உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழக குடும்பம்; 4 பேர் பலியான சோகம்!

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழக குடும்பம்; 4 பேர் பலியான சோகம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில், திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர்4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், வயது 45. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9kssq4ib&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கரில் சிவில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். சத்தீஸ்கரின் ராய்ப்பூர் மாவட்டம், ஜகல்பூரில் 38 வயது மனைவி பவித்ரா, 8 வயது மகள் சவுத்தியா, 6 வயது மகள் சவுமிகா ஆகியோருடன் குடும்பமாக வசித்து வந்துள்ளார்.திருப்பதி கோவிலில் நடைபெற இருந்த திருமணத்தில் பங்கேற்க ராஜேஷ்குமார், மனைவி மகள்களுடன் காரில் சொந்த ஊர் புறப்பட்டார். சுக்மா அடுத்த டர்பந்தனா என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக மழை வெள்ளத்தில் சிக்கிய ராஜேஷ் கார் நீரில் அடித்துச் சென்றுள்ளது. நீரில் மூழ்கி காருக்குள் இருந்த நான்கு பேரும் பரிதாபமாக இறந்தனர்.கரை ஒதுங்கிய காரில் இருந்து 4 பேர் உடல்களும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை முடிந்து 4 பேர் உடல்களையும் 2 ஆம்புலன்ஸ்கள் மூலம் திருப்பத்தூர் பாரண்டப்பள்ளி கிராமத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் இறந்த சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 28, 2025 17:14

இறந்த குடும்பத்தினருக்கு தமிழர்கள் என்ற அடையாளம் தேவையா? பிற மொழி பேசுபவர்களாக இருந்தால் பரிதாபமோ அனுதாபமோ கிடையாதா ?


Nada raja
ஆக 28, 2025 16:51

ஆழ்ந்த இரங்கல்... தமிழர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை