உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாடம் புகட்டுங்கள்!

பாடம் புகட்டுங்கள்!

பீஹாரில், மகளிரை கவர உதவித்தொகை வழங்கப்படுகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு தங்களின் ஓட்டுகளே முக்கியம். அவர்களின் உண்மை நோக்கத்தை அறிந்து, வரும் சட்டசபை தேர்தலில் பெண்கள் அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். பிரியங்கா லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

விவாதிக்க தயார்!

மேற்கு வங்க அரசுக்கு வழங்க வேண்டிய 2 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு எப்போது விடுவிக்கும்? எங்கள் கட்சியின் இக்குற்றச்சாட்டை மறுத்தால், அவர்களுடன் நான் விவாதிக்க தயார். எங்கள் மாநில நிதியை, பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு பயன்படுத்துகிறது. அபிஷேக் பானர்ஜி லோக்சபா எம்.பி., திரிணமுல் காங்.,

மவுனம் காப்பது ஏன்?

சட்டசபை தேர்தலையொட்டி, கேரளாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் ஆயத்தமாகி வருகிறது. இதற்கு, 'இண்டி' கூட்டணி ஆளும் மாநில முதல்வர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், கேரள மு தல்வர் பினராயி விஜயன் மவுனம் காப்பது ஏன்? கே.சி.வேணுகோபால் தேசிய பொதுச்செயலர், காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை