உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசியல் சாசனத்தை சுப்ரீம் கோர்ட் மாற்றி எழுத முடியாது; ஜனாதிபதிக்கு காலக்கெடு வழக்கில் மத்திய அரசு வாதம்

அரசியல் சாசனத்தை சுப்ரீம் கோர்ட் மாற்றி எழுத முடியாது; ஜனாதிபதிக்கு காலக்கெடு வழக்கில் மத்திய அரசு வாதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்க, ஜனாதிபதி மற்றும் கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, 'பேப்பர், பேனாவை வைத்து உச்ச நீதிமன்றத்தால் அரசியல் சாசனத்தை மாற்றி எழுத முடியாது' என, மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது.கவர்னர் ரவி ஒப்புதல் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு, தமிழக கவர்னர் ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போடுவதாக, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பர்த்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வு, 'மசோதாக்கள் மீது கவர்னர்கள் ஒரு மாத காலத்திற்குள்ளும், ஜனாதிபதி அதிகபட்சம் மூன்று மாத காலத்திற்குள்ளும் முடிவு எடுக்க வேண்டும்' என்று தீர்ப்பளித்தது.இந்த தீர்ப்பு குறித்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினார்.இந்தக் கடிதம் மனுவாக மாற்றப்பட்டு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அமர்வு விசாரித்து வருகிறது.ஏற்கனவே நடந்த விசாரணையின் போது, மனு மீது, மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.'ஜனாதிபதி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும், உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பிலேயே விரிவான பதில் இருப்பதால், இந்த மனுவை விசாரிக்க தேவையில்லை' என, தமிழக மற்றும் கேரள அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தன.அவசியம் இல்லை இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என, தமிழக, கேரள தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.இதை தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வெங்கட்ரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா முன்வைத்த வாதம்:உச்ச நீதிமன்ற தீர்ப்பால், அரசியலமைப்பின் செயல்பாடுகளில் ஏதேனும் பிரச்னைகள் எழுந்தால், அது தொடர்பாக விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு ஜனாதிபதி கடிதம் எழுத முடியும். அதற்கான அதிகாரம் அவருக்கு உள்ளது.தமிழக அரசின் மனு மீது, உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பொறுத்தவரை, கவர்னர் மற்றும் ஜனாதிபதி எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த அரசியலமைப்பு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.அதனால் தான், ஜனாதிபதி இந்த கடிதத்தை எழுதி உள்ளார். நீதிமன்ற வழிகாட்டுதலை எதிர்பார்ப்பது தான் ஜனாதிபதியின் நோக்கம். எனவே, இது விசாரணைக்கு உகந்தது தான்.மேலும், ஒரு மசோதா மீது முடிவெடுக்க குறிப்பிட்ட காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்திருக்கிறது. அவ்வாறு உச்ச நீதிமன்றத்தால் செய்ய முடியுமா? அதற்கான அதிகாரங்கள் என்ன என்று தான் ஜனாதிபதி கேட்டிருக்கிறார். இதற்கு, உச்ச நீதிமன்றம் தாராளமாக பதிலளிக்கலாம்.தீர்ப்புக்கு எதிரானது இது, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு எதிரானது என்ற கண்ணோட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்.மேலும், முந்தைய தீர்ப்பின் வாயிலாக சட்டசபை மற்றும் பார்லிமென்டின் அதிகாரங்களை உச்ச நீதிமன்றம் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறது.அதாவது, கையில் பேப்பர் மற்றும் பேனாவை எடுத்துக்கொண்டு அரசியல் சாசனத்தை திருத்தும் அளவிற்கு உச்ச நீதிமன்றம் சென்று இருக்கிறது.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.நேற்றைய அலுவல் நேரம் முடிந்ததை அடுத்து, வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இன்று மீண்டும் விசாரணை நடக்கிறது.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

ManiMurugan Murugan
ஆக 20, 2025 22:59

இனி தேர்தல் நடத்தி எதற்கு பணத்தை செலவு செய்ய வேண்டும் நீதிமன்றமே அதுவும் உச்சநீதிமன்றமே எல்லா வேலையும் காசு வாங்கிக் கொண்டு செய்யும் தேங்கி கிடக்கும் வழக்குகளை குப்பை யில் போடும் எனக்கு ஒரு வேண்டுகோள் முக்கியமான மசோதா க்கள் விவாதம் வரும் போது நீதிபதிகளை அழைத்து பதில் சொல்ல சொல்லுங்கள் எதிர்கட்சிகளின் பித்தலாட்டத்தைப் பார்க் கட்டும் பாராளுமன்றத்தில் வழக்குகள் முடித்து வைக்க காலக்கெடு சட்டம் இயற்றுங்கள் நீதிமன்றம் என்ன செய்கிறது என்று பார்ப்போம்


Anbuselvan
ஆக 20, 2025 17:08

இவர்களே புதுப்புது சட்ட விதிகளை கொண்டு வந்தால் அப்புறம் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகம் என்கிற போரவையில் புகுந்து கொண்டு தங்கள் இஷ்டப்படி கையில் தடியை எடுக்க கூடாது.


panneer selvam
ஆக 20, 2025 16:59

It is interestingly a constitutional issue . Whether Supreme Court could make a law or give a command an order to President / Governor to comply their instruction . Genuinely, Justice Mahadeven bench has overstepped their authority . In our constitution all three judiciary , utive and legislature have equal authority and responsibility . Each one could check others on any abuse of authority but not boss over others. Supreme court can not make a law or give a command to President to obey their rulings. SC can only request to others to reconsider their stand on that issue example NEET . It is the SC who asked government to make a law to regulate the admission process in medical collages aiming to stop illegal donation to private colleges . Strangely both Tamilnadu and Kerela governments did not argue on merit of the judgement , just washed their hands stating that judgement itself will clarify their stand.


K.Uthirapathi
ஆக 20, 2025 16:08

கார்த்திக் மாதேஸ்வரன் எந்த ஒரு அவைத்தலைவரின் முடிவில் கூட, நீதிமன்றம் தலையிட முடியாது. ஜனாதிபதி, ஆளுனர்கள், அவைத்தலைவர்கள் ஆகியோருக்கு, நீதிமன்றங்கள் ஆலோசனைகள் மட்டுமே வழங்க முடியும். உத்தரவிட முடியாது. இது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட மன்றங்களும், பாராளுமன்றமும் கொண்டு வரும் சட்டங்களின்படி நீதிமன்றங்கள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும். சட்டங்கள் தொடர்பாக, ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறலாம்.


vivek
ஆக 20, 2025 18:31

மாதேஷ்கு புரியாது...அது இருநூறு கருத்து பார்ட்டி


K.Uthirapathi
ஆக 20, 2025 16:08

கார்த்திக் மாதேஸ்வரன் எந்த ஒரு அவைத்தலைவரின் முடிவில் கூட, நீதிமன்றம் தலையிட முடியாது. ஜனாதிபதி, ஆளுனர்கள், அவைத்தலைவர்கள் ஆகியோருக்கு, நீதிமன்றங்கள் ஆலோசனைகள் மட்டுமே வழங்க முடியும். உத்தரவிட முடியாது. இது அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்ட மன்றங்களும், பாராளுமன்றமும் கொண்டு வரும் சட்டங்களின்படி நீதிமன்றங்கள் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும். சட்டங்கள் தொடர்பாக, ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறலாம்.


Mahendran Puru
ஆக 20, 2025 15:58

அந்த வட போச்சே நிலைமையில் ஆரிப் கானும் ஆர் என் ரவியும். குடிச்ச கொடுத்தால் து ஜ பதவி கிடைக்கும் என்று பார்த்தார்கள். பரிதாபம். கவர்னர்கள் வேற்று கிரக வாசிகளோ எதிரிகளோ அல்ல என்று வாதிட்டது மத்திய அரசு, உச்ச நீதி மன்றத்தில். இந்த படிப்பினையை அவர்கள் இருவருக்கும் இன்றளவும் தரவில்லை மத்திய அரசு.


Barakat Ali
ஆக 20, 2025 14:44

இந்திய உச்சமன்றம் தேசவிரோதிகளால் இயக்கப்படுகிறதா ????


panneer selvam
ஆக 20, 2025 16:45

Have patience please , no need to rush your anger on this case . Let SC hear all the arguments and let them do proper analysis the facts to deliver the proper judgement


திகழ்ஓவியன்
ஆக 20, 2025 14:15

THE ONE AND ONLY STALIN , இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சி மாநிலங்கள் பாராட்டுகின்றன


vivek
ஆக 20, 2025 16:06

சத்தியமா சிரிக்க முடியல திகழ் .போதும்..போதும்


Karthik Madeshwaran
ஆக 20, 2025 14:06

இங்கே ஜனாதிபதிக்கும் கவர்னருக்கும் மாநில அரசு இயற்றும் மசோதாவில் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயித்தால் என்ன தவறு? இங்கே தவறு என்று கத்தி கதறுபவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால் எல்லாம் பாஜக கட்சியின் அடிமைகள் தான். காரணம் இதுபோன்ற சிக்கல்கள் எல்லாம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தில் மட்டுமே நடக்கிறது. பாஜக கட்சி ஆளும் மாநிலத்திற்கு எல்லாம் உடனடியாக ஒப்புதல் கிடைக்கிறது.


Anand
ஆக 20, 2025 15:02

பாஜக கட்சி அடிமைகள் என்றால் நீ அந்நிய மதமாரி எச்சம், என்னமோ பெரிய யோக்கியனை போல பேசுகிறாய், ஒரு மாநிலம் தனது இஷ்டத்திற்கு எதுவேண்டுமானாலும் நிறைவேற்றலாம் அதை கவர்னரும், ஜனாதிபதியும் வாய் மூடி அனுமதிக்கணும்... திருப்பி கேள்வி கேட்டால் எரியுதோ?


Chandradas Appavoo
ஆக 20, 2025 13:53

உண்மையான கருத்து.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை