உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்

பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.அவுரங்காபாத் நகரில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாதுகாப்புத் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெற செய்ய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2014ல் பாதுகாப்பு துறையில் ரூ.600 கோடியாக இருந்த ஏற்றுமதி 2024ல் ரூ.24 ஆயிரம் கோடியாக அதிகரித்து உள்ளது. ஏற்றுமதியை 2029- 30ல் ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்துவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. தற்போது, பாதுகாப்பு தளவாடங்கள் சார்ந்த உற்பத்தி மதிப்பு ரூ.1.60 லட்சம் கோடியாக உள்ளது. இதனை ரூ.3 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஜெய்ஹிந்த்புரம்
ஏப் 19, 2025 03:55

முதுகில் குத்துவது, கூட இருந்தே குழி பறிப்பது இன்றைய இந்திய வெளியுறவு கொள்கையாக விசுவகுரு வடிவமைத்துள்ளார். BRICS கூட்டணியில் இருந்து கொண்டு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் காலில் விழுவது. இது பரவாயில்லை. ஆனால், ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் பெட்ரோலியத்தை வாங்கி கோடீஸ்வர நண்பர்கள் கொள்ளை லாபம் அடிக்க விட்டு, ஆயிரம் கோடிக்கு துப்பாக்கி குண்டுகளை ஐரோப்பிய நாடுகள் மூலம் உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்து, துரோகம் செய்வது, அந்த குண்டுகளை வைத்து உக்ரைன் ரஷிய வீரர்களை கொல்வது என்பது, உள்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுக்கு பாஜாக்கா செய்யும் துரோகம் போல உள்ளது. பிரிக்ஸ் கூட்டணியில் இருந்து இந்தியா விரட்டப்படும் நேரம் நெருங்குகிறது எனலாம்


மீனவ நண்பன்
ஏப் 19, 2025 05:13

ஹமாஸுக்கு ஆதரவாயிருந்தா அங்கே சென்று சமூக சேவை செய்யலாம் ..இங்கே மோதிய நெனச்சு பேதியாவரது நிக்கும்


vivek
ஏப் 19, 2025 14:43

200 ரூபாய் சொம்பு.. போவியா அங்கிட்டு


V SURESH
ஏப் 19, 2025 00:32

ஒரு லக்ஷம் கோடியாக பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி உயர வாழ்த்துக்கள்


Ramesh Sargam
ஏப் 18, 2025 20:42

உள்நாட்டு அரசியல் தீவிரவாதிகளிடமிருந்து மக்களை முதலில் காப்பாற்றுங்கள்.


புதிய வீடியோ