உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்: ஜனாதிபதி ஒப்புதல்

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய்: ஜனாதிபதி ஒப்புதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் கன்னா, மே 13 அன்று ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து தனக்கு அடுத்ததாக, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பொறுப்புக்கு மூத்த நீதிபதி பி.ஆர். கவாயின் பெயரை சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்தார். இந்த பரிந்துரை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cj71drzh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேவால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை நியமிப்பதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து உள்ளார். அவர் மே 14 அன்று பதவியேற்க உள்ளார். அரசியலமைப்பு அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில் கவாய் நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அந்த அறிக்கைியில் அமைச்சர் கூறியுள்ளார். தற்போது, சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதியாக இருக்கும் கவாய், மே 14 முதல் தலைமை நீதிபதியாக பணியை தொடர உள்ளார்.இவர் , இந்தாண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற உள்ளதால், சுமார் 6 மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Chandrasekaran
ஏப் 30, 2025 09:12

சந்திர சூட் கவர்னர் கேசுல மாட்டாம நேர்மையா பேசித் தீதத்துக்கங்கன் சொல்லிட்டு தப்பிச்சிட்டாரு. சட்ட சிக்கலுக்குள்ள மாட்டாமபோயிட்டாரு. நடப்பு மாட்டினு மனசாட்சிய சக நீதியரசர்களுக்காக மூடி வைச்சுகிட்டாரு. புதுசா வரப்போறவரு எப்படி நடந்துப்பாரு. அரசியல்வாதிகள் நீதித்துறையே காணாத பாயிண்டல்லம் தேடுது. அரசு அதிகாரிகள் கோப்புல கெப்ட் இன் அபயன்ஸ்னு குறிப்பெழுதி பரண்ல வைச்சிடுவாங்க.


அப்பாவி
ஏப் 30, 2025 07:19

இதெல்லாம் ஒரு நியூஸ். அம்மா இருக்காங்கன்னு காட்டிக்கவா? இதெல்லாம் தினசரி வேலை தானே? இனிமே எழுந்தார். டீ குடிச்சார் நு கூட செய்தி வரும்.


c.mohanraj raj
ஏப் 30, 2025 07:14

இனிமேலாவது உச்ச மன்ற தீர்ப்புகள் நன்றாக இருக்கட்டும் போன முறை மிகப் படுகேவலமாக இருந்தது தமிழக மந்திரிகளின் தீர்ப்பால்


V Venkatachalam
ஏப் 29, 2025 21:48

இவர் 500 ரூ நோட்டுகள் மதிப்பு இழப்பு விஷயத்தில் அரசு செய்தது சரி என்றும் அது நிர்வாக காரணங்களினால் மட்டுமே இருக்கவேண்டும் என்று தீர்ப்பு அளித்தது மற்றும் பிராசாந்த மூனுக்கு ரூ 1 அபராதம் விதித்தது எல்லாம் எதிர் கட்சிகளுக்கு கரி பூசிய Land mark தீர்ப்புகள். வரும் காலங்களில் தேச நலனுக்கு வலு சேர்ப்பார் என்று நம்பலாம்.


சமீபத்திய செய்தி