகளை உருவாக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், அதற்கென தனி அதிகாரம் படைத்த அதிகாரிகள் உள்ளனர்' என்றும் தெரிவித்தது. இதை தொடர்ந்து, கேரள உயர் நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு தடை விதித்ததுடன், கேரளாவில் சிறைபிடிக்கப்பட்ட யானைகள் மேலாண்மை மற்றும் பராமரிப்பு விதிகள், 2012ன் கீழ் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்த அனுமதி அளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sivagiri
டிச 20, 2024 13:39

இப்ப வளரும் குழந்தைகள் யானையை பார்த்தது கூட கிடையாது - , ஏன் , சிட்டிகளில் வளரும் குழந்தைகள் , ஆடு - கோழி - மாடு - கறிதான் பார்த்திருக்கிறார்கள் - நாய் மட்டும் வளர்க்கிறார்கள் - அனால் , ஆடு மாடு கோழி , குதிரை, காளை மாடு , கழுதை பன்றி , காகம் மைனா , மயில் , குயில் , இதெல்லாம் பார்த்தது கூட கிடையாது - - இதில் யானை , எங்கே போயி பார்க்க ? . . கோவிலில் பார்த்தால்தான் உண்டு - இங்கே பெரிய கோவில்களில் பசு மடம் இருப்பது போல , அருகில் கொஞ்சம் இடம் ஒதுக்கி , பக்தர்கள் உபயம் பெற்று , சிறிய zoo - போல யானை , குதிரை , காளை மாடுகள் , சேவல் , கோழி , குருவிகள் , மயில் , போன்ற எளிதில் வளர்க்க கூடிய வளர்த்து பராமரிக்கலாம் , தெப்பங்களில் - பல வகை மீன்கள் வளர்க்கலாம் . . .


Ram pollachi
டிச 20, 2024 13:24

யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம் சீண்டினால் அது நிச்சயம் பழிவாங்கும் குணம் உடையது... வெள்ளை நிறம் சுத்தமாக பிடிக்காது, ஆக வெள்ளை வேட்டி, சட்டை அணிந்த நபர்கள் கவனமாக இருக்க வேண்டும். நீதி மன்றங்கள் சந்தை கடையை மோசம்... வக்கீல்கள் இடையே புகுந்து வழக்கின் போக்கை மாற்றி விடுவார்கள்... கீழ் கோர்ட், மேல் கோர்ட், குதிரை வண்டி கோர்ட் என ஓன்று விடாமல் சுற்றி காட்டுவார்கள்... கையிருப்பு கரைந்தது தான் மிச்சம்.


Narayanan
டிச 20, 2024 10:35

நீதிமன்றங்கள் வழங்குகின்ற தீர்ப்புகள் எல்லாமே நாட்டில் வாழமுடியாத நிலைக்கு கொண்டு செல்கிறது. இது அபாயகரமானது . நீதி கிடைக்கும் என்று இப்போதெல்லாம் நீதிமாற்றம் போக பயமாக இருக்கிறது . அங்கேயும் நடைமுறை சரியில்லாத நிலை .


வைகுண்டேஸ்வரன் V
டிச 20, 2024 09:50

மக்களின், பக்தர்களின் பாதுகாப்புக்காக சில கட்டுப்பாடுகள் விதித்தால், அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். எல்லாரும் இடிச்சு மோதி யானைகளோட செல்பி எடுக்க போயி ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், "கம்மிகள் அரசு, கோவிலை இந்துக்களிடம் குடு" என்று கூவ வேண்டியது.


அப்பாவி
டிச 20, 2024 07:38

கீழ்க் கோர்ட் உருப்படியா ஏதாவது செஞ்சாலும் சுப்ரிம் கோர்ட் அதை ரத்துபண்ணி நாட்டாமை பண்ணுவதே மரபு. பின்னே எதுக்கு கீழ்கோர்ட்டெல்லாம். மெத்தப் படிச்சவங்களே எல்லா கேசையும் விசாரிக்கலாமே.


karthik
டிச 20, 2024 08:57

கிரிப்டோ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை