உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பக்தர்கள் தாகம் தணிக்கும் தமிழக இளநீர்

பக்தர்கள் தாகம் தணிக்கும் தமிழக இளநீர்

சபரிமலை:பம்பையில் தினமும்25 ஆயிரம் முதல் 27 ஆயிரம் வரை இளநீர் விற்பனை ஆகிறது.இவை தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்படுகிறது.பம்பையில் இருந்து மலை ஏறும் பக்தர்களையும், சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு இறங்கும் பக்தர்களையும்இலக்காகக் கொண்டு அடுத்தடுத்து இரண்டு இளநீர் கடைகள் செயல்படுகிறது.ஒரு பந்தலுக்கு 80 லட்சம் மற்றொரு பந்தலுக்கு 95 லட்சம் ரூபாய் குத்தகை கட்டணம் செலுத்த வேண்டும்.இரவு பகல் இடைவெளி இல்லாமல் 20 பேர் இளநீர் வெட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். ஒரு இளநீரின் விலை 40 ரூபாய். தினமும் 10 லட்சம் ரூபாய் வரை விற்பனை நடைபெறுகிறது.தமிழகத்தின் கம்பம், தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து இளநீர் கொண்டுவரப்படுகிறது. ஒரு லோடில் 5500 இளநீர் கொண்டுவர முடியும். தினமும் ஐந்து லோடு இளநீர் வருகிறது. கூட்டம் அதிகரிக்கும்போது எட்டு லாரி இளநீரும் வரும்.தேனி மாவட்டம் சீலையம்பட்டியை சேர்ந்த பாண்டியன் என்பவர் இந்த இளநீர் கடைகளை நடத்தி வருகிறார்.இளநீர் விற்பனையால் சபரிமலை சீசனின் லாபம் தமிழக விவசாயிகளுக்கும் கிடைக்கிறது என பாண்டியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ