உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தபேலா இசை மேதை ஜாகிர் உசேன் காலமானார்

தபேலா இசை மேதை ஜாகிர் உசேன் காலமானார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் உசேனுக்கு, வயது 73, உடல் நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் (டிச.,16) சிகிச்சை பலனின்றி இன்று காலை. காலமானார். ஜாகிர் உசேனுக்கு கடந்த ஒரு வார காலமாக, இதயம் தொடர்பாக, பிரச்னை இருந்தது. அவர், அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜாகிர் உசேன் காலமானார். .அவரது மறைவினால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். சிறுவயது முதலே மஹாராஷ்டிராவில் பல் வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். சிறந்த இசை சேவைக்காக மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ, பத்ம விபூஷன் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார் ஜாகிர் உசேன்.1951 இல் புகழ்பெற்ற தபேலா கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்காவாவுக்கு மும்பையில் மகனாக பிறந்த உசேன், தனது தந்தையால் மூன்று வயது முதலே தாள வாத்தியத்திற்கு அறிமுகப்படுத்தபட்டார்.இந்த ஆண்டு, பேலா ஃப்ளெக், எட்கர் மேயர் மற்றும் ராகேஷ் சௌராசியா ஆகியோருடன் பாஷ்டோவுக்கான சிறந்த உலகளாவிய இசை நிகழ்ச்சி உட்பட மூன்று கிராமி விருதுகளை வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

theruvasagan
டிச 16, 2024 15:43

ஒரு சிறந்த இசைக் கலைஞரின் இறப்பு ரசிகர்களுக்கு பெரிய இழப்பு. ஆழந்த இரங்கல்கள்.


aaruthirumalai
டிச 16, 2024 13:13

RIP


karthik
டிச 16, 2024 09:17

சாமி - நீங்கள் விட்டுச்சென்ற உங்களின் இசை இந்த உலகம் இருக்கும் வரை நீடித்து இருக்கும். ரொம்ப நன்றி - நிம்மதியா போய் வாருங்க.


பிரேம்ஜி
டிச 16, 2024 07:32

சிறந்த கலைஞராக சீரும் சிறப்புடன் வாழ்ந்தவர். ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.


Subramanian
டிச 16, 2024 07:16

ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


viki
டிச 16, 2024 06:12

deep condolences


சின்னசேலம் சிங்காரம்
டிச 15, 2024 22:17

ஆழ்ந்த இரங்கல்


புதிய வீடியோ