உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொகுதி சீரமைப்பால் தமிழகத்துக்கு பாதிப்பு: கேரளாவில் உதயநிதி பேச்சு

தொகுதி சீரமைப்பால் தமிழகத்துக்கு பாதிப்பு: கேரளாவில் உதயநிதி பேச்சு

திருவனந்தபுரம்: “மத்திய அரசின், 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' திட்டம், கூட்டாட்சி தத்துவத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய தாக்குதல்,” என, தமிழக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.கேரளாவின், 'மாத்ருபூமி' மலையாள நாளிதழ், திருவனந்தபுரத்தில் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி பேசியதாவது:'ஒரே நாடு; ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால், ஒரு மாநிலத்தில் கூட்டணி மாற்றம் அல்லது நம்பிக்கையில்லா தீர்மானம் வாயிலாக அரசு கலைக்கப்படும் போது, தேசிய அளவில் அடுத்து தேர்தல் நடத்தப்படும் வரை, அந்த குறிப்பிட்ட மாநிலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.இது, கூட்டாட்சி தத்துவத்தின் மீது நிகழ்த்தப்படும் மிகப்பெரிய தாக்குதல். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174ஐ மீறுவதுடன், கூட்டாட்சியின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கிறது.அதேபோல, மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், லோக்சபா தொகுதிகளை வரையறுக்கும் மத்திய அரசின் முடிவு, தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.தொகுதி வரையறை செய்யப்பட்டால், தமிழகம் மற்றும் கேரளாவுக்கு பார்லி.,யில் தற்போதுள்ள பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும். தென் மாநிலங்களின் குரலை பார்லி.,யில் ஒடுக்கவே, இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக நினைக்கிறேன்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மாண்பை குறைக்கும் வகையில் கவர்னர் அலுவலகம் செயல்படக்கூடாது.துணைவேந்தர் தேர்வு உட்பட கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை பல்கலை மானியக்குழு தெரிவித்துள்ளது. சமூக வளர்ச்சிக்கு காரணமாக விளங்கும் கல்வித்துறையை மாநில அரசுகளின் கைகளில் இருந்து பிடுங்கி, மத்திய அரசின் கைகளில் அளிக்க முயற்சி நடக்கிறது.மத்திய அரசின் சமீபத்திய பட்ஜெட்டில் கூட தமிழகமும், கேரளாவும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

சிந்தனை
பிப் 07, 2025 19:47

ஆந்திர திருடர் முன்னேற்ற கழகம் கேரளாவையும் திருட சென்று விட்டது போல


Ganapathy
பிப் 07, 2025 13:03

அப்படியே பொறுமையா கேரள மருத்துவ கழிவுகளையும் ருசி பார்த்துவிட்டு வந்தா போதும். அப்படியே தொளபதிக்கும் கனிமொழிக்கும் பார்ஸல் வாங்கிக்க...


Ganapathy
பிப் 07, 2025 13:00

கேரள மருத்துவ கழிவுகளைவிட தமிழகத்து மிகவும் ஆபத்தானது இவனது திருட்டுத்திராவிடிய மூளை.


Kjp
பிப் 07, 2025 10:49

கேரள கழிவுகளை தமிழ் நாட்டில் கொட்டுகிறார்கள்.அதை விட்டுட்டு கூட்டாட்சி பற்றி பேசுகிறார். நீட் பற்றி ஒரு கருத்து கூட இல்லை. பழனிசாமி ஆட்சியில் வந்தது என்றால் ஒரு கையெழுத்தில் ஏன் ஒழிக்க வில்லை.


Sundaramoorthy S
பிப் 07, 2025 10:16

இவனை எல்லாம் ஒரு ஆளுன்னு நிகழ்ச்சிக்கு அழைத்தவர்களை சொல்ல வேண்டும்.


Duruvesan
பிப் 07, 2025 09:59

பாஸ் எப்படி என்ன பாதிப்புனு சொன்னா முரசொலி படிக்கும் புத்திசாலிக்கும் புரியும்


Kumar Kumzi
பிப் 07, 2025 09:56

எந்த பாஷையில் பேசியிருப்பார்


தத்வமசி
பிப் 07, 2025 09:39

எதிர்கட்சியாக இருக்கும் போது மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் அதில் நொட்டை சொள்ளை கூற வேண்டியது, போராட்டம் நடத்தி அவற்றை தடுக்க வேண்டியது. இவர்கள் ஏதாவது திட்டம், சட்டம் கொண்டு வந்தால் மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர். எங்களது வாக்குறுதியில் உள்ளது என்று கூற வேண்டியது. அவர்களையும் மக்கள் தான் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களது வாக்குறுதியில் இவை அனைத்தும் உள்ளன. அவர்கள் அதை நிறைவேற்றத் தான் செய்வார்கள்.


Gokul Krishnan
பிப் 07, 2025 09:26

கேரளா சென்ற சின்னவர் கேரள தமிழக பகுதிகளில் கொட்டிய குப்பை குறித்து வாய் திறக்க மாட்டார் அடிமை மீடியாக்கள் அது குறித்து அவரிடம் கேட்காது


R.MURALIKRISHNAN
பிப் 07, 2025 09:15

தமிழர்களின் தலைவிதி உன்னை போன்ற திருட்டு திராவிட மோசடி கும்பல்களிடம் சிக்கி சீரழிந்து கொண்டிருப்பது.


புதிய வீடியோ