உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலீஜியம் முறையை எதிர்க்கும் மனு பட்டியலிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு

கொலீஜியம் முறையை எதிர்க்கும் மனு பட்டியலிட சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி : நீதிபதிகளே நீதிபதிகளை தேர்வு செய்யும், 'கொலீஜியம்' முறைக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை, விசாரணை பட்டியலில் சேர்ப்பதற்கு, உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றஙகளில் நீதிபதிகள் நியமனம், இடமாற்றம், பணி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் முடிவு செய்கிறது.உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உட்பட, ஐந்து மூத்த நீதிபதிகள் அடங்கியது தான் கொலீஜியம்.நீதிபதிகளே நீதிபதிகளை நியமிக்கும் இந்த முறைக்கு எதிராக, 2015ல், தேசிய நீதித்துறை நியமன கமிஷன் முறையை உருவாக்கும் சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, தலைமை நீதிபதி, இரண்டு மூத்த நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர், இரண்டு சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு, நீதிபதிகள் நியமனம் தொடர்பாக முடிவு செய்யும் என அறிவிக்கபட்டது.ஆனால், இது சட்டவிரோதமானது என, உச்ச நீதிமன்றம் அப்போது தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையும் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், மேத்யூஸ் நெடும்பரா என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அடங்கிய அமர்வில் கூறியதாவது:நீதிபதிகளே நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலீஜியம் முறையை கைவிடுவதை வலியுறுத்தி மனு தாக்கல் செய்துள்ளேன்.ஆனால், இதை விசாரணை பட்டியலில் சேர்ப்பதற்கு பதிவாளர் அலுவலகம் மறுத்து வருகிறது. உடனடியாக பட்டியலில் சேர்க்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.இதைத் தொடர்ந்து அமர்வு கூறியுள்ளதாவது:அரசியலமைப்பு சட்ட அமர்வு ஒரு வழக்கில் உத்தரவுகள் பிறப்பித்த பின், அந்த சட்டத்தின், 32வது பிரிவின் கீழ், உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தொடரும் உரிமையை கோர முடியாது. அதனால்தான் இந்த மனு, விசாரணை பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதில் எந்த உதவியும் செய்ய முடியாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சுரேஷ்
ஏப் 30, 2024 15:57

தலவலியும் ஜுரமும் தனக்கு வந்தாத்தானே தெரியும்


venugopal s
ஏப் 30, 2024 15:54

கொலீஜியம் முறை சரியில்லை என்று எதிர்ப்பவர்கள் தேர்தல் ஆணைய கமிஷனர்களை மத்தியில் ஆளும் அரசியல்வாதிகளே நியமனம் செய்வதை மட்டும் ஆதரிப்பது கேலிக்கூத்து!


ஆரூர் ரங்
ஏப் 30, 2024 15:25

தாங்களே சுயமாக நியமித்துக் கொள்வார்களாம். எனவே இனி அரசு கோர்ட்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யத் தேவையில்லை. சுயநிதி அடிப்படையில் செயல்படட்டும். வக்கீல்களாக இருந்தபோது கோடிக்கணக்கில் சம்பாதித்தவர்கள்தானே?


rao
ஏப் 30, 2024 10:07

SC will interfere in all constitutional and executive powers ,but when it comes to its own ,they refuse others to interfere on there domain,


Dharmavaan
ஏப் 30, 2024 04:26

ஆங்கிலேய அடிமைத்தனம் நீதிமன்றங்களில் மட்டும் ஆனால் மற்றவர்க்கு புதுமை பற்றி புத்தி சொல்லும்


Dharmavaan
ஏப் 30, 2024 04:24

நீதிமன்றங்கள் பற்றி பொது விவாதம் தேவை


Dharmavaan
ஏப் 30, 2024 02:53

குற்றவாளியே நீதிபதியா எதற்கு இந்த கேவலம் நீதிமன்ற பரிசீலனைக்கு அப்பாற்பட்டது என்று சட்டம் போட்டால் என்ன


ganapathy
ஏப் 29, 2024 23:03

தேசவிரோத அர்பன் நகஸல் இடதுசாரிகளின் நாட்டாண்மையில் நமது பாரியும் ஓரியும் காரியம் வளர்த்த நடுநிலையாக இருந்த நீதித்துறை இப்போது அழிந்துவருகிறது


தாமரை மலர்கிறது
ஏப் 29, 2024 22:46

கொலிஜியம் முறை மிக சிறந்த முறை நீதிபதிகள் இந்த முறைப்படியே தேர்வு செய்யப்படவேண்டும் அரசியல்வாதிகளிடம் தேர்தெடுக்கும் உரிமையை கொடுத்தால், அவர்கள் கோட்டா சிஸ்டத்தை கொண்டுவந்து நாட்டை குட்டிசுவராக்கிவிடுவார்கள்


Dharmavaan
ஏப் 30, 2024 02:58

மக்கள்பாராளுமன்றத்துக்கே அதிகாரம் உத்துள்ளார்கள் நீதிமன்றத்துக்கு அல்ல எல்லாம் நீதித்துறை உள்பட அதன் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் அடிப்படையிலேயே தவறுமோடி துணிந்து இதை நீக்க வேண்டும் உலகில் எங்குமில்லாத கேவலம் என்பது ஹரிஷ் சால்வே கருத்து


Kasimani Baskaran
ஏப் 29, 2024 22:45

பிரிட்டிஷ் கால மன நிலையிலேயே நீதிமன்றங்கள் இன்னும் காலத்தை ஓட்டுகின்றன


மேலும் செய்திகள்