உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுவர்களால் நிகழும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்; அதிர்ச்சி தகவல்

சிறுவர்களால் நிகழும் சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்; அதிர்ச்சி தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 18 வயதுக்கு குறைவானோர் வாகனங்களை இயக்கியதால் ஏற்பட்ட விபத்துக்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2023-24ம் ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 2,063 விபத்துக்கள் பதிவாகியுள்ளன. நாடு முழுவதும் நிகழ்ந்த சாலை விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்த விபரங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் பார்லிமென்டில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதில், நாடு முழுவதும் 2023-24ம் நிதியாண்டில் சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டிச் சென்றதால், 11,890 சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. அதிகபட்சமாக தமிழகத்தில் 2,063 விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. மத்திய பிரதேசம் மற்றும் மஹாராஷ்டிராவில் 1,000க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 645 விபத்துங்கள் அரங்கேறியுள்ளன. லட்சத்தீவில் மைனர்களால் எந்த விபத்துக்களும் பதிவாகவில்லை. நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டிய 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களிடம் இருந்து ரூ.48 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், வாகனங்களின் உரிமையாளர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் அல்லது சிறுவர்களிடம் வாகனங்களை கொடுத்து ஓட்ட அனுமதித்த வழக்குகளே அதிகமாகும். அதிகபட்சமாக பீஹாரில் ரூ.44.27 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

m.arunachalam
மார் 26, 2025 22:49

தன்னிலை உணராமல் தன்னையே வியந்து கொள்ளும் பிறவிகள் அதிகம் நம் தமிழ் நாட்டில் . காவல் துறை மற்றும் வாகன ஓட்டுநராக பணி செய்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மிக மிக அதிகம் .


Sivagiri
மார் 26, 2025 20:50

இப்போதெல்லாம் கொலை கொள்ளை கூலிப்படையில் , மைனர் புள்ளிங்கோ - களுக்கு , டிமாண்ட் இருக்கு . . . சிறையில் கிடையாது , சீர்திருத்த பள்ளி சில நாட்கள்தான் , வெளியே ஜாலியா வந்து , மறுபடி , மாட்டிக்காம தெளிவா குற்றம் பண்ராய்ங்க . . .


Sivagiri
மார் 26, 2025 20:46

சிறுவர்கள் அல்ல . . .புள்ளிங்கோ . . . நம்ம புள்ளிங்கோ ரொம்ப அட்வான்சு . . . பைக் ஓட்றது . . ரோட்ல ரௌசு பண்றது . . ஸ்கூல் பொண்ணுங்கள ரௌசு பண்றது . . . அட கேங்கா ரேப் பண்றது கூட சாதாரணப்பா . . . சிறுவர்கள் என்ற வயது வரம்பை 13 ஆக குறைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் . . . 13 வயதுக்கு மேல் குற்றம் செய்தால் அவர்களை மற்ற கைதிகள் போல கடுங்காவல் ஜெயிலில்தான் போட வேண்டும் . .


நிக்கோல்தாம்சன்
மார் 26, 2025 20:34

அரசு இயந்திரம் முட்டாள்களால் நிரம்பி வழியும்போது தவறுகளும் அதிகம் நிகழும்


தமிழ்வேள்
மார் 26, 2025 19:45

100 சிசிக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தேவையற்றவை..நகர பகுதிகளில் நாற்பது அல்லது ஐம்பது கிமீ வேகத்திலேயே தொடந்து பத்து நிமிடங்களுக்கு மேல் எந்த டூ வீலரையும் இயக்க இயலாத நிலையில் உள்ளது டிராஃபிக் லட்சணம்.இந்த அழகில் 240 கி.மீ வேகம் செல்லக்கூடிய 850 சிசி பைக் எல்லாம் இந்த நாட்டுக்கு தேவையா? சாலை விபத்துகளை ஏற்படுத்தும் விதமாக வே இங்கு வாகன சந்தை கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது...


Oru Indiyan
மார் 26, 2025 19:17

தினமும் நாங்கள் பார்க்கும் இந்த கூத்து. காவல்துறை கை கட்டி கொண்டு இருப்பார்கள். இந்த சிறுவர்களின் பெற்றோர்களை முதலில் அடித்து நிமிர்த்த வேண்டும்.


K.SANTHANAM
மார் 26, 2025 19:10

எங்க ஊரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு இரு சக்கர வாகனத்தில் பறக்கின்றனர். பெற்றோர் பார்த்து திருந்தினால் ஒழிய வேறு வழியில்லை.


Kulandai kannan
மார் 26, 2025 18:59

எல்லாப் பெருமையும் புல்லிங்கோவுக்கே


sridhar
மார் 26, 2025 18:57

முதல்வருக்கு விளக்கி சொல்லுங்கள் , பெருமை என்று நினைத்து வெளியில் பேசி விடப்போகிறார். ஏற்கனவே ஓணம் பண்டிகை ஒரு கிறிஸ்துவ பண்டிகை என்று நினைத்து வாழ்த்து சொல்லுகிறார் .


Ramesh Sargam
மார் 26, 2025 18:54

இதுபோன்ற விஷயங்களில் தமிழகம் எப்பொழுதும் முதல் இடம். நல்ல விஷயங்களில் தமிழகம் கடைசி இடம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை