முறைப்படுத்தப்பட்ட ஊழல்!
பீஹாரில் அரசின் நலத்திட்டங்களை
பெண்களுக்கு தெரிவிக்க, 255 கோடி ரூபாய் செலவில் பிரசாரத்தை
முன்னெடுத்துள்ளனர். இது, தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதி. பொது மக்கள்
பணத்தை தன் கட்சி பிரசாரத்துக்கு பயன்படுத்துவது வாயிலாக முதல்வர் நிதிஷ்
குமார் ஊழலை முறைப்படுத்தி உள்ளார். தேஜஸ்வி யாதவ், தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்வெட்கமற்ற மம்தா அரசு!
மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாதில், வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில் ஹிந்துக்களை ஒழிக்க முயற்சி நடந்துள்ளது. வன்முறை கும்பலிடம் இருந்து தப்பி, பள்ளிகளில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு வெட்கமற்ற மாநில அரசு தரமற்ற உணவுகளை வழங்கியுள்ளது. அதை தடுப்பு முகாமாக மாற்றியுள்ளது. சுவேந்து அதிகாரி, மே.வங்க எதிர்க்கட்சித் தலைவர், பா.ஜ.,பார்லிமென்டை மூடிவிடலாமா?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை, ஜனாதிபதி நியமிக்கிறார். அவருக்கு எப்படி நீங்கள் உத்தரவுகள் தர முடியும்? பார்லிமென்ட் சட்டத்தை உருவாக்குகிறது. அதற்கு பதில் உச்ச நீதிமன்றம் சட்டம் இயற்றினால், பார்லிமென்ட்டை மூடிவிட வேண்டியது தான்.நிஷிகாந்த் துபே, லோக்சபா எம்.பி., -- பா.ஜ.,