உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை பயன்படுத்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான விருதை பயன்படுத்த டி.எம்.கிருஷ்ணாவுக்கு தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதை பயன்படுத்த, பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இடைக்காலத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.கர்நாடக இசை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு, மெட்ராஸ் மியூசிக் அகாடமி சார்பில், எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரிலான சங்கீத கலாநிதி விருது மற்றும் ரொக்கப்பரிசு நேற்று வழங்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=geb5v6wu&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்னதாக இந்த விருது அறிவிக்கப்பட்டதும், முன்னணி கர்நாடக இசைக்கலைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'எம்.எஸ்.சுப்புலட்சுமியை இழிவாகப் பேசிய கிருஷ்ணாவுக்கு, இந்த விருதை வழங்கக்கூடாது' என்று கூறிய முன்னணி இசைக்கலைஞர்கள் சிலர், ஏற்கனவே தாங்கள் பெற்ற மியூசிக் அகாடமி விருதை திரும்பக் கொடுத்தனர்.இந்நிலையில், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன், தன் பாட்டி பெயரில் கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஒரு நீதிபதி கொண்ட பெஞ்ச், முதலில் விருது வழங்க தடை விதித்தது. மேற்கொண்டு விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விருது வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது.இந்நிலையில், சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவருடைய மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முடிவில், விருதை பயன்படுத்த கிருஷ்ணாவுக்கு தடை விதித்தனர்.நீதிபதிகள் அளித்த உத்தரவில், சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரில் பயன்படுத்த கிருஷ்ணாவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது பெற்றவர் என்று டி.எம்.கிருஷ்ணா பிரகடனப்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டனர். தொடர்புடைய அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ஆரூர் ரங்
டிச 17, 2024 12:32

கிருஷ்ணாவுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் நபர்களைத் தவிர வேறெந்த பிரபல வித்வானும் அவருக்கு ஆதரவாக பேசவில்லை. இதிலிருந்து அவர் தனது தவறான வழிகளால் தனிமைப்படுத்தப் படுகிறார் என்பது விளங்குகிறது. இந்த 30 ஆண்டுகளில் அவர் ஒரே ஒரு தாழ்த்தப்பட்ட இன மாணவரையாவது உருவாக்கி அவரை அகாடமி மேடையேற வைத்ததுண்டா? ஆக யாரையோ திருப்திப் படுத்த நாடகம் நடக்கிறது. அம்மா எம் எஸ் அவர்கள் மீது நல்லபிப்பிராயமில்லாத கிருஷ்ணா அவர் பேரிலுள்ள விருதை /வாங்கியது/ அவருக்குத்தான் அசிங்கம்.


ஆரூர் ரங்
டிச 17, 2024 12:22

குறிபிட்ட சாதியினர் தவிர மற்றவர்களுக்கு அகாதமி வாய்ப்பளிக்க மறுக்கிறது எனக் கூறி பத்து வருடங்களாக கிருஷ்ணா அங்கு பாடவேயில்லை. இப்போ அவர் விருது வாங்கும் ஆண்டிலும் அகாடமி 32 மாலை நேர முக்கிய TICKETED கச்சேரிகளிலும் மற்றசாதியினர் யாருக்கும் பாடும் வாய்ப்பளித்தாக செய்தியில்லை. கிருஷ்ணாவுக்கு ரோஷம் இருந்தால் விருது வாங்க மறுத்திருக்க வேண்டும். ஆக கொடுத்த அகாடமி, வாங்கியவர் இருவருக்கும் வெட்கமில்லை.


Sankaran Natarajan
டிச 16, 2024 22:19

அந்த கிருஷ்ணா கொஞ்சமேனும் ரோஷமுள்ளவராய் இருந்தால் எனக்கு இந்தப்பட்டமே வேண்டாம் என்று கூறி மறுத்திருப்பார்


கிஜன்
டிச 16, 2024 21:53

கலியுகத்துல ....திறமையைவிட .... புருமூர்த்தி அங்கீகாரத்திற்குத்தான் மதிப்பதிகம் ...... என்று எதோ ஒரு இதிகாசம் கூறுகிறதாம் ....


ManiK
டிச 16, 2024 21:39

நாசமாய் போன ஹைகோர்ட் நீதி. சுப்ரீம் கோர்ட் விருதை திரும்ப்பெற்று ம்யூசிக் அகாடமிக்கு பெரிய அபராதம் விதிக்கவேண்டும். இந்தியரகள் முழுமையா அதிகபிரங்கி டிம் கிருஷ்ணாவை புரக்கனிக்க வேண்டும்.


nv
டிச 16, 2024 21:28

மிக தாமதமாக வந்த சரியான தீர்ப்பு. இந்த சிறந்த கர்நாடக இசை பாடகர் அவருடைய இசையின் உச்சத்தைத் தொட்ட MS அம்மாவை பற்றி பல தவறான கருத்துக்களை கூறியவர். இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு MS பெயரில் விருது வாங்குகிறார்? கேவலமான ஒரு செயல்.. அதுமட்டுமல்ல இந்த ஆள் ஒரு திராவிட சித்தாந்த பேர்வழி. கர்நாடக சங்கீதத்தையும் சனாதன சிந்தனையும் பிரிக்க முடியாது அனால் இந்த ஆள் சனாதன கொள்கையை வெறுப்பவர். இந்த ஆள் கடவுள் கொடுத்த திறமையை வைத்துக்கொண்டு அந்த கடவுளையே அவமதிப்பது கேவலம். இவரை கர்நாடக சங்கீத ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும்..


hariharan
டிச 16, 2024 20:51

மூஞ்சிய பார்த்தாலே டாஸ்மாக் வாடை அடிக்குது.


Anantharaman Srinivasan
டிச 16, 2024 20:42

சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது நேற்றே டி.எம்.கிருஷ்ணாக்கு வழங்கப்பட்டு விட்டது. Supreme court இன்று தடை போட்டுள்ளது, குதிரை தப்பி போனபின் குதிரை லாயத்தை பூட்டுவது போலுள்ளது.


Srinivasan K
டிச 17, 2024 08:19

with a condition, he cannot use the title anyway what is the point to glorify


அப்பாவி
டிச 16, 2024 20:20

குடுத்தவனை உட்டுட்டாங்க.


SIVA
டிச 16, 2024 20:19

இந்த நபர் எம் எஸ் SUBBULAKHMI அவர்களை தனிப்பட்ட முறையில் சிவாஜி கிருஷ்ணன் மொழியில் விமர்ச்சனம் செய்து உள்ளார் , அதற்கு பின்பும் அவர்களின் பெயரில் உள்ள விருதை ஏற்று கொள்ள தயாராக உள்ளார் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை