உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாஸ்மாக் வழக்கு: அரசு மேல்முறையீடு

டாஸ்மாக் வழக்கு: அரசு மேல்முறையீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டாஸ்மாக் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. டாஸ்மாக்கில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, அதன் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இதன் முடிவில், டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது. இந்த சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்க கோரி, தமிழக அரசும், டாஸ்மாக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'சட்டவிரோத பண பரிமாற்றம் என்பது நாட்டு மக்களுக்கு எதிரான மிகப்பெரிய குற்றம். அதை கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளது. எனவே அதனை சட்டவிரோதம் என கூறுவது சரியாக இருக்காது' என கூறி, மனுக்களை தள்ளுபடி செய்தது.இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் நேற்று மேல் முறையீடு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

RAMESH
ஏப் 26, 2025 16:22

இதே உச்ச நீதிமன்றம் தான் டெல்லி முதல்வரை சிறைக்கு அனுப்பியது..கவனம் கவனம் கவனம்.....எட் சோதனை செய்து விட்டு அமைதியாக இருந்தது.. ஆனால் தமிழக அரசு நீதிமன்றத்தில் சட்டவிரோம் என வழக்கு தொடர்ந்தது....


Ragupathi
ஏப் 26, 2025 11:32

யார் அப்பன் வீட்டு பணத்துல உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு எப்படியாவது வழக்கை இழுத்தடித்து ஆதாரங்களை மறைத்து தேர்தல் வரை குற்றத்திலிருந்து தப்பிவிடலாம்ன்னு கையாலாகத ஊழல் அரசு. நோ சூடு நோ சொரணை.


GMM
ஏப் 26, 2025 11:06

சோதனை சட்ட விரோதம் இல்லை என்ற பின் மேல் முறையீடு அபராதம், எச்சரிக்கை உடன் உச்ச மன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். மது விற்பனை ஒரு ஏமாற்று வருமானம். மக்கள் உடல் ஆரோக்கியம் தொடர்ந்து கெட்டு வருகிறது. மது அருந்தும் நபர் அடையாள அட்டை பெற்று, மதுவை நிறுத்தும் வரை வாக்குரிமையை நிறுத்த முடியும். அதிக உடல் சுகம் தேடும் நபர் வாக்கு தேச நலம் கருதி இருக்காது.


Tetra
ஏப் 26, 2025 16:48

நீதிபதிகளே குடிக்கும் போது அவர்கள் ஏன் தடை செய்யப்போகிறார்கள்


sridhar
ஏப் 26, 2025 09:04

உச்ச நீதிமன்றம் என்பது பொதுச்ச்சொல். விசாரிக்கும் நீதிபதிக்கு ஏற்ப தீர்ப்பு வரும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 26, 2025 09:02

மக்கள் வரிப்பணம் தேசவிரோத திமுக அரசால் வீணடிக்கப்படுகிறது ....


sankaranarayanan
ஏப் 26, 2025 08:20

டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.இதை எதிர்த்து திராவிட மாடல் அரசு உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையிலிடு செய்தது வெட்கமாக இல்லையா ஊழலை மறைக்க மேல் முறையிடா இதற்கு எவ்வளவு மக்கள் பணம் வீணாகும் உச்ச நீதி மன்றம் இத உடனே தள்ளுப்படி செய்து, விசாரணையை நீடிக்க உத்திரவு இடவேண்டும்


ரவி
ஏப் 26, 2025 07:49

இப்போதாவது உச்ச நீதிமன்றம் இவர்களின் நரித்தந்திரத்தை புரிந்து கொள்கிறதா பார்ப்போம்.


Tetra
ஏப் 26, 2025 16:52

அவர்களுக்கு தெரியாதா என்ன? பொன்முடிக்கு மந்திரி பதவியை‌ தங்களது வானளாவிய அதிகாரத்தால் தர வில்லையா?


P. S. Ramamurthy
ஏப் 26, 2025 06:53

Excellent yes Tamil Nadu Government treating SC the way they got verdict on GOVERNOR.


உண்மை கசக்கும்
ஏப் 26, 2025 04:39

வெட்கமே இல்லையா தமிழக அரசே மீண்டும் மீண்டும் ஒரு ஆப்பு வாங்க போகும் துப்பு கெட்ட அரசு


anonymous
ஏப் 26, 2025 03:06

சட்டசபையில் ED சோதனை செய்தது தவறு என தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு அனுப்பி வைத்தால் அவர் அனுமதி மறுப்பார். உடனே உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து சென்றால் உச்சநீதிமன்றம் உடனே சட்டமாக்கிக் கொடுப்பார்கள்.


சமீபத்திய செய்தி