உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நவம்பர் மாத பங்கீட்டு நீரை திறந்து விடுங்கள் காவிரி ஆணையத்தில் தமிழக அரசு கோரிக்கை

நவம்பர் மாத பங்கீட்டு நீரை திறந்து விடுங்கள் காவிரி ஆணையத்தில் தமிழக அரசு கோரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நவம்பர் மாதத்தில், தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான, 13.78 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடகா திறந்துவிட நடவடிக்கை எடுக்கும்படி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 'வீடியோ கான்பரன்ஸ்' காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின், 45வது ஆலோசனைக் கூட்டம் டில்லியில் நேற்று நடந்தது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில், தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்ரமணியம் ஆகியோர், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பங்கேற்றனர். அப்போது, மேட்டூர் அணையின் நீர் இருப்பு, 89.741 டி.எம்.சி., அளவாக இருக்கிறது என்பதோடு, அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 6,401 கன அடியாக இருப்பதாகவும் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. வலியுறுத்தல் தவிர, விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்காக, வினாடிக்கு, 18,427 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்ற விபரமும் அளிக்கப்பட்டது. மேலும், கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து ஆகியவை, கணிசமான அளவுக்கு சிக்கலின்றி தொடர்ந்து வருகிறது. இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, நவம்பர் மாதத்தில் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நீர் அளவான, 13.78 டி.எம்.சி., தண்ணீரை, கர்நாடகா திறந்துவிட வேண்டும். அதற்கான நடவடிக்கையை தாமதமின்றி எடுக்க வேண்டும். இந்த நவம்பர் மாத பங்கீட்டு நீரின் அளவை, தமிழக - கர்நாடக எல்லையான பில்லி குண்டுலுவில், காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப் பட்டது. -நமது டில்லி நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kulandai kannan
நவ 07, 2025 14:24

இந்த ஆண்டு இதுவரை வந்த நீரின் அளவை வெளியிட தமிழக அரசு தயாரா??


Gajageswari
நவ 07, 2025 08:35

அடுத்தவரிடம் சண்டை போடுவதை விட்டு ராசி மணல் அணை கட்டியிருக்கலாமே


V RAMASWAMY
நவ 07, 2025 08:29

கர்நாடகாவிலிருந்து உபரியாக ஆயிரம் ஆயிரம் கன அடி தண்ணீர் மேட்டூருக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் வெள்ளம் வெள்ளமாக திறந்து வீணடித்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழகம் பூராவும் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில் கிடைக்கும் நீரை சேமித்து வைத்துக்கொள்ளத் தெரியாமல் இன்னமும் திருவோடு ஏந்தும் அவலம்.


duruvasar
நவ 07, 2025 08:14

ஆமாங்க வாங்க கடலில் நீர் பற்றா குறை அதிகமாக உள்ளதாக மீன்கள் முன்னேற்ற கழகம் வாழ்வுரிமைக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள் இது அவர்களின் வாழ்வா சாவா என்ற உயிர் ப்ரச்சனை


பேசும் தமிழன்
நவ 07, 2025 07:27

கான் கிராஸ் கட்சி எப்போதும் தமிழக மக்களுக்கு நல்லது செய்தது கிடையாது.... அவர்கள் எப்படி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுப்பார்கள்..... கர்நாடகாவில் ஆள்வது இண்டி கூட்டணி கட்சி தானே... பிறகு தண்ணீர் திறப்பதில் என்ன பிரச்சினை.... மனமிருந்தால் மார்க்கமுண்டு.... மனமில்லை அதனால் தண்ணீர் இல்லை..... அவ்வளவு தான் !!!


சூரியா
நவ 07, 2025 06:11

கடலுக்குத் தண்ணீரை அனுப்பும் கால்வாய்கள் சரியாக உள்ளன. காவிரி நீரை அனுப்பினால் அப்படியே அதைக் கடலில் அனுப்பிவிடுவோம்!


Srinivasan Narasimhan
நவ 07, 2025 02:00

அபாபாவின் தம்பியினா கட்சிதான் கர்நாடகாவில் ஆள்கிறது அப்பரம் என்ன பிரச்சனை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை