உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜாமின் நீட்டிப்பு கோரிய கெஜ்ரிவால் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜாமின் நீட்டிப்பு கோரிய கெஜ்ரிவால் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி: இடைக்கால ஜாமினை மேலும் 7 நாள் நீட்டிக்க கோரிய டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கமான ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தை நாடும் படி அறிவுறுத்தி உள்ளது.மதுபான முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் அவர் முறையிட்டதைத் தொடர்ந்து ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கியது.இந்நிலையில், உச்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‛ சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல் 7 கிலோ எடை குறைந்துவிட்டதாகவும், மருத்துவ ரீதியாக பல சிகிச்சைகள் எடுக்க வேண்டி உள்ளதால், ஜூன் 7 வரை ஜாமின் நீட்டிக்க வேண்டும்'' எனக்கூறியிருந்தார். இதனை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக உடனடியாக முடிவு எடுக்க முடியாது. தலைமை நீதிபதி உரிய நடவடிக்கை எடுப்பார் என உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், இன்று( மே 29) கெஜ்ரிவாலின் மனுவை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், வழக்கமான ஜாமின் கேட்டு விசாரணை நீதிமன்றத்தை நாடும்படி அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Poongavoor Raghupathy
மே 30, 2024 10:54

Supreme Court must also provide bail for Senthil Balaji for election speeches.


Poongavoor Raghupathy
மே 30, 2024 10:52

Kesariwal his diabetic condition is worsened due to his time in jail.Where is his friend Anna Hazare . What is the use of his education when he is caught in a liquor scam.Kesariwal can be free from his blood sugar only when he lives a clean life.


kalyan
மே 29, 2024 21:34

உடம்பின் சக்கரை அளவு அதிகமானால் சக்கரை நோயாளிகளின் எடை குறையும் . கெஜ்ரிவாலின் எடை 7 கிலோ குறைந்தது அவர் சிறையில் இருக்கும்போது சாப்பிட்டு வந்த இனிப்புகள் மாம்பழம் காரணமாக இருக்கலாம் . எடை குறைந்ததை எடுத்துக்கூறிய அவர் சக்கரை அளவு எவ்வளவு உயர்த்தது என்பதையும் கூற வேண்டும் . பொய்யர்களிடம் இதெல்லாம் அப்படி எதிர்பார்க்க முடியும் ? அண்ணா ஹசாரேயை டெல்லி வரவைத்து போராட்டம் நடத்தி தனக்கு சாதகமாக பயன் படுத்தியவர் அல்லவா?


M Ramachandran
மே 29, 2024 20:44

நம்மூர் பிரதெரஸ் போல் குஞ்சு ரீல் வால். தை தக்க நாடகம் நீதி மன்றத்தில் எடு படவில்லை போலும். 2 ஆம் தேதி யிலுருந்து ஒன்னு ரெண்டு மூணு எண்ணனும் போல இருக்கு


சுந்தர்
மே 29, 2024 18:39

கைதி, முதலமைச்சர், பொய்யர்... இவருக்கு ஜாமீன் கொடுத்ததே தவறு. ம்ம்ம்... அடுத்ததாக என்ன சொல்ல போகிறார்?


RAVINDIRAN B
மே 29, 2024 16:15

ஜனநாயக அரசமைப்புச் சட்டம் என்பது விநோதமான அபாயகரமான ஆயுதம் இதை தனக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்வதில் இந்திய அயோக்கிய அரசியல்வாதிகள் கை தேர்ந்தவர்கள்


Kasimani Baskaran
மே 29, 2024 15:42

பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று ஆரம்பித்தவர்களே இன்று திணறுகிறார்கள். இவர்கள் பகற்கொள்ளை என்று சொல்லுமளவுக்கு மாநில அரசை மொட்டை அடித்து அனைத்தையும் தனியாருக்கு கொடுத்தவர்கள். அனைத்து விதிகளையும் மீறியும் இருப்பதால் ஜாமீன் நீடிப்பு கிடைக்க வாய்ப்பு குறைவு.


ganapathy
மே 29, 2024 15:16

மக்களின் வரியை கொள்ளையடித்து தின்றால் உடல் எடை குறையும். பள்ளிகளின் அருகில் சாராயக்கடைகளை திறக்கத் தோணும். பொதுவில் மொள்ளமாறித்தனமா சிரிச்சுகிட்டே நிறைய பொய் சொல்லத்தோணும். தனது வீட்டில் ஊரான் வீட்டுப்பெண்ணை ஆள் வச்சு அடிக்கத்தோணும். மாட்டிகினா வக்கீலுக்கு ராஜ்ய சபா பதவி கொடுக்கத்தோணும். அவனவச்சு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை லஞ்சம் கொடுத்து செட்டப் பண்ணத்தோணும். பிரதமரை பற்றி பொய்யாக கேவலமா பேசத்தோணும்.


Balasubramanian
மே 29, 2024 15:05

செந்தில் பாலாஜியிடம் சிறிது பாடம் கற்றுக் கொள்ளுங்கள் கேஜ்ரிவால் ஜி


Anand
மே 29, 2024 14:13

தன்னோட உடல் நிலை மிகவும் மோசமாகிவிட்டது எனவே சரணடைய தடை விதிக்கவேண்டும் என கூறி மூக்கில் டூப் சொருகியபடி மீண்டும் மனு அளிப்பான்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை