உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்

தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்

புதுடில்லி: அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன், 73, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன், சிறு வயது முதலே பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்திய இசை உலகில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் புகழ்பெற்றவர். வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.கடந்த, 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த அவருக்கு, ரத்தக் கொதிப்பு பிரச்னை இருந்து வந்தது. இதற்காக கடந்த சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இதய பிரச்னைக்காக, சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல தபேலா இசை மேதை உஸ்தாத் அல்லா ரக்கா கானின் மகனான ஜாகிர் உசேன், 7 வயதில் இருந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்திய இசைக்கு அவர் ஆற்றிய சேவைகளுக்காக, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. சங்கீத நாடக அகாடமி விருதும் அவருக்கு கிடைத்தது. இதைத் தவிர, சர்வதேச அளவில் இசைக்காக வழங்கப்படும் கிராமி விருதை நான்கு முறை பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Jay
டிச 16, 2024 18:38

சார், RIP என்பது அறியாமையில் உள்ளவர்களின் புரிந்துணர்வு. உடலை எழுப்பும் வரை ஆத்மா ஓய்வாக இருக்கட்டும் என்பது ஒரு பிறவி நம்பிக்கை உள்ளவர்களின் புரிதல். ஆனால், உண்மையில், உடல் இன்றி ஆத்மா எப்போதும் இருக்கும். பிறப்பதற்கு முன்பாக தந்தையிடம் வந்து சேரும் ஆத்மா, தாயின் கருவுக்குள் செலுத்தப்பட்ட உடனே உடலை பெறுகிறான். தந்தையிடம் வருவதற்கு முன்பாக எங்கிருந்து வந்தான், ஏன் இந்த தாய் தந்தையை சேர்கிறான், இறப்பிற்கு பின் எங்கு சென்றான் என்று அறிய வேண்டும். பகவத் கீதையில் இதை பற்றிய விவரம் உள்ளது. 8ம் அத்தியாயம் படித்தால் இந்த தகவலை அறிந்து கொள்ளலாம். 2ம் அத்தியாயம் படித்தால் ஆத்மாவின் தன்மைகளை அறிந்துகொள்ளலாம்.


V Gopalan
டிச 16, 2024 16:26

May his soul rest in peace. Country has lost a good musician.


முக்கிய வீடியோ