உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூரத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

சூரத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலாக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூரத் தொகுதியில் மற்ற அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்ற நிலையில் முகேஷ் தலாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.குஜராத்தில் மொத்தம் உள்ள 26 லோக்சபா தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் நிறைவு அடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. அhttps://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=bg81si4o&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ப்போது சூரத் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியை முன்மொழிந்திருந்த 5 பேரில், மூன்று பேர் தங்களது கையெழுத்து இல்லை எனத் தெரிவித்தனர். இதையடுத்து, காங்., வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் களமிறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பா.ஜ., வேட்பாளர் முகேஷ் தலாக் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சூரத் தொகுதியில் மற்ற அனைத்து வேட்பாளர்களும் வாபஸ் பெற்ற நிலையில் முகேஷ் தலாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். லோக்சபா தேர்தல் முடியும் முன்பே முதல் எம்.பி.,யை பா.ஜ., பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

K.n. Dhasarathan
ஏப் 24, 2024 10:51

காங்கிரஸ் வேட்பாளருக்கு மாற்று வேட்பாளர் என்று ஒருவர் இருப்பாரே அவரைப்பற்றிய செய்தி காணோம் அவர் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதா? என்ன விசுவாசம்? அந்த தொகுதி தேர்தல் அலுவலருக்கு பெரிய அவார்டு காத்திருக்கு


Senthil K
ஏப் 23, 2024 00:58

சரியான முன்மொழியும் ஆட்களையே தேர்வு செய்யத் தெரியாத காங்கிரஸ் கட்சி.. ஜெயித்து மட்டும் என்ன செய்யப் போகிறது??


thangavel
ஏப் 22, 2024 22:06

dummy candidate seththu poi vittaara


A1Suresh
ஏப் 22, 2024 20:42

கிழக்கே அருணாசல பிரதேசத்தில் எங்கள் பாஜகவின் எம் எல் ஏக்கள் போட்டியின்றி ஜெயித்தனர் இன்று மேற்கே ஒரு எம்பி போட்டியின்றி ஜெயித்தார் ஜூன் மாதத்தில் பெறப்போகும் இமாலய வெற்றிக்கு இது அருணோதயம் என்று கொள்ளலாம் யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே


Kundalakesi
ஏப் 22, 2024 20:21

வேட்பு மனு முன்மொழிதலை வீடியோ பதிவு செய்ய வேண்டும் மற்றும் அதன் பிரதியை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்


Jayaraman
ஏப் 22, 2024 20:15

போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு, அதே தொகுதியில், ஓட்டு போடவும் உரிமை இருக்க வேண்டும். அவருடைய பெயர் வேறு தொகுதியில் இருந்தால் தேர்தல் நடத்த வேண்டும்


R SRINIVASAN
ஏப் 22, 2024 20:03

ல் பாராளுமன்றதின் காலம் முடிந்து தேர்தல் நடத்தவேண்டிய நேரத்தில் இந்திரா பாராளு மன்றத்தின் காலத்தை ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு செய்து il தேர்தல் நடத்தி தொத்ருப்போனார் பிந்தரன்வாலே ஐ மொரார்ஜி தேசாய் அரசுக்கு எதிராக தூண்டி விட்டார் கருணாநிதியின் அரசை கலைத்தார் தேவராஜ் உர்ஸ்-N ஆட்சியைக் கர்நாடகத்தில் கலைத்தார் இந்திராவால் பாதிக்கப்பட்ட ஆந்திர அமைச்சர்கள் கேவிஜயபாஸ்கர் ரெட்டி, ஜலகம் வெங்கல ராவ் முழு மெஜாரிட்டியில் உருவான NTRAMARAO -ன் ஆட்சியை நாடெண்ட்ல பாஸ்கர் ராவை பதவியில் அமர்த்தி கலைத்தார் இவ்வளவு அட்டுழியங்களை செய்த இந்திராவை யாரும் கண்டிக்கவில்லை


Azar Mufeen
ஏப் 22, 2024 19:37

ஆஹா ஆஹா இங்கே ஒருவர் ஒரு லட்சம் வாக்காளர்கள் பேர் விடுபட்டுப்போனது என்கிறார் அங்கே என்னடானா 5பேரில் 3பேர் கையெழுத்து எங்களுது இல்லை என்கிறார்கள் பாரத சமுதாயம் வாழ்கவே


தாமரை மலர்கிறது
ஏப் 22, 2024 18:59

யாருமே ஆதரிக்காதபோது, காங்கிரஸ் வேட்பாளர் தானே பிறரின் கையெழுத்தை போட்டு விண்ணப்பம் செய்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது போன்றது காங்கிரஸ் கட்சி தடைசெய்யப்படவேண்டிய கட்சி அதிலுள்ள உறுப்பினர்கள் பெரிய பொய்யர்களாக உள்ளார்கள்


senthil
ஏப் 22, 2024 17:41

ஜனநாயக நாட்டின் சாபக்கேடு காங்கிரஸ் கட்சிதான்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி