உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜனாதிபதி கடிதத்தை திருப்பி அனுப்புங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

ஜனாதிபதி கடிதத்தை திருப்பி அனுப்புங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

'மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்தது சரியானதுதான்; எனவே இந்த விவகாரத்தில் ஜனாதிபதி விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தை திருப்பி அனுப்ப வேண்டும்' என, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.ஒப்புதல் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கவர்னர் மற்றும் ஜனாதிபதிக்கு குறைந்தபட்சம் ஒரு மாதம் முதல் அதிகபட்சம் மூன்று மாதம் வரை கால வரம்பை நிர்ணயித்து தீர்ப்பு வழங்கியிருந்தது.உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் மீது விளக்கம் கேட்டு, 14 கேள்விகளை எழுப்பி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு கடிதம் எழுதியிருந்தார்.இந்த கடிதத்தை தனி மனுவாக விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. பின் இந்த மனுவை விசாரிக்க, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வும் அமைக்கப்பட்டது.இந்த விவகாரத்தில் கடந்த வாரம் விசாரணை நடத்திய அரசியல்சாசன அமர்வு, மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ் அளித்தது.அ தன்படி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் ம னு தாக்கல் செய்துள்ள து.அதன் விபரம்:மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் கால வரம்பு நிர்ணயித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் சரியானது. ஜனாதிபதி எழுப்பிய, 14 கேள்விகளில், 11 கேள்விகளுக்கு அந்த தீர்ப்பிலேயே பதில் அளிக்கப்பட்டுள்ளது.எனவே இந்த விவகாரத்தை தொடர்ச்சியாக அரசியல்சாசன அமர்வு விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, ஜனாதிபதியின் கடிதத்தை அவருக்கு உச்ச நீதிமன்றம் திருப்பி அனுப்பலாம்.மேலும் , உச்ச நீதிமன்றம் ஒரு விவகாரத்தில் முடிவெடுத்து தீர்ப்பு வழங்கிய பின், அதில் சந்தேகம் இருக்கிறது என யாரும் கேட்க முடியாது.ஒரு சட்டம் தொடர்பான விவகாரத்தில் எழும் கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் எந்த முடிவும் செய்யாத போது தான் ஜனாதிபதி கேள்வி எழுப்ப முடியும்.மீண்டும் விசாரணை எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை சீராய்வு மனு எதையும் தாக்கல் செய்யாத நிலையில், மத்திய அரசும் இதை ஏற்றுக் கொண்டது என்று தான் பொருள்.எனவே, ஜனாதிபதியின் கடிதத்தின் அடிப்படையில், இந்த விவகாரத்தை மீண்டும் முழு மறு விசாரணைக்கு உட்படுத்துவது என்பது நடைமுறையில் இருக்கக்கூடியது அல்ல.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் கேரள அரசும் பதில் மனு தாக்கல் செய்தது. டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Nagarajan S
ஜூலை 29, 2025 20:23

கவர்னர், ஜனாதிபதி அதிகாரத்தை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு கட்டுப்படுத்தி தீர்ப்பளித்தது ஏற்க முடியாதது.


Ravi Kulasekaran
ஜூலை 29, 2025 15:59

தமிழ் நாடு கேரளா ஆந்திரா மாநிலங்கள் மட்டுமே இந்தியா அல்ல நீக்கு மண்டை இந்தியாவின் மொத்த மாநிலங்கள் எத்தனை யூனியன் பிரதேச எத்தனை என்று உங்களுக்கு துண்டு சீட்டுக்காரன்கள் எழுதி வருபவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் அதில் பாஜக எத்தனை மாநிலங்களில் ஆட்சி செய்து வருகின்றன


ஆரூர் ரங்
ஜூலை 29, 2025 15:19

மாநில ஆளும் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எத்தனை காலம் வேண்டுமானலும் எடுத்துக் கொள்ளலாம்.கடைசிவரை நிறைவேற்றாமலும் இருக்கலாம். ஆனால் மத்திய சட்டத்திற்கு எதிர்மறையான சட்டத்தை நிறைவேற்றினால் கவர்னர் காலம் தாழ்த்தாமல் உடனே அப்படியே ஏற்றுக் கொண்டு கையெழுத்திட வேண்டும் என்பது நியாயமில்லை.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2025 15:03

மாநில ஆளும் கட்சிகள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எத்தனை காலம் வேண்டுமானலும் எடுத்துக் கொள்ளலாம்.கடைசிவரை நிறைவேற்றாமலும் இருக்கலாம். ஆனால் மத்திய சட்டத்திற்கு எதிர்மறையான சட்டத்தை நிறைவேற்றினால் கவர்னர் காலம் தாழ்த்தாமல் உடனே அப்படியே ஏற்றுக் கொண்டு கையெழுத்திட வேண்டும் என்பது நியாயமில்லை.


ஆரூர் ரங்
ஜூலை 29, 2025 14:59

கவர்னர், ஜனாதிபதி அதிகாரத்தை இரண்டே நீதிபதிகள் கொண்ட அமர்வு கட்டுப்படுத்தி தீர்ப்பளித்தது ஏற்க முடியாதது. முழு அரசியல்சாசன அமர்வுதான் அப்படிப்பட்ட விவகாரங்களை விசாரிக்கலாம். நீதிபதிகள் தங்களுக்கே இல்லாத நேரக் கட்டுப்பாடுகளை ஜனாதிபதிக்கு விதிப்பது விசித்திரமானது. அபத்தமானதாகவும் எண்ண வேண்டியுள்ளது.


அருண், சென்னை
ஜூலை 29, 2025 07:05

இன்னும் 8 மாதம் பொறுங்கள் யுவர் ஹானர், இதே வக்கீல்கள் அதிமுக/வேறு 2026ல் ஆட்சி பிடித்தால் அப்படியே உல்டாவா வாதிடுவார்கள், ஆளுனருக்கோ, இந்திய ஜனாதிபதிக்கு இல்லாத அதிகாரம், எப்படி மாநில முதல்வருக்கு வந்தது என்று இதே உச்சநீதிமன்றத்தில் வாதிடுவார்கள்...முட்டு கொடுக்க ஊபீஸ். எப்பவும் தயார் நிலையில் இருக்கும்


சாமானியன்
ஜூலை 29, 2025 06:17

ஒரு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் மூன்று மாதம் அவகாசம் தந்து நிலைமை சீரடையாவிட்டால் மத்திய அரசு மாநில அரசை கலைக்க வழிவகை செய்ய வேண்டும்.


senthil kumar.k
ஜூலை 29, 2025 05:37

இவர்கள் நீதிமன்றத்துக்கு அறிவுரை வழங்குகிறார்களா?நீதிமன்றம் இதை எப்படி எடுத்துக்கொள்ளும்?


நிக்கோல்தாம்சன்
ஜூலை 29, 2025 04:32

இவர்கள் நாட்டை அன்று வெள்ளைக்காரனிடம் காட்டிக்கொடுத்தவர்கள் வம்சாவழியினர் என்பதனை மீண்டும் மீண்டும் நிரூபிக்கின்றனர் மக்கள் வெகுண்டெழுந்தால் மாத்திரம் இது போன்ற தீய சக்திகள் நசுக்கப்படுவர்


Kasimani Baskaran
ஜூலை 29, 2025 03:47

எந்த வழக்கையாவது இவர்கள் குறிப்பிடும் காலத்துக்குள் முடித்து வைத்து இருக்கிறார்களா? ஆனால் ஜனாதிபதிக்கு மட்டும் காலக்கெடு விதிக்க முனைகிறார்கள். சாத்தியமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை