உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலீஜியம் உறுப்பினராகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா

கொலீஜியம் உறுப்பினராகிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த அபய் எஸ்.ஓகா சமீபத்தில் ஓய்வுபெற்றார். இதனால், உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.உச்ச நீதிமன்றம் மற்றும் 25 உயர் நீதிமன்றங்களில் ஏற்படும் காலியிடங்களை நிரப்பும் கொலீஜியம் அமைப்பிலும் நீதிபதி ஓகா இடம் பெற்றிருந்தார். இவர் ஓய்வுபெற்றதை அடுத்து, கொலீஜியம் அமைப்பின் உறுப்பினராக, உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாவது மூத்த நீதிபதியாக உள்ள நீதிபதி நாகரத்னா நியமிக்கப்படுகிறார். இதையடுத்து, கொலீஜியத்தில் தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், மகேஸ்வரி மற்றும் நாகரத்னா ஆகியோர் இடம் பெறுகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் உள்ள காலியிடங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்களில் முக்கிய நியமனங்களை மேற்கொள்வதற்கும், தலைமை நீதிபதி கவாய் இன்று தனது முதல் கொலீஜியம் கூட்டத்தை கூட்டுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Arunkumar Padmanabhan
மே 26, 2025 07:18

I was thinking the exactly the same. I had observed few times she was odd person out...


Arul Narayanan
மே 26, 2025 05:47

எப்போதும் மற்ற நீதிபதிகளின் தீர்ப்புக்கு மாறுபடும் இவர் கொலிஜியத்திலும் மாற்று கருத்துக்களை முன் வைக்கலாம். விளைவு எப்படி என்று ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.


Kasimani Baskaran
மே 26, 2025 04:03

தேங்கிக்கிடக்கும் வழக்குகளை முடித்து வைக்க இனியாவது கோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடும் கொடிய பிரிட்டிஷ் கால அடிமை முறையை விட்டொழிக்க வேண்டும். கொலீஜியம் முன்வருமா? காலத்துக்கேற்ப அவர்கள் மாறவில்லை என்றால் விரைவில் தனியார் கோர்ட்டுகள் கூட வர வாய்ப்பு உண்டு. செயற்கை நுண்ணறிவு தொழில் நுணுக்கத்தை வைத்து - நீதிபதிகள் இல்லாமலேயே சிறப்பான நீதி வழங்க முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை