உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.தமிழகம் முழுவதும் பல்வேறு பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டு இருந்தது.இந்த உத்தரவை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கட்சி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 25) சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடிக்கம்பங்களை அகற்றுமாறு ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்து 4 வாரம் காலத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.4 வாரத்திற்கு பிறகு, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். அப்போது நீதிபதிகள் விரிவான விசாரணை நடத்தி, ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்துள்ள தடை குறித்து தீர்ப்பு அளிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Padmasridharan
ஆக 26, 2025 12:32

அதான் போஸ்டர்ஸ் மூலமா தெரு தெருவுக்கு ஒட்டிடறாங்களே


பேசும் தமிழன்
ஆக 26, 2025 09:00

அது தானே பார்த்தேன். நாட்டிற்கு நல்லது நடந்தால் உச்ச நீதிமன்றத்துக்கு பொருக்காதே.. கம்மிகள் கட்சி நாட்டில் இல்லாமலே போய் விட்டது.. இண்டி கூட்டணி ஆட்கள் கொடுப்பதை யாசகம் பெற்றுக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களது கட்சி கொடியை மட்டுமா நீதிமன்றம் அகற்ற சொன்னது.. சரி சரி....கட்சி கரைந்து போய் விட்டது.. கொடிக்கம்பமும் இல்லையென்றால்.. நமது கட்சி இருந்ததையே மக்கள் மறந்து விடுவார்கள் என்ற உங்களது கவலை தெரிகிறது !!!


D Natarajan
ஆக 26, 2025 04:44

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரையும் பதவி நீக்கம் செய்யவேண்டும். அறிவிலிகள் நிறைந்து உள்ளது. புதிய நீதிபதிகள் நேர்மையான முறையில் தேர்வு செய்யப்படவேண்டும்


அப்பாவி
ஆக 25, 2025 21:38

நாடு உருப்படாம போறதுக்கு காரணம் தெரிஞ்சு போச்சு


naranam
ஆக 25, 2025 19:04

பெயரை மாற்றி விடலாமோ!


Modisha
ஆக 25, 2025 18:39

எல்லா நல்ல தீர்ப்புக்கும் இடைக்கால தடை இங்கே கிடைக்கும் என்று போர்டு மாட்டிக்கொள்ளலாம் .


என்றும் இந்தியன்
ஆக 25, 2025 17:32

வேலையத்த வெட்டிப்பயல் என்ன செய்வானோ அச்சு அசலாக அதை செய்கின்றது இந்த சப்புற கோர்ட். 5.92 கோடி வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றது இந்தியாவில் உள்ள கோர்ட்டுகளில் அதை முடிக்க வக்கில்லை????எப்போ பார்த்தாலும் இடைக்கால தடை வழக்கு தள்ளிவைப்பு ஜாமீன் கொடுப்பது இது ஒன்றே செய்து கொண்டு வருகின்றது இந்த அநீதிமன்றங்கள்???எப்போ தான் இந்தியவிற்கு இந்த மோசமான இடங்களிலிருந்து விடுதலை கிடைக்குமோ???


Priyan Vadanad
ஆக 25, 2025 16:59

உச்ச நீதிமன்றத்துக்கு சில்லறை வழக்குகளோ அல்லது தடையுத்தரவு பெறும் வழக்குகளோ வரக்கூடாது என்கிற விதிமுறை உருவாக்கப்படவேண்டும். அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களுக்கே மறு ஆய்வு செய்துகொள்ள வழிகாட்டுதல் கொடுக்கப்படவேண்டும். தெருநாய்கள் பெரும்பேய்கள் வழக்குகளையெல்லாம் உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளக் கூடாது.


Priyan Vadanad
ஆக 25, 2025 16:51

உச்சத்தடை மன்றத்திலே - கொடி கட்சித்தடை வந்திடவே - எலு மிச்சப்பழ முகத்தாயே - வரம் அருள்வாயே


Kannan Chandran
ஆக 25, 2025 16:44

முன்னர் ஊர் பஞ்சாயத்து ஒன்று இருந்தது, தண்டனை முன்ன பின்ன இருந்தாலும் உடனே தீர்ப்பு வழங்கிவிடுவர், இவர்கள் அதை முற்றிலும் ஒழித்து பணம் இருந்தால் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்வரை வெவ்வேறு நீதிமன்றங்களுக்கு செல்லலாம் என வழி உண்டாக்கி கொடுத்து உள்ளனர்


சமீபத்திய செய்தி