உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணமூட்டை சிக்கிய விவகாரம் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கி

பணமூட்டை சிக்கிய விவகாரம் நீதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் கிடுக்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எரிந்த நிலையில் பண மூட்டைகள் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, விசாரணை குழு விசாரணையை துவங்கும் முன்பாகவே உச்ச நீதிமன்றத்தை ஏன் அணுகவில்லை எனவும் கேட்டுள்ளது. தற்போது அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மா, கடந்த மார்ச் மாதம் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தார். அப்போது அவரது வீட்டில் இருந்து பாதி எரிந்த நிலையில் மூட்டை மூட்டையாக, 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் நேர்மை கேள்விக்குறியானது. விசாரணைக்குழு இதைத் தொடர்ந்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா இந்த விவகாரத்தை விசாரிக்க, உயர் நீதிமன்றங்களை சேர்ந்த மூன்று நீதிபதிகள் தலைமையில் உள்விசாரணைக் குழு அமைத்தார். இக்குழு வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவிநீக்கம் செய்வதற்கான தீர்மானத்திற்கு லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும் பல எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தனக்கு எதிரான உள் விசாரணை குழுவின் பரிந்துரையை ரத்து செய்யக்கோரி நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரராக மத்திய அரசை சேர்த்ததற்கு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், ''அரசியல்சாசன பிரிவு 124ன் படியே ஒரு நீதிபதியை பதவிநீக்க வேண்டுமே தவிர, உள்விசாரணைக் குழு அமைத்து, அதன் மூலம் பொதுவெளியில் விவாதம் நடத்தி அல்ல. தவிர விசாரணையின்போது பல நடைமுறைகள் முறையாக பின்பற்றவில்லை,'' என வாதிட்டார்.

கண்டிப்பு

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தத்தா, ''விசாரணை குழு மீது அதிருப்தி இருக்கும்போது, எதற்காக அதன்முன் ஆஜராகி உங்கள் தரப்பு கருத்துகளை முன்வைத்தீர்கள். ''தவிர இவ்வளவு தாமதமாக நீதிமன்றத்தை நாடுவதற்கும் என்ன காரணம்? உங்களுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என எதிர்பார்த்து காத்திருந்தீர்களா? ''அரசியல்சாசன பொறுப்பில் இருப்பவருக்கு நீதிமன்ற நடைமுறைகள் தெரியாது என தயவுசெய்து பதில் அளிக்காதீர்கள்,'' என கண்டிப்புடன் கூறினார். பின் மீண்டும் தன் வாதத்தை முன்வைத்த கபில் சிபில், ''இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வரம்புக்குள் வரக்கூடியது. ஆனால், இது ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தேவையின்றி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது,'' என்றார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி திபங்கர் தத்தா, ''நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டவர் ஜனாதிபதி. மத்திய அமைச்சரவையின் தலைவர் பிரதமர். எனவே, இருவரிடமும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றதில் எந்த தவறும் இல்லை,'' என பதில் அளித்தார். மேலும், நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பில் முன்வைத்த வாதங்களை குறித்துக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நாளைய தினத்துக்கு ஒத்தி வைத்தனர்.

அடையாளத்தை மறைத்த நீதிபதி

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, தன் அடையாளத்தை மறைத்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். அதில், அவரது பெயருக்கு பதிலாக எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்., எனவும் மத்திய அரசுக்கு எதிரான மனு எனவும் குறிப்பிட்டிருந்தது. பொதுவாக பலாத்காரம் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களே அடையாளத்தை மறைத்து மனு தாக்கல் செய்வர். தவிர சிறார்கள் தங்கள் அடையாளம் வெளிப்படுவதை தவிர்க்க இப்படி மனு தாக்கல் செய்வது உண்டு. ஆனால், வழக்கத்துக்கு மாறாக ஒரு நீதிபதியே தன் அடையாளத்தை மறைத்து மனு தாக்கல் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Vel1954 Palani
ஜூலை 30, 2025 14:47

கபில் சிபலுக்கும் கடிவாளம் போட ஒருவன் வருவான் விரைவில். அதர்மத்துக்கு வக்காலத்து வாங்குவதே இவர் வேலை அரசு திட்டங்களை எதிர்ப்பதே அரசுக்கு எதிராக பேசுவதே இவருடைய வேலை கம்சனுக்கு க்ரிஷன் போல கபிலுக்கும் ஒருவன் வருவான். கோடி கணக்கில் கப்பம் வாங்கிக்கொண்டு .இவர் சம்ஸான் பூமிக்கு செல்லும்போது இவர் கப்பம் வாங்கிய கோடி கோடி பணத்தையும் சேர்த்து எரிக்க சொல்லணும்.


R. THIAGARAJAN
ஜூலை 29, 2025 14:55

நீதிபதியே குற்ற வழக்கி்ல் சம்பந்தப் பட்டால் நீதிக்கும் நோர்மைக்கும் சட்டத்திற்க்கும் இது வரை அந்த நீதிபதியின் தீர்ப்புக்குப் உத்திரவாதமில்லை. நிருபிக்க பட்டால் உலகே வியக்கும் அளவுக்கு தண்டனை உறுதிச் செய்வதால் மட்டுமே இந்திய சட்டங்கள் உயிர் பெரும். எனது ஆழ்ந்த வருத்தங்கள்


V Venkatachalam
ஜூலை 29, 2025 14:34

என்னோட சின்ன ஆதங்கம் இவரையே உச்ச நீதிமன்ற உச்ச நீதிபதியா நியமனம் பண்ணியிருக்கலாம். கபீல் சிந்து குரூப்கள் உச்ச நீதிபதியையே மிரட்டி நீதியை வாங்குறாங்கன்னு டில்லி வட்டார ஸ்ட்ராங் நியூஸ். மிகவும் அபாயகரமான இந்த நிலமை எப்போ சீராகும்? இந்த கபில் சிபலு ஏற்கனவே எம்.பி யாக இருந்தவரு.


GMM
ஜூலை 29, 2025 09:58

அரசியல்சாசன பிரிவு 124ன் படியே குற்ற பின்னணி நீதிபதியை பதவிநீக்கம் செய்து தண்டிக்க வேண்டும் . இந்த விவகாரம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் வரம்புக்குள் வராது. அவர் நியமன அதிகாரி கிடையாது. நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை கொண்டவர் ஜனாதிபதி மற்றும் கவர்னர். தேசத்தின் மக்கள் பிரதிநிதி மற்றும் மத்திய அமைச்சரவையின் தலைவர் பிரதமர். உயர் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதி, கவர்னர் மற்றும் பிரதமர். வாதம் தவறான கோணத்தில் எடுத்து செல்ல படுகின்றன.


Varadarajan Nagarajan
ஜூலை 29, 2025 07:31

இதுபோன்ற மிகப்பெரிய லஞ்சம், ஊழல், பண மோசடி, கிரிமினல் குற்ற வழக்குகளுக்குகளில் தொடர்புடையவர்களை மட்டுமே கபில் சிபல் ஆஜராவாரா? அதில்தான் தனது வாத திறமையை காட்டமுடியுமா அல்லது நிறைய சம்பளம் வாங்கலாமா? நாட்டில் நீதி நேர்மைக்கும் தேச நலனுக்கும் எதிராக ஏதாவது ஒரு வழக்கில் இவர் ஆஜராகி வாதாடி இருக்கின்றாரா?


Rajan A
ஜூலை 29, 2025 05:52

வீட்டில் பணம் இருந்திருக்கிறது. அதை அவசரமாக கொளுத்தியிருக்கிறார்கள். இதுக்கு எட்டுப்பட்டி பஞ்சாயத்து வேற. இவரை முதலில் சஸ்பெண்டு செய்து இருக்க வேண்டும். டிரான்ஸ்ஃபர் செய்தது தவறு. இவ்வளவு நியாயம் பேசுபவர்கள், நீதிபதிகள் நியமனம் ஏன் தங்களுக்குள்ளேயே செய்ய வேண்டும்? கொலிஜியம் முறையை ஒழிக்க வேண்டும்


Thravisham
ஜூலை 29, 2025 06:50

கொலிஜியம் கிட்டத்தட்ட வாரிசு நியமனமே


Thravisham
ஜூலை 29, 2025 05:04

கபில் சிபல் போன்றோர் நாட்டை பீடித்த பெருந் தொற்று நோய்கள்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 29, 2025 04:28

கபில்சிபலுக்கு கடிவாளம் போடும் அளவிற்கு நீதிபதிகளுக்கு தைரியம் இருக்கா


Kasimani Baskaran
ஜூலை 29, 2025 03:52

கபில் சிபலை வைத்து வாதாட ஒரு கோடியாவது கொடுத்து இருப்பார் சின்ஹா. நேர்மையான நீதிபதிக்கு கபில் சிபலுக்கு சம்பளம் கொடுக்குமளவுக்கு எங்கிருந்து பணம் வந்தது என்று கேட்டு இருக்கலாம்.


Rajan A
ஜூலை 29, 2025 05:47

கணக்குல வைச்சுக்கலாம். பின்னாளில் அட்ஜஸ்ட் செஞ்சிக்கலாம்னு சொல்லி இருக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை