உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக மீனவர்கள் கைது; வலுவான நிலைப்பாடு தேவை: மத்திய அரசுக்கு ராகுல் வேண்டுகோள்

தமிழக மீனவர்கள் கைது; வலுவான நிலைப்பாடு தேவை: மத்திய அரசுக்கு ராகுல் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழக மீனவர்கள் 37 பேரை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து ராகுல், எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:செப்டம்பர் 21ம் தேதி இலங்கை கடற்படையினர், 37 தமிழக மீனவர்களை கைது செய்து, அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்தனர். ஆகவே, அவர்களையும், அவர்களுடைய படகுகளையும், உடனடியாக விடுவிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்வது, பல குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு அநீதியானது. மீனவர்களை விடுவிப்பதற்கும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திரும்பப் பெறுவதற்கும், விரைவான ராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும் இந்த விஷயத்தில், மத்திய அரசு, ஒரு வலுவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். நமது மீனவர்களுக்கு ஆதரவாக நின்று, அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது, மிகவும் முக்கியமானது.இவ்வாறு ராகுல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Kasimani Baskaran
செப் 29, 2024 07:13

கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை இலங்கைக்கு கடத்துவது - மாற்றாக தங்கம் கொண்டுவருவது போன்ற வேலைகளை மீனவர்கள் விடவில்லை என்றால் ஆண்டவன் கூட காப்பாற்ற முடியாது. தீம்காவினரின் படகுகள் இன்னும் இலங்கையிடம் இருப்பதாக இவர்கள் கற்பனை செய்து கொண்டு இருக்கிறார்கள்.


Rpalnivelu
செப் 29, 2024 04:26

கீழ்ப்பாக்கத்துக்கு வந்துட்டேன்னு சொல்லு-பப்பு


Rajan
செப் 29, 2024 04:02

மீனவனாக அவதரமெடுக்கும் நேரமிது. கடலோர பகுதிகளில் கான் கட்சி அரையணா பெறாது. சும்மா உதார். முதலில் சுற்றி இருக்கும் அரை பிரவுசர் அறிவீலிகளை கழற்றி விட்டால்தான், இந்த தம்பிக்கு கிறுக்கு இறங்கும். சேர்க்கை சரியில்லை


Rajan
செப் 29, 2024 00:04

மீன் பிடிக்க எப்போது கடலுக்கு போக போகிறார்? எல்லா தொழிலையும் கற்று கொண்டாகிவிட்டது.


Rajan
செப் 29, 2024 00:04

மீன் பிடிக்க எப்போது கடலுக்கு போக போகிறார்? எல்லா தொழிலையும் கற்று கொண்டாகிவிட்டது.


Murugesan
செப் 28, 2024 22:52

ஒன்றரை லட்சம் தமிழர்களையும் 600 இந்திய தமிழக மீனவர்களை கொன்ற கொலைகார கூட்டு களவானி பப்பு சும்மா இரு


Kumar Kumzi
செப் 28, 2024 22:14

பப்பூ கச்ச தீவை இலங்கைக்கு தாரைவார்த்து குடுத்தது யார் ஆமா அது என்ன தமிழக மீனவர் அவர்கள் இந்தியர்கள் இல்லையா


RAMAKRISHNAN NATESAN
செப் 28, 2024 22:02

தமிழக மீனவர்கள் கைது விஷயம் .... வலுவான நிலைப்பாடு தேவை - ராகுல் வேண்டுகோள் ..... தமிழக மீனவர்கள் பேராசையால் எல்லை தாண்டி மீன்பிடித்து மாட்டிக்கொள்கிறார்கள் என்று கருணா தாம் முதல்வராக இருக்கும்போதே கூறியது இந்த ADHD பாதித்த நபருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .....


ஆரூர் ரங்
செப் 28, 2024 21:40

யுபி ஏ ஆட்சிக்காலத்தில் 700 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இறந்தனர். இப்போ அது நின்றுவிட்டது. நீங்க தலையிட வேண்டாம்.


ஆரூர் ரங்
செப் 28, 2024 21:36

ராகுல் வீட்டுக்குள் யாராவது புகுந்து திருடினால் மன்னித்து விடுவாரா? ஆனால். அதையே இலங்கை அரசிடம் எதிர்பார்க்கிறார்.


புதிய வீடியோ