உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலாக்கத் துறை வரம்பு மீறுகிறது: உச்ச நீதிமன்றம்

அமலாக்கத் துறை வரம்பு மீறுகிறது: உச்ச நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியோருக்கு சட்ட ஆலோசனை வழங்கிய மூத்த வழக்கறிஞர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியதற்காக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமலாக்கத் துறை வரம்பு மீறி செயல்படுவதாக கண்டிப்புடன் தெரிவித்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிக்கியவர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கிய மூத்த வழக்கறிஞர்கள் அரவிந்த் தத்தார் மற்றும் பிரதாப் வேணுகோபாலுக்கு அமலாக்கத் துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியது. இது வழக்கறிஞர்களின் சுதந்திரத்தில் இடையூறு ஏற்படுத்துவது போன்றது என புகார் எழுந்தது. இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சந்திரன் அமர்வு தாமாக முன் வந்து விசாரித்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தேபோது, ''வழக்கறிஞர்களுக்கும் அவர்களது கட்சிக்காரர்களுக்கும் இடையிலான தொடர்பு என்பது உரிமை அடிப்படையிலானது. அப்படி இருக்கும்போது, கட்சிக்காரருக்கு சட்ட ஆலோசனை வழங்கியதற்காக எப்படி சம்மன் அனுப்பலாம். அமலாக்கத்துறை வரம்பு மீறியிருப்பதால் வழிகாட்டுநெறிமுறைகள் வகுக்க வேண்டும்,'' என தலைமை நீதிபதி கவாய் வலியுறுத்தினார். அப்போது, அரசுத்தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, 'சட்ட ஆலோசனைகள் வழங்கியதற்காக வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்பவில்லை. பொய்யான கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விசாரணை அமைப்புக்கு அவப்பெயர் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்' என, வாதிட்டனர். இதை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 'அமலாக்கத் துறை சம்மன் அனுப்புவதை ஒருபோதும் ஏற்க முடியாது. குறிப்பாக சட்ட ஆலோச னைகள் வழங்கியதற்காக சம்மன் அனுப்புவதெல்லாம் ஆபத்தான முன்னுதாரணமாகி விடும். இது தொடர்ந்தால் வருங்காலத்தில் வழக்கறிஞர்களால் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் சட்ட ஆலோசனைகள் வழங்க முடியாமல் போய்விடும்' என்றனர். மீண்டும் குறுக்கிட்ட அட்டர்னி ஜெனரல், ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாக வைத்து இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருப்பதாக வாதிட்டார். எனவே, அந்த செய்திகளின் அடிப்படையில் நீதிமன்றம் எந்த முடிவையும் எடுக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி கவாய், ''டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் செய்திகளை பார்ப்பதில்லை. 'யு டியூப்' பேட்டிகளையும் காண்பதில்லை. கடந்த வாரம் சில திரைப்படங்களை மட்டுமே பார்த்தேன். அடிப்படையில் நாம் அனைவரும் வழக்கறிஞர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, வழக்கறிஞர்கள் நலன் சார்ந்த விவகாரத்தில் முரண்பட்டு நிற்கக் கூடாது,'' என்றார். இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன், மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங் உள்பட இதில் தொடர்புடைய அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பி, விரிவான பதிலை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஜூன் 20ம் தேதி அமலாக்கத் துறை, அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில், வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்பக் கூடாது என தெரிவித்திருந்தது. அப்படி சம்மன் அனுப்ப வேண்டுமெனில் துறை தலைவரிடம் முன் அனுமதி பெறுவது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Narayanan
ஜூலை 23, 2025 13:21

இப்படி சொல்லி சொல்லியே அந்தத்துறையினரை நலிவடையச் செய்கிறது இந்த உச்சநீதிமன்றம். அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டால் நிறைய லஞ்ச லாவண்யத்தை வெளியே கொண்டுவந்து நாட்டின் வலிமையை கூட்டலாம். அவர்களுக்கு உறுதுணையாக நீதிமன்றம் செயல்பட்டால் நல்லது. இப்படி அந்த துறையை பயப்படுத்தி வைத்தால் நீதிபதிகளின் லஞ்ச செயல்பாடுகள் நன்றாக நடக்க உதவும் என்று நினைக்கிறதோ நீதிமன்றம் .


சிந்தனை
ஜூலை 22, 2025 23:09

உண்மையில் நீதிபதிகள் யோக்கியர்கள் என்றால் சம்பளம் வாங்காமல் வேலை செய்யட்டும் முதலில் பிறகு ஊருக்கு அறிவுரை சொல்லட்டும்


சிந்தனை
ஜூலை 22, 2025 23:08

குற்றவாளிகளை பாதுகாக்க நீதிமன்றம் இருக்கும் வரை யாரும் குற்றவாளிகளை தண்டித்து விட முடியாது அதற்காக எழுதப்பட்ட சட்டம் தன் கடமையை செய்யும் யாராலும் தடுக்க முடியாது இதுதான் கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் நம் நாட்டிற்கு செய்த சட்டத்துறை


c.mohanraj raj
ஜூலை 22, 2025 14:47

கடுமையான குற்றவாளிகளுக்கு நீதிபதிகள் சரியான வக்கீல்கள் மூலம் ஜாமீன் கொடுக்கின்றார்கள் பிறகு அந்த குற்றவாளிகள் தலைமறைவாகி விடுகின்றார்கள் சட்டத்தை திருத்தி ஜாமீன் கேட்ட வாக்கிலே உள்ளே தள்ளினால் சரியாகிவிடும்


R.RAMACHANDRAN
ஜூலை 22, 2025 12:37

இந்த நாட்டில் வழக்கறிஞ்சர்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நன்னடத்தை கோட்பாடுகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு அவர்கள் சம்பாதனைக்காக பொய்யுரைகள் செய்து நீதிமன்றங்களை ஏமாற்றி சட்டம் மற்றும் அரசமைப்பு ஆகியனவற்றிற்கு விரோதமாக தீர்ப்பு வழங்க கோருவதை நீதி மன்றங்கள் அது அவர்களுடைய உரிமை என அவர்கள் கேட்டவாறு தீர்ப்புகளை ஏழைகள் மற்றும் நேர்மையானவர்கள் பாதிக்கும் விதத்தில் தீர்ப்புகள் வழங்கி நீதி மன்றங்களின் பக்கம் அவர்கள் தலை காட்டக் கூடாது துரத்தப்படுகின்றனர்.இது குறித்து ஆதார பூர்வமாக புகார்கள் செய்தால் இந்திய தலைமை நீதிபதிகள் கண்டும் காணாமல் சென்று கொண்டுள்ளனர்.


venugopal s
ஜூலை 22, 2025 12:03

உச்ச நீதிமன்றத்துக்கு மட்டும் அதிகாரம் இருந்திருந்தால் மத்திய பாஜக அரசை இந்நேரம் டிஸ்மிஸ் செய்து இருப்பார்கள்!


venugopal s
ஜூலை 22, 2025 12:03

உச்ச நீதிமன்றத்துக்கு மட்டும் அதிகாரம் இருந்திருந்தால் மத்திய பாஜக அரசை இந்நேரம் டிஸ்மிஸ் செய்து இருப்பார்கள்!


ஆரூர் ரங்
ஜூலை 22, 2025 10:47

கோர்ட் தான் உச்சம். அரசு அதற்கு அடங்கி நடக்க வேண்டும் போன்ற தீர்ப்புகளும் வரலாம். கலீஜ்யம் .கலிகால ராஜ்யம் .


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூலை 22, 2025 11:34

கலிகால ராஜ்ஜியம்


RAAJ68
ஜூலை 22, 2025 08:23

சுப்ரீம் கோர்ட் என்ன இந்தியாவுக்கு போலீசா. அரசு சார்ந்த துறைகளை சுதந்திரமாக செயல்பட விடாமல் வரம்பு மீறி செயல்படுவது உச்ச நீதிமன்றம். கொள்ளையர்களுக்கும் திருடர்களுக்கும் குற்றம் செய்பவர்களுக்கும் துணை போகும் மன்றமாக உள்ளது


சுந்தர்
ஜூலை 22, 2025 07:58

வரம்பு மீறுவது அவங்களா இல்ல நீங்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை