வாசகர்கள் கருத்துகள் ( 38 )
எங்க மீசையே மண் ஒட்டவே இல்லை. நாங்கள் காலக்கெடு விதிக்கும் வரை போராடுவோம் என்கின்றனர் சிலர். சிரிப்பதா அழுவதா ?
நம்ம கவர்னர் தான் இதை போன்ற ஒரு முன்னெடுப்பை ஜனாதிபதி மாளிகை மூலம் செய்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.
ஆளும் மாநில அரசியல் வாதிகள் பெரும்பாலும் சுயநலவாதிகளாகவும் ஊழல்வாதிகளாகவும் பொருளாதார குற்றவாளிகளாகவும் இருக்கிறார்கள் .இது போன்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு இவ்வளவு நாட்களா ?இதற்க்கே இவ்வளவு நாட்கள் என்றால் நாட்டில் உள்ள சிவில் சட்டங்களில் உள்ள குறைகளை எப்படி விரைவாக சுப்ரீம் கோர்ட் தீர்க்கமுடியும் .நன்றாக சிந்தித்து பாருங்கள் .
இந்த வழக்கின் பின்னணி என்னவென்றால், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்கள் ஒப்புதல் வழங்கவில்லை. ஏனெனில், அவர் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல. அவர் முன்னாள் காவல் துறை உயரதிகாரி I.P.S மேலும், சி.பி.ஐ மற்றும் ஐ.பி யிலும், National Security Advisor ஆகவும் திறம்பட பணியாற்றியவர் நேர்மையானவர் தமிழக ஆளுநர், சட்ட மசோதாக்களை காலம் தாழ்த்துகிறார் என்று குற்றம் சாட்டி உச்சநீதிமன்றத்தில் தி.மு.க அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஏப்ரல் மாதம், தமிழக ஆளுநரின் இந்த செயல் சட்டவிரோதம் என அறிவித்து அந்த 10 மசோதாக்களும் உடனடியாக சட்டமாக அமலுக்கு வந்துவிட்டதாக அறிவித்தனர். ஆளுநர் மற்றும் குடியரசு தலைவருக்கு வழங்கப் பட்ட அதிகாரத்தை தட்டிப் பறிப்பதாக அந்த நீதிமன்ற உத்திரவு இருந்ததால், இதற்கு விளக்கம் கேட்டு, மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள அதிகாரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்துக்கு 14 கேள்விகள் அடங்கிய Presidential reference ஒன்றில் கேள்வி எழுப்பியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், பி.எஸ்.நரசிம்மா, அதுல் சந்துர்கர் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட, அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு விதிக்க முடியாது என தீர்ப்பளித்துள்ளது அதாவது, குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2025, ஏப்ரல் மாதம் அளித்த தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூறி அதை நிராகரித்துள்ளனர். மேலும், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய 2 நீதிபதிகள் அமர்வு, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஒப்புதல் அளிக்காவிட்டால், மசோதாக்கள் சட்டமாகிவிடும் என்று ஏப்ரல் மாதம் வழங்கிய தீர்ப்பும், அரசியல் சாசன சட்டத்துக்கு எதிரானது என்று நிராகரித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்கள் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம், மாநில அரசுகளுக்கு மூக்கணாங்கயிறு போடப்பட்டுள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி, மற்றும் மாநில ஆளுநர்களுக்கு, அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள அதிகாரம் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், டெல்லியில் இடி இடித்தால், உலகுக்கே மழை பெய்துள்ளது. நன்றி
so that the cm chtalin, ministers, families and allies can take any decision and pass it in the TN Legislative assembly against the Governor and capitalize the TN government treasury. why cant these people pass rules send them to the court to finish and issue judgement for the cases pending in the courts for years - decisions like Judges have to issue the judgement after sometime - like months / years not more than 6 months / 18 months maximum depends on the cases if the parties are delaying the court ie. adjournment. At the end the judgement should be given to the ex-parte also have to inform the IT & ED and any other departments have the right to investigate all the properties & business owners are proper documents, IT returns etc - in case the owners are not able to produce proper documents and answers to IT & ED etc then those properties, bank accounts all to be attached to the government treasury without any objections and / or appeals irrespective of the citizens. All the owners include binami owners also have to produce the documentary evidences for their business, properties, bank accounts etc. including their foreign investments all of them put them behind the bars with RI punishment until their death. also have to screw up all the law and order departments, employees and officials - they are the one who helping the accused in the jail including the politicians
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி உள்ளது என்று பார்த்தால் ஒழுங்கீனமான ஒரு மாணவனை ஆசிரியரோ தலைமை ஆசிரியரோ கண்டிக்கவோ அல்லது தண்டிக்கவோ முடியாது, பள்ளிக்கு ஒழுங்காக வர வேண்டும் என்று கட்டாயப் படுத்தவும் முடியாது, ஆனால் அந்த ஒழுங்கீனமான மாணவனை ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் கூப்பிட்டு அறிவுரை மட்டுமே கூறலாம் என்பது போல் உள்ளது.அதனால் எந்த விதமான மாற்றமோ, பயனோ கிடைக்கப் போவதில்லை, அவர் வழக்கம் போல் ஒழுங்கீனமானவனாகவே தொடர்ந்து இருக்கப் போகிறார், அவ்வளவு தான்!
அட அறிவிலி வேணு...இங்கே அப்பாதான் தவறு செய்கிறார்... அதில் மாணவனையும் ஆசிரியரும் எதற்கு பழி போடுவாய்
சட்டம் அப்படிதான் சொல்லுது என்ன செய்ய? சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான். இவர்கள் பல முறை மத்திய அவர்களது மொழியில் ஒன்றிய அரசில் பங்கு வகித்து உள்ளனர். இந்த சட்டத்தை மாற்ற அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை இது வரை கொண்டு வராதது ஏன்? செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது காங்கிரஸ் கட்சியுடன் அரசியல் உறவை முறித்து கொண்ட போது அப்போது ஆளுநராக, மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் நியமிக்க பட்ட திரு சென்னா ரெட்டி அவர்கள் கூட குடைச்சல் கொடுத்தார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கவர்னர் மாணவனல்ல. உச்சநீதி மன்றம் ஆசிரியரோ தலைமை ஆசிரியரோ இல்லை. இரு தரப்பும் அரசியல் அமைப்பின் கீழ் தனித்துவமாக இயங்கும் பதவிகள்.
தமிழ் நாட்டில் ஞான ஜோதியாய் ஒளி பிழம்பாய் ஒரு வக்கீல் உள்ளார். தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள்.
தும்மினால் கழகம் உச்ச நீதிமன்றம் செல்கிறது. கோடி கோடியாய் மக்கள் வரிப்பணத்தை பீஸாக கொடுத்து டெல்லி மும்பை புகழ் பெற்ற வக்கீல்களை வைத்து வழக்காடுகிறது. கடைசியில் மூக்குடைபட்டு நிற்கிறது. மக்கள் வரிப்பணம் இப்படி விழலுக்கு இறைத்த நீராகிறது.
சட்ட மேதை என்று சொல்லிக்கொண்டு திரிவோரும் காமெடி செய்யலாம்
மீசையில் ஒட்டிய பிறகும் இந்த வில்சன் என்னமா முட்டுக்கொடுக்கிறான்...
இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதியை கட்டாய ஓய்வில் பென்ஷன் இல்லாமல் உடனடியா வீட்டுக்கு அனுப்பவேண்டும் . ஆணவம் பிடித்த அரசியல் சார்பு அநீதிபதி
இங்கே எங்கே நீதி சொல்லப்பட்டிருக்கிறது?. அம்பேத்கர் தலைமையில் எழுதப்பட்ட சட்ட நூலில் எழுதி இருப்பதை எடுத்து சொல்லியிருக்கிறார்கள்.
எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அது நீதியின் வெற்றி.... அதே எதிராக இருக்குமானால் அது அநீதி.... அப்படி தானே