உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வழிபாட்டு தலங்களை ஆய்வு செய்ய தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

வழிபாட்டு தலங்களை ஆய்வு செய்ய தடை விதித்தது சுப்ரீம் கோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் ஆய்வு செய்ய தடை விதித்த சுப்ரீம் கோர்ட், இது தொடர்பாக நீதிமன்றங்கள் புதிதாக எந்த வழக்கையும் விசாரிக்கக்கூடாது எனவும் கூறியுள்ளது.ராமர் கோவில் கட்டக்கோரி பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி நாடு முழுவதும் ரத யாத்திரை மேற்கொண்டது பதற்றத்தை ஏற்படுத்தியது. அப்போது பிரதமராக இருந்த காங்கிரசின் நரசிம்மராவ் தலைமையிலான அரசு, வழிபாட்டு தலங்கள் சிறப்புப் பிரிவுகள் சட்டத்தை அமல்படுத்தியது. இதன்படி 1947 ஆக., 15ல் நாடு சுதந்திரம் பெற்றபோது இருந்த எந்த ஒரு வழிபாட்டு தலத்திலும் மாற்றங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டது. மேலும் அதன் மீது மற்றொரு சமூகத்தினர் மீது உரிமை கோரவும் தடை விதிக்கப்பட்டது. அதேநேரத்தில் பாபர் மசூதி - ராமர் கோவில் விவகாரத்துக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்பட்டது.இதற்கிடையே, உ.பி.,யின் வாரணாசி ஞானவாபி வளாகம், மதுரா - கிருஷ்ணர் கோவில் - வாஹி இக்தா மசூதி விவகாரம், சம்பலில் ஷாஹி ஜமா மசூதி ஆகியவை தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டன. முகலாயர்கள் ஆட்சியின்போது மற்றும் படையெடுப்பின் போது அங்கிருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு இந்த மசூதிகள் கட்டப்பட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. இவை குறித்து நீதிமன்றங்களும் விசாரிக்க உத்தரவிட்டு உள்ளன. கடந்த 1991 சட்டத்தின்படி இந்த வழக்குகள் செல்லாது என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.இதற்கிடையே 1991ல் அறிமுகம் செய்யப்பட்ட வழிபாட்டு தலங்கள் சட்டத்தின் சில பிரிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. பா.ஜ.,வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, அஸ்வினி உபாத்யாய் என்ற வழக்கறிஞர் உள்ளிட்டோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய தனி அமர்வு இன்று விசாரித்தது.அப்போது, நீதிபதிகள்,'' மசூதி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் ஆய்வு செய்ய தடை விதிக்கப்படுகிறது. கீழமை நீதிமன்றங்கள், ஐகோர்ட்கள் ஆகியன மசூதியில் ஆய்வு தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது. இது தொடர்பாக புதிதாக எந்த வழக்கையும் விசாரிக்கக்கூடாது' என உத்தரவிட்டு உள்ளனர். மேலும் இந்த மனு குறித்து நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 46 )

ameen
டிச 13, 2024 08:45

வக்ப் போர்ட் உரிமை கொண்டவர்கள் இந்தியர்கள் இல்லாம வெளி நாட்டினாரா? வக்ப் போர்ட் ஒரு இடத்தை எந்தவித ஆதாரமும் இன்றி தன்னிச்சையாக உரிமை கொண்டாட முடியாதே.....


அப்பாவி
டிச 13, 2024 08:32

போன தடவை தலைமை நீதிபதியாயிருந்தவர் போட்ட சட்டத்தை அவர் ரிடையரான பத்தே நாளில் தூக்கி எறிஞ்சிட்டீங்க யுவர் ஆனர்.


TSelva
டிச 13, 2024 07:51

மக்கள் நிம்மதியாக ஒற்றுமையாக வாழ இந்தியா சுதந்திர நாடாக மாறிய போது இருந்த நிலை தொடர வேண்டும். ஆய்வு என்ற பேரில் மற்ற மதத்தவரின் மனங்களை புண்படுத்துவது மனிதாபிமானமற்றது. அது இந்து தர்மத்திற்கே எதிரானது. அதே சமயம் இந்தியா சுதந்திரமான பின்பு அவர்களது வக்ஃப் போர்டுக்கு இந்திய நிலங்களை அவர்களாகவே உரிமை கொண்டாடும் சம்பந்தமாக அளிக்கப்பட்ட உரிமை அழிக்கப்பட வேண்டும். இது ஒரு பகல் கொள்ளை. இதனை அளித்த அ ஆதரிக்கும் அரசியல்வாதி ஒவ்வொருவரும் தேச துரோகிகளாக கருதப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.


J.V. Iyer
டிச 13, 2024 04:55

புரியவில்லையே? அப்படீன்னா முன்னாள், இந்நாள் அரசியல்வாதிகள்மீது உள்ள வழக்குகளையும் விசாரிக்கக்கூடாது என்றும் தீர்ப்பு வருமா? ஒரு மதம் சம்மந்தப்பட்ட வழக்குகளை மட்டும் தடைசெய்வது எந்தவிதத்தில் நியாயம் என்று புரியவில்லை.


Haja Kuthubdeen
டிச 13, 2024 10:29

பல நூறு வருடங்களுக்கு முன்பு முகாலயர் ஆட்சிகாலம் பற்றி நமக்கு தெரியாது.. அதன் பிறகு ஆங்கிலேயர் காலம்.. .பரந்த இந்தியாவில் ஒரு கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில்தான் மசூதியோ சர்ச்சோ கட்டணும் என்ற அவசியம் உள்ளதா? கோவிலை இடிக்கனும் என்று முகாலயர்களோ ஆங்கிலேயர்களோ திட்டம் போட்டிருந்தால் புகழ் பெற்ற பழமையான கலைநயமுள்ள பல்லாயிரக்கணக்கான கோவில்கள் தப்பியிருக்க முடியுமா!!!


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
டிச 13, 2024 13:50

கஜினி முகமது மற்றும் கோரி முகமது இருவரும் இந்தியாவிற்கு இன்ப சுற்றுலா வந்தவர்களா? இந்துக்களுக்கு முஸ்லிம் மதத்தவர் மீது காழ்ப்புணர்ச்சி இருந்திருந்தால் சுதந்திரத்திற்கு பிறகு அனைத்து முஸ்லிம் மதத்தவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பியிருப்பார்கள். இந்து மதம் யாராலும் தோற்றுவிக்கப் படவில்லை. வாழ்க்கை வாழும் முறை தான் இந்து மதம். அனைவரையும் அனைத்து செல்ல சொல்லும் மதம் தான் இந்து மதம். நாடு பிடிக்கும் ஆசையோ அல்லது நிலம் சேர்க்கும் ஆசையோ எப்பொழுதும் இந்து மதத்திற்கு இல்லை. அடுத்த மதத்தவர் அவர்களின் கொள்கைகள் முறைகள் எப்பொழுதும் எந்த இந்துவும் தாழ்வாக பேசத மதம் இந்து மதம். அடுத்த மதத்தில் உள்ள நல்லவைகளை ஈர்த்து கொள்ளும் மதம் இந்து மதம். உலகில் எந்த நாட்டிலும் ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணம் இந்து மதத்திற்கு எப்பொழுதும் இல்லை இனியும் இருக்கப் போவது இல்லை. ஆதியும் அந்தமும் இல்லா அடி முடி காணா மதம் இந்து மதம். உலகில் உயிரினங்கள் தோன்றி மனிதன் தோன்றிய போதே தோன்றிய மதம் இந்து மதம். யுகங்களாக வகைப்படுத்தி மனித பரிணாம வளர்ச்சி காட்டிய மதம் இந்து மதம். பலரது பங்களிப்பால் உருவான மதம் இந்து மதம்.


Bye Pass
டிச 13, 2024 02:36

எங்க வீட்டுக்கருகில் மூன்று பள்ளிவாசல்களில் லவுட்ஸ்பீக்கர் மூலம் ஆசான் அதி காலை முதலே ஆரம்பித்து விடுகிறது ..பெரும்பாலும் சம்பளம் கொடுத்து ஆட்களை நியமிக்கிறார்கள். பண்டிகை காலத்தில் மட்டுமே அனுமதிக்க வேண்டும் ..நூறு ஆண்டுகளுக்கு முன் ஒளிபரப்பிகள் புழக்கத்தில் கிடையாது


Haja Kuthubdeen
டிச 13, 2024 10:41

நூறு ஆண்டுகளுக்கு முன் ஒலி பெறுக்கி மட்டும் அல்ல கார் பஸ் ரேடியோ டிவி நெட் ப்ரிட்ஜ் வாசிங்மெசின் எதுவுமே கிடையாது.. மூன்று பள்ளிவாசலும் உங்கள் வீட்டை சுற்றியே இருக்கு என்பது அன்ட புழுகு...காலையில் சிலநிமிடம் தொழுகை அழைப்பும் ஒருநாளைக்கு 5தடவையும் சிலநிமிடம் மட்டுமே ஒலிபெறுக்கி உபயோகம். மணிக்கணக்கில் பாடலோ மற்ற எதுவும் செய்வதில்லை... முஸ்லிம் காழ்புணர்ச்சி அந்த அளவு உங்கள் மனதில் உள்ளது... நீங்க எவ்வளவுதான் புலம்பினாலும் முஸ்லிம் மதம் வளர்ந்துதான் போகுமே தவிற அழியாது...வெறும் இரண்டு பேர் நம்பி 1400வருடங்களுக்கு முன்பு தோன்றியது..இன்று 55 நாடுகளில் இஸ்லாம் ஆட்சி செய்கிறது.


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 13, 2024 12:55

..... உண்மையை மறைக்க முடியாதுங்க ...... இஸ்லாத்தை விட்டு வெளியேறி நாத்திகர்களாகும் நபர்கள் அதிகமாகிவிட்டனர் ...... காரணம் என்ன ???? ஒன்றுக்கொன்று முரண்பாடான ஹதீசுகள், சுயநலத்துடன் இறைவிருப்பத்துக்குப் புறம்பாக புகட்டப்பட்ட விதிகள் இவைதான் ...... ஆதாரங்களுடன் பல ஆய்வுகள் சொல்கின்றன ......


Rajesh
டிச 12, 2024 23:00

சுப்ரீம் கோர்ட் சட்டத்தை இயற்ற முடியாது ...... மத்திய அரசு இதற்கு பதில் அளித்து நீதி மன்றத்தில் இந்த தடையை நீக்க வேண்டும் ...... பிரச்சனைகளை தீர்க்கத்தான் நீதிமன்றங்கள் உள்ளன .... அதை மூடி மறப்பதற்கு அல்ல


s chandrasekar
டிச 13, 2024 05:50

சபாஷ் சரியான கேள்வி.


Haja Kuthubdeen
டிச 13, 2024 11:50

சட்டம் இயற்றதான் சுப்ரீம் கோர்டுக்கு அதிகாரம் இல்லை..பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாணத்தை செயல் படுத்த உரிமையுண்டு....நரசிம்மராவ் காலத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு...ராமர் கோவிலுக்கு விதிவிலக்கும் இனி சுதந்திரத்திற்கு முன்பிருந்த நிலைதான் நீடிக்கனும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது...


Sultan Ahamed
டிச 12, 2024 22:50

சட்டம் பாரபட்சம் இன்றி தன் கடமையை செய்யட்டும் நாடு மேன்மை பெறும்


Mohan
டிச 12, 2024 22:32

வைகுண்டேஸ்வரன் என்கிற இல்லாத பொய் பெயரை வைத்து திராவிட விடியல் பிரச்சாரம் செய்யும் முஸ்லீம் மதத்தை சேர்ந்த நபர் இந்து மத வெறுப்பாளர் என்பதை அவரது எதிர் வினை கருத்துக்கள் மூலம் தெளிவு படுத்திக்கொண்டே இருக்கிறார். மத வெறி பிடித்தவர்கள் இந்துக்களில் இல்லவே இல்லை. இந்தியாவிற்கு படை எடுத்து வந்த வேறு நாட்டினர் தான் இந்திய மக்களின் மேன்மையை தாங்க முடியாமல் கோயில்களை இடித்து அழித்து மாற்றினர். மேற்காசிய முஸ்லிம்களே ஒத்துக்கொள்ளுகிற விஷயம் இந்தியா இந்து நாடு என்பது தான். எமெர்ஜெண்சியை தவறாக பயன்படுத்தி சட்ட விரோதமாக திருத்தம் செய்த இந்திரா காந்தி யின் வாரிசுகள் இந்தியர்களை ஏமாற்ற சிவப்பு கலர் புத்தகத்தை கையில் ஆட்டி காண்பித்தால் பாட்டி செய்த இமாலய தவறு சரியாகிவிடுமா? உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் முஸ்லீம் ஆதரவு போக்கு அசிங்கம். மற்றவர்களின் மத உணர்வுகளை மதிக்காத பொறுக்காத முஸ்லிம்களுக்கு இந்தியாவில் மட்டும் நீதிபதிகள் சேவகம் செய்வது anagarigam.


Kasimani Baskaran
டிச 12, 2024 21:54

கோவிலை இடித்து பல இடங்களில் மசூதி கட்டப்பட்டதுசரித்திர நிகழ்வு. அதை சரி செய்யவேண்டியது நீதிமன்றத்தின் கடமை.


Haja Kuthubdeen
டிச 13, 2024 12:00

இந்த சரித்திரம் பூகோளம் எல்லாமே அவரவர் இஸ்டத்துக்கு திரிக்கப்பட்டது என்றும் சமயத்தில் உங்க வசதிக்கேற்ப மாற்றி கருத்து போடுகிறார்களே...


orange தமிழன்
டிச 12, 2024 21:35

என்ன சட்டம் சார் உங்க சட்டம்.....


kantharvan
டிச 12, 2024 22:44

காவித்தமிழன்.. சட்டம் ஒரு விளையாட்டு. விளையாடலாமா??


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை