வாசகர்கள் கருத்துகள் ( 10 )
உண்மை இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்மெட் 70 மக்கள் தேவை இல்லை என்றுதான் நினைக்கிறார்கள் தேவை படுகிறவார்கள் அது அவரவர் விருப்பதிகேட்ப போட்டு கொள்ளலாம் என்ற சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் ஆக இருந்தால் அதை நிறை வேற்றுவர்கள் இவர்கள் அப்படி இல்லையே நாமலும் அப்படி இல்லையே என்ன செய்வது அழுகைவேண்டியதுதான்
இனசூரன்ஸ் கம்பெனிகள் பாலிசி எடுப்பவருக்கு எந்த நன்மையோ சலுகையோ தருவதில்லை. அதைவிட இழப்பீட்டு தொகை வழங்க மறுக்கவும், வழக்குகளை வருடக்கணக்காக இழுத்தடிக்கவும் அதிக பணம் கொட்டி கொடுத்து பெரிய வக்கீல்களை நியமிக்கின்றன. இவர்களால் விபத்துகளில் சிக்கும் சாதாரண மக்களுக்கு எந்த இழப்பீடும் கிடைப்பதில்லை. அமெரிக்கா போன்ற முதலாளித்துவ நாடுகளில் கூட இந்தியாவைப்போல, இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஏமாற்றுவதில்லை. இந்திய இன்சூரன்ஸ் கமபெனிகளில், சரியாக ப்ராக்டீஸ் செய்ய முடியாத கைராசியற்ற டாக்டர்களை டெக்னிகல் மதிப்பீட்டாளர்களாக நியமிப்பதால் அவர்கள் மற்ற வெற்றிகர டாக்டர்களின் நர்சிங்ஹோம் தரும் பில்களை அடாவடியாக தணிக்கை என்ற பெயரில் 40 - 50% வரை இதில் இன்சூரன்ஸ் கமபெனி பாலிஸி படி 20% பில் தொகையில் குறைத்துதான் அப்ரூவ் செய்கின்றனர். நோயாளி இன்சூரன்ஸ் எடுத்தும் மினிமம் 40% பில் தொகையில் , கையை விட்டு கட்ட வேண்டி வரும். இந்தளவு முறைகேடு அரசு தரும் மருத்துவ காப்பீடு அல்லது தனியார் வாங்கும் காப்பீடு என்று எல்லாவற்றிலும் உள்ளது. இந்தியாவில் வாகன இன்சூரன்ஸ், பெரிய பணக்காரர்களுடைய ஃபாரின் கார்களுக்கும், தனியாரின் 30 லட்ச மதிப்பீடு கார்களுக்கு மட்டும் கிளெய்ம்களை சரியாக செட்டில் செய்கின்றன. மற்றபடி உள்ள கிளெய்ம்களை தனி வக்கீல்கள், இன்சூரன்ஸ் ஏஜண்டுகள், கார்,பஸ்,லாரி, பைக் கம்பெனிகள் கூட்டு சேர்ந்து அவர்கள் விருப்பப்படி, ஒத்துக் கொள்வதோ, ரிஜக்ட் செய்வதோ நடந்து வருகிறது. இது பெரிய நெட் ஒர்க் மாதிரி. இந்தியாவில் இன்சூரன்ஸ் பெரிய முதலைகள். நீதிமன்றங்கள் நன்றாக கண்ணை திறந்து பார்க்கணும். மக்கள் இன்சூரன்ஸ் என்ற ஃபிராடு தொழிலை மதிப்பதே இல்லை.
People taking insurance for their vehicles do not really get a proper understanding of the scope of insurance cover. There is limited coverage for the owner of the vehicle who becomes first party and in accidents caused by other vehicles, third party vehicles if they do not have insurance, the victim has to undergo long ordeal. The third party vehicle owner and driver are legally liable to compensate, which depends on the network. Lok Adalats are held to expedite settlement, but if the parties or their counsels do not use it, regular adjudication takes its own time. These are cases which should be brought within time limits for finalisation by Judiciary. Then only interests of the public will be protected.
போலீஸ், இன்சூரன்ஸ், இவர்களுக்கு நல்ல வேட்டை
சிறு, பெரு நகரங்களின் உள்ளேயேயும், கிராமங்களிலும் தரமற்ற குண்டும் குழியுமாக உள்ள பல சாலைகள் வாகனங்கள் ஓட்டுவதற்கே யோக்கியதை இல்லாத நிலையில் உள்ளனவே... அதுக்கெல்லாம் அரசுக்கு அபராதம் இல்லீங்களா யுவர் ஹானர்... சாலைகளை தரமானதாக பராமரிக்க வக்கில்லை... சும்மா ஹெல்மெட் போடு, இன்சூரன்ஸ் எடுன்னுட்டு வந்துர்றானுங்க...
1996 இல் நடந்த விபத்திற்கு 2025 வர தீர்வு இல்லை பாதிக்கப்பட்ட அவருக்கு காப்பீடு கிடைத்ததா? நல்ல சட்டம்
இந்தியாவில்.காப்பீடு என்பது பிரிமியம் வாங்கி கொட்டிக்கிற வரைதான். இழப்பீடுக்கு ஆயிரம் முறையீடு, சர்டிபிகேட், சாட்சி, சம்மன்னு குடுக்கணும்.
காப்பீடு இன்றி போகும் வாகனங்களின் அது ஒரு பக்கம் போகட்டும் அதற்கு முன்பு விபத்தில் அடி பட்டவருக்கு உரிய முறையில் மருத்துவமனை சிகிச்சை கொடுக்க சீக்கிரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் விபத்தை ஏற்படுத்திய நபர் சரியான முறையில் காப்பீடு கட்டததால் விபத்தில் சிக்கியவருக்கு இன்னும் காப்பீடு பலன் கிடைக்கவில்லை தனியார் காப்பீட்டு பணம் எந்த காரணமும் இன்றி மூன்று வருடங்கள் ஆன பிறகும் காப்பீட்டு பணம் கிடைக்கவில்லை இதையேல்லாம் யார் தட்டி கேட்பது
காப்பீட்டினால் லாபமடைவது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மட்டுமே. விபத்துக்குள்ளானவர்கள் வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்பட்டு அலைய, இன்சூரன்ஸ் ஃப்ராடு செய்பவர்களுடன் சேர்ந்து அந்நிறுவனத்திலுள்ளோர் அடிக்கும் கொள்ளை ஏராளம். அந்த கொள்ளையில் நீதித்துறையின் பங்கு மற்றும் கூட்டு ஒரு இருட்டு உலகம். அந்த பூனைக்கு மணி கட்டுவதை விட்டு, இன்சூரன்ஸ் ஃப்ராடை வளர்க்கவே இந்த அறிவுரை.
26 வருடமா ஒரு காப்பீடு தொகை பெற