உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விசாரணை நீதிமன்றங்கள் அமைப்பதில் தாமதம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

விசாரணை நீதிமன்றங்கள் அமைப்பதில் தாமதம்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை விரைந்து அமைக்காவிட்டால், விசாரணை கைதிகளை விடுவிக்க நேரிடும்' என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டவிரோதம்

என்.ஐ.ஏ.,வால் கைது செய்யப்பட்ட கைலாஷ் ராமசந்தானி என்பவர், ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மல்யா பாக்சி அமர்வு முன் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:'உபா' எனப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட சிறப்பு சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுவோர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் தேவை.இத்தகைய வழக்குகளை தினசரி விசாரிக்க வேண்டியது அவசியம். சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக மே 23ல் பிறப்பித்த உத்தரவுக்கு இதுவரை பதில் இல்லை.குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் விசாரணையை முடிப்பதற்கான வலுவான கட்டமைப்பு இல்லாத நிலையில், சந்தேக வழக்கில் கைதானவர்களை எத்தனை காலம் வரை காவலில் வைத்திருக்க முடியும்.

நடவடிக்கை

எனவே, மத்திய - மாநில அரசுகள் இதற்கென தனி நீதிமன்றங்களை அமைக்காவிட்டால், அடுத்த விசாரணையின்போது மனுதாரரை ஜாமினில் விடுவிக்க நேரிடும். இதுதான், மத்திய அரசுக்கு நாங்கள் தரும் கடைசி வாய்ப்பு. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், சிறப்பு நீதிமன்றங்கள் அமைப்பது குறித்த எந்த தகவலும் இல்லாததால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.இதையடுத்து, 'சிறப்பு சட்டங்கள் வாயிலாக கைதிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். 'ஆனால், விசாரணை விரைவாக நடக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை' என, கடிந்து கொண்டனர். வழக்கில் ஜாமின் நிராகரிப்பதும், விடுவிக்க மறுப்பதும் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை