உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தீர்ப்பு அளிக்கும் போது பிரசங்கம் வேண்டாம்: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

தீர்ப்பு அளிக்கும் போது பிரசங்கம் வேண்டாம்: சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு

புதுடில்லி: பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை விடுவித்ததுடன், பெண்களுக்கு அறிவுரை வழங்கி கோல்கட்டா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உச்ச நீதிமன்றம் நேற்று ரத்து செய்தது.மேற்கு வங்கத்தில், சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு

இதை எதிர்த்து கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் குற்றவாளி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 'இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் ஆண், முழு சம்மதத்துடன் உறவில் ஈடுபட்டுள்ளனர். 'எனவே, பாதிக்கப்பட்ட பெண்ணின் வயதை பொருட்படுத்த தேவையில்லை' என, கூறி குற்றவாளியை கடந்த ஆண்டு அக்., 18ல் விடுவித்தது. அதோடு, பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்படும் பெண்களுக்கு அறிவுரைகளையும் வழங்கியது. அதன் விபரம்:இளம் பெண்கள் தங்கள் பாலியல் இச்சைகளை கட்டுப்படுத்த வேண்டும். இரண்டு நிமிட சுகத்துக்காக தங்களையே இழக்க துணியும் பெண்கள், இந்த சமூகத்தின் பார்வையில் தவறானவர்களாக பார்க்கப்படுவர். இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. கோல்கட்டா உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேற்கு வங்க அரசும், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயான் அளித்த தீர்ப்பின் விபரம்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஆக 21, 2024 11:08

ஈராக்கில் பெண்களின் சட்டபூர்வ திருமண வயது ஒன்பது . இங்கும் மூர்க்க ஆட்கள் அந்த உரிமையைக் கேட்பார்கள். திருமணம் முடிந்த உடனே எல்லாவற்றுக்கும் லைசென்ஸ்? இந்தக் கொடுமைக்காகதான் பிரதமரே மதசார்பற்ற சிவில் சட்டத்திற்கு குரல் கொடுத்து வருகிறார்.


Ram Mohan
ஆக 21, 2024 07:56

Girl is 16 years old. male is 30 years old. A 30 years person should know the legal age. We should not see whether it is with mutual consent or not. She would have been threatened to say so.


Barakat Ali
ஆக 21, 2024 07:54

உயரு மன்றம் சிறுமிகளையும் வயது வந்த பெண்களைப்போல கருதி தீர்ப்புச் சொன்னது அதிர்ச்சி அளிக்கும் விஷயம் ... பின்னணிக் காரணம் நிச்சயம் இருக்கும் ......


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 21, 2024 08:58

உங்க ஆளுங்க அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் குழுவில் இருந்திருக்கலாம் ...... உங்க ஆளுங்க சம்பந்தப்பட்ட குற்றங்கள் என்றால் வங்கத்துப்புலி அம்மணி மறைப்பதில் தீவிரமாக இருக்கிறார் ....


Kasimani Baskaran
ஆக 21, 2024 05:36

உயர் நீதிமன்றங்களில் திருட்டை அதீத ஆசைக்காக பொருள் எடுத்தால் என்று கூட சொல்லுமளவுக்கு நீதி நிலைத்து இருக்கிறது. எதற்கும் இது போல தீர்ப்பெழுதுபவர்களை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வைத்து விசாரிப்பது நாட்டுக்கு நல்லது.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ