உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை

மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை

மைசூரு: ''மேகதாது அணை திட்டத்தால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. நல்ல மழை பெய்ததால், இம்முறை தமிழகத்திற்கு கூடுதலாக, 150 டி.எம்.சி., தண்ணீர் திறந்து உள்ளோம்,'' என, முதல்வர் சித்தராமையா கூறினார். தமிழகம் - கர்நாடக விவசாயிகளின் உயிர்நாடியாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே, பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள ராம்நகரின் மேகதாது பகுதியில் அணை கட்ட, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. 'இங்கு அணை கட்டினால், தங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்' என, தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் தன் முடிவில் உறுதியாக உள்ள கர்நாடக அரசு, 'மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்' என, கூறி வருகிறது. அணை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 150 டி.எம்.சி., இந்நிலையில், மைசூரில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி: மேகதாது அணை திட்டத்தால், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. இத்திட்டத்தால் அம்மாநில விவசாயிகள் நலனுக்கு தீங்கு ஏற்படாது. இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. கடந்த, 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் கூறிய தீர்ப்பில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து, 177.25 டி.எம்.சி., தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இம்முறை நாங்கள் கூடுதலாக, 150 டி.எம்.சி., தண்ணீர் திறந்து உள்ளோம். எத்தினஹோலே திட்டத்திற்கு மத்திய அரசு எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை; விதிக்கப் போவதும் இல்லை. அந்த திட்டத்தை செயல் படுத்துவதில் உறுதியாக உள்ளோம். மழையால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளன. இந்த ஆண்டு போதுமான மழை பெய்துள்ளது. தடுப்பு கம்பி வடமாவட்டங்களில் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. அங்கு 90 சதவீத பயிர் இழப்பு பதிவாகி உள்ளது. மாநிலம் முழுதும், 11 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. வறண்ட பகுதியில் பயிர்களை விளைவித்துள்ள விவசாயிகளுக்கு தலா, 31,000 ரூபாயும்; பாசன பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தலா, 25,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும். மூத்த வக்கீல் கபில் சிபல் புத்தக வெளியீட்டு விழாவுக்காக, வரும் 15ம் தேதி டில்லி செல்கிறேன். ராகுலை சந்திக்க நேரம் கேட்டு உள்ளேன். நேரம் கொடுத்தால் அமைச்சரவை மாற்றம் பற்றி விவாதிப்பேன். இல்லாவிட்டால் அன்று இரவே பெங்களூரு திரும்பி விடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

theruvasagan
நவ 12, 2025 13:24

கான்கிராஸ் ஜனநாயக முறையில் செயல்படும் கட்சியா இல்லை குடும்ப ஆதிக்க கட்சியா.


Vasan
நவ 12, 2025 13:00

மழைக்காலங்களில் அபரிவிதமான காவேரி ஆற்று நீர் வங்காள விரிகுடா கடலில் சென்று கலக்கிறது. இதற்கு மறுப்பு ஏதும் இருக்க முடியாது. நீர் விரயத்தை தவிர்க்க முடியாதென்றாலும், குறைக்கலாமல்லவா? இதற்குத்தான் இந்த புதுப்புது அணைகள் கட்டும் திட்டம். காவிரி நீரை சேகரிக்க வேண்டுமென்றால், ஒன்று தமிழகம் அணை கட்ட வேண்டும், இல்லையேல் கர்நாடகம் அணை கட்டவேண்டும். தமிழகத்தில் காவிரி பாயும் பொழுது, ஒகேனக்கல் நீங்கலாக, பெரும்பாலும் சமவெளி பரப்பிலேயே செல்கின்றது. எனவே தமிழக மாகாண பரப்பிற்குள் புது அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அவ்வளவாக இல்லையென்றே அறிய முடிகிறது. நிலைமை இப்படியிருக்க, கர்நாடக மாகாண பரப்பிற்குள், அணை கட்டுவதற்கான பூகோள ரீதியான அமைப்புகள் சாத்தியமாக இருப்பதாக அறியப்படுகிறது. எனவே, கர்நாடக மாகாண பரப்பிற்குள் அணை கட்டுவதே சாலச்சிறந்தது. இதனால் பலனடையப்போவது இரு மாகாணங்களும் தான். சொல்லப்போனால் பூகம்பம் போன்ற ஆபத்து கர்நாடக மாகாணத்திற்க்கே அதிகம். அதனால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயமும் கர்நாடகத்திற்கே. எனவே, பேராபத்தின்றி, செலவின்றி. இத்திட்டத்தால் பெரும்பயன் அடையப்போவது தமிழகமே.


visu
நவ 12, 2025 14:50

நதிகளை தேசியமயமாக்கி மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொடுத்துவிட்டு எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டுங்கள் பலமாநிலங்களிலும் நீர் பிரச்சினைக்கு காரணம் அணையின் கட்டுப்பாடு மாநில அரசு கட்டுப்பாட்டில் இருப்பதே அரசியலுக்கு பயன்படுத்தப்படுகிறது


அப்பாவி
நவ 12, 2025 11:37

தமிழகத்தை ஆண்டவர்கள், ஆள்பவர்கள் ... இவருக்கும் தெரிஞ்சிப் போச்சா?


Arul
நவ 12, 2025 10:29

இது என் தாழ்மையான விண்ணப்பம். எங்களுக்கு எது சிறந்தது என்று எங்கள் அப்பா முடிவு செய்வார்....இப்படிக்கு ஒட்டு போடுபவன்...


கண்ணன்
நவ 12, 2025 09:40

இவர் உலக விஞ்ஞானி கேட்டுக் கொள்ளவும்


நிக்கோல்தாம்சன்
நவ 12, 2025 09:12

காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் திமுக என்ன சொல்லப்போகிறது ?


R.RAMACHANDRAN
நவ 12, 2025 09:09

மழை அபரிமிதமாக பொழியும்போது அணைகள் நிரம்பி வழிவதால் கூடுதலாக தண்ணீர் கொடுத்துள்ளதாக கூறிக் கொண்டுள்ளனர்.பருவமழை குறைவாக பொழியும் போதெல்லாம் தனக்கு மிஞ்சினால் தான் தர்மம் செய்ய முடியும் என்று அடாவடி செய்கின்றனர். இந்நிலையில் அணை கட்ட தமிழ்நாடு ஒத்து வர வேண்டும் என எதிர்ப் பார்ப்பது தவறு.


Ranganathan
நவ 12, 2025 08:38

இது போல் இரு மாநிலங்கள் சம்மந்தப்பட்ட நதி நீர் நிர்வாகத்தில், அணை கட்ட அனுமதி தரலாம். ஆனால் அந்த அணையின் நிர்வாகம் பாதிக்கபடும் மாநில அரசின் கீழ் முழுமையாக கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்று கொண்டால் தாராளமாக 100 அணை கட்ட கூட அனுமதிக்கலாம்.


பேசும் தமிழன்
நவ 12, 2025 07:34

நீங்கள் பாதிப்பில்லை என்று கூறினால்... அது கண்டிப்பாக நல்லதாக இருக்காது..... அது தான் கடந்த கால வரலாறு.


duruvasar
நவ 12, 2025 09:14

ஹேமாவதி அணை கட்ட கருணாநிதி ஐயா எவ்வளவு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு அனுமதியை வழங்கினார் என் திமுகவின் வரலாறு தெரியாமல் பேசுகிறீர்கள். கருணாநிதியின் மகனுக்கு வரலாறு தெரியாது என்பது போல கருத்து எழுதுவது முறையல்ல


Ram
நவ 12, 2025 06:43

எதுக்கு அணை , ஏற்கனவே இருக்கும் காவிரியிலிருந்து , தமிழகத்திற்கு கிடைக்கவேண்டியதை கொடுக்க முரண்டுபிடிக்கிறார்கள்