உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!

நடைப்பயிற்சி சென்ற தமிழக எம்பி சுதாவிடம் நகை பறிப்பு!

புதுடில்லி: டில்லியில் நடைபயிற்சி சென்ற மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி., சுதாவிடம் 4 சவரன் நகையை மர்மநபர்கள் பறித்து கொண்டு தப்பி ஓடினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டில்லியில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதற்கு அனைத்து மாநில எம்.பி.,க்களும் டில்லியில் தங்கி உள்ளனர். அவர்கள் மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்று தனது தொகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகள் குறித்து விவாதம் நேரத்தில் முன் வைத்து வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=uj5hslf9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 04) டில்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, மயிலாடுதுறை தொகுதி காங் எம்பி சுதாவிடம் செயின் ஹெல்மெட் அணிந்தபடி வந்த அடையாளம் தெரியாத நபர்கள் 4 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பியோடினர்.இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் மர்மநபர்களை தேடி வருகின்றனர். டில்லியில் எம்.பி.,யிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமித்ஷாவுக்கு கடிதம்

செயின் பறிப்பு தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ள எம்பி சுதா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர், ''செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்.ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற போது என்னுடைய கழுத்தில் காயம் ஏற்பட்டது. உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மர்மநபரை பிடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

எம்பி சுதா பரபரப்பு பேட்டி

டில்லி தன்னிடம் செயின் பறித்தது தொடர்பாக, எம்.பி., சுதா நிருபர்களிடம் கூறியதாவது: நானும் சல்மா எம்.பி.,யும் நடைபயிற்சிக்கு சென்றபோது எனது செயின் பறிக்கப்பட்டது. உதவி கோரிய போது ஒருவர் கூட உதவ முன்வரவில்லை. ஹெல்மெட் அணிந்து எதிரே வந்த மர்மநபர் எனது தங்க செயினை பறித்து கொண்டு தப்பினர். எனது கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டது. நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நாட்டில் எம்பிக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறிதான். டில்லியை பெண் முதல்வர் ஆளும் நிலையில் இங்கு பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 66 )

Jack
ஆக 05, 2025 15:16

செயின் பறிப்பு என்பதை விட நகை விரும்பி என்று விளம்பலாமா


VSMani
ஆக 05, 2025 10:34

இத்தனை நாள் இந்த எம்பி எங்கே இருந்தார் ?


xyzabc
ஆக 04, 2025 19:49

4 சவரன் ஒரு எம் பி க்கு பெரிய தொகையே கிடையாது.


sankaranarayanan
ஆக 04, 2025 18:51

எம்.பி. யாக ருக்கும் ஒரு பெண்மணி எங்காவது தனியாக நடை பயணம் கொள்ளலாமா இதை அவரே வரவழைக்கொண்டு இப்போது திண்டாடுகிறார் நாம்தான் உஷாராக இருக்க வேண்டும் இவருடைய பாது காவலர் அல்லது வீட்டில இருக்கும் நபர்களோடு சென்றால் என்ன இது யாருடைய தவறு


JaiRam
ஆக 04, 2025 17:22

அது திருத்த அல்ல முறைகேடு இப்படிக்கு திருட்டு திராவிடன்


sasidharan
ஆக 04, 2025 16:32

அந்த திருடன் நிச்சயமாக தமிழ் நாட்டு காரனாகத்தான் இருப்பான் .


V K
ஆக 04, 2025 15:43

உங்களுடன் ஸ்டாலின் சொன்னவுடன் நீங்க கொஞ்சம் உஷாராக இருந்து இருக்கணும்


SUBBIAH RAMASAMY
ஆக 04, 2025 14:56

அரசியல் ஆதாயத்துக்காக தானாகவே ஏற்படுத்திய சம்பவம். பப்புவின் கூட்டம் தானே. இதைதான் செய்வார்கள்.


A.Gomathinayagam
ஆக 04, 2025 14:14

டெல்லியில் வாழும் தமிழ் பெண்கள் யாரும் தங்க நகைகள் அணிவதில்லை. தாலி சைன்னுக்கு பதிலாக கருமணி செயின் தான் அணிகிறார்கள் .ஜீரணிக்க முடியாத உண்மை .தலை நகர் டெல்லி தங்க நகைகள் அணிவித்து வரும் மகளிருக்கு பாதுகாப்பான நகரம் அல்ல பல ஆண்டுகளாக இது தான் நிலைமை .


Umapathy AP
ஆக 04, 2025 14:08

டில்லியில் பேசியபடியே, தமிழ்நாட்டில் உங்கள் கூட்டணியிடமும் சொல்லுங்கள் தமிழ்நாட்டில் செயின் பறிப்பு மிக அதிகம் என்பதை, தனக்கு வந்தாதான் தெரியும் தலைவலி,வயிற்றுவலி என்பதைப் உணர்ந்திருப்பீர் ,இனியாவது சட்ட ஒழுங்கு குறைகளை தமிழ்நாட்டில் வாய்திறந்து பேசுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை