உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கடன் வசூல் நிறுவனங்கள் குண்டர்களின் கூடாரம் : உச்ச நீதிமன்றம் காட்டம்

கடன் வசூல் நிறுவனங்கள் குண்டர்களின் கூடாரம் : உச்ச நீதிமன்றம் காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்தவர் தேபாசிஷ் போசு ராய் சவுத்ரி. இவர் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், 2014, டிசம்பரில், பஸ் வாங்குவதற்காக 15 லட்சம் ரூபாய் வாகனக் கடன் பெற்றார்.கடந்த 2018 ஜனவரியில் இருந்து கடனை செலுத்தவில்லை. இதனால் மே மாதம் அவரது வாகனத்தை, பேங்க் ஆப் இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்ட கடன் வசூல் செய்யும் தனியார் நிறுவனம் பறிமுதல் செய்தது.

சமரசம்

இதையடுத்து வங்கியுடன் சமரசம் பேசி, நிலுவை கடன் 10 லட்சத்துக்கு பதில், ஒரு முறை செட்டில்மென்ட் தொகையாக 1.8 லட்சம் ரூபாயை தேபாசிஷ் செலுத்தினார். வங்கி அந்த தொகையை ஏற்று, கடனை முடித்து வைத்தது. அதன்பின் பஸ் ஒப்படைக்கப்பட்டது.ஆனால் பஸ் ஓடும் நிலையில் இல்லை. அதன் சேசிஸ், இன்ஜின் ஆகியவை மாற்றப்பட்டிருந்தன. இது குறித்து கோல்கட்டா போலீசில் தேபாசிஷ் புகார் அளித்தார். போலீசார் கடன் வசூல் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்தனர்.மேலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து வங்கி மற்றும் கடன் வசூல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

குற்றப்பத்திரிகை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் உஜ்ஜல் புயான் அமர்வு கூறியதாவது: வங்கி சார்பாக செயல்படும் கடன் வசூல் செய்யும் நிறுவனம், குண்டர்கள் குழுவை போல செயல்பட்டுள்ளது. இவர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி கடன்தாரர்களை துன்புறுத்துகின்றனர்.ஒரு முறை செட்டில்மென்ட் தொகையை பெற்ற பின்னரும், வாகனத்தை சரியான நிலையில் திருப்பித் தரத் தவறியுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிந்தது சரியே. மேலும், இந்த வழக்கில் கோல்கட்டா போலீசார் இரண்டு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். கடன் வசூல் நிறுவனத்தின் அங்கீகாரத்தை வங்கி ரத்து செய்ய வேண்டும். இழப்பீடு தொகையை அவர்களிடம் இருந்து வசூலித்து கடன் பெற்றவருக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

VENKATASUBRAMANIAN
ஆக 31, 2024 08:26

நீதிமன்ற தீர்ப்புகளக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. மாநில அரசுகள் அதை பொருட்படுத்துவது இல்லை. உதாரணமாக அறநிலையத்துறை சம்பந்தப்பட்ட தீர்ப்புகள் அமல்படுத்தப்படவே இல்லை. இதற்கு நீதிமன்றங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவே தனிநபர் என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும். இதுதான் சட்டம் அனைவருக்கும் சமமா.


Kanns
ஆக 31, 2024 07:48

Bad Judgements by SC. Actually Lenders are in Pathetic Position. Only Physical Injuries Must be Condemned.


GMM
ஆக 31, 2024 07:44

ஒரு வாகன சேஸ் போன்ற பதிவு RTO. வாகன பறிமுதல் செய்யும் போது RTO குறிப்பு தேவை. அதேபோல் திரும்ப ஒப்படைக்கும் போதும். பொலிஸார் பறிமுதல் என்றாலும் தேவை. இந்த நடைமுறை இல்லாததால், புகார். அனைத்து அதிகாரமும் அரசியல், வழக்கறிஞர், போலீஸிடம் இருந்தால், குற்றங்கள் அதிகரிக்கும். உண்மை கண்டறிய முடியாது. நடைமுறை தவறை உச்ச நீதிமன்றம் கண்டுகொள்ள விரும்பவில்லை. நீதிமன்றம் மீது தான் காட்டம் வரும்?


Dharmavaan
ஆக 31, 2024 07:41

இந்த கடன் வாங்கிய ஏமாற்றுபவனுக்கு சாதகமாக அமையும். ஏன் அவன் கடனை ஒழுங்காக செலுத்தவில்லை என்று கோர்ட் கேட்கவில்லை பொது மக்கள் பணத்தில் மீது அக்கறை இல்லை .கேவலமான நீதி .வரவர எல்லா தீர்ப்பும் குற்றவாளிகளுக்கு சாதகமாக உள்ளது மக்கள் நிம்மதியாக வாழ முடியாது.


அப்பாவி
ஆக 31, 2024 07:40

நடுவுல பேங்க் ஆந்ப் இந்தியாக் காரனுங்க வாராக்கடன் ஒன்றியத்திடம் அழுது புரண்டு வசூல்.பண்ணியிருப்பாங்க. வசூல் செய்யும் குண்டர் கம்பெனியும் பேங்க் அதிகாரிகளுக்கு லஞ்சம்.குடுத்திருக்கும். பஸ் வாங்குனவரும் பத்து லட்சத்தில் எட்டு லட்சத்தை சாப்புட்டு ஏப்பம். இதுக்கு எல்லாம் மக்கள் வரிப்பணத்திலிருந்து செலவாகியிருக்கும். 2014 லிருந்து யார் ஆட்சி நடக்குது?


Ramesh
ஆக 31, 2024 10:54

புத்திசாலி. சமச்சீர் அறிவு கொழுந்து. நீ எல்லாம் ஆர் பி ஐ கவர்னராக இருக்க வேண்டியவன்.


Kasimani Baskaran
ஆக 31, 2024 06:51

பத்து லட்சம் கடனை எப்படி 1.5 லட்சம் கொண்டு பைசல் செய்ய முடியும்? ஏற்கனவே கட்டிய கடன் போக கடைசி தவணையாக 1.5 லட்சம் என்பதுதான் சரி. அதற்குள் கடன் வசூல் நிறுவனம் பேருந்தின் என்ஜினை மட்டும் கழற்றி விற்று காசாக்கிவிட்டது. ஆகவே இழப்பீடு என்பது புதிய பேருந்தாகத்தான் இருக்கவேண்டுமே தவிர வெறும் ஐந்து லட்சம் என்பது கண் துடைப்புத்தான்.


முக்கிய வீடியோ