உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3வது குழந்தையை மறைத்ததால் வேலையை இழந்த ஆசிரியை

3வது குழந்தையை மறைத்ததால் வேலையை இழந்த ஆசிரியை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால் : மத்திய பிரதேசத்தில், தனக்கு மூன்றாவது குழந்தை இருப்பதை மறைத்த ஆசிரியையின் வேலை பறிபோனது.மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால், லோக்சபா தொகுதி மறுவரையறையில் தமிழகம் உட்பட தென் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என, இங்குள்ள அரசியல்வாதிகள் கூறி வருகின்றனர்.

நடைமுறை

அதனால், அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும்படி மக்களுக்கு ஆலோசனை கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்கையில், மத்திய பிரதேசத்தில் 2000ம் ஆண்டில் இருந்து இரண்டு குழந்தைகள் கொள்கை நடைமுறையில் உள்ளது. இதன்படி, இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றால், அரசு ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும்.இந்த கொள்கை உருவாக்கப்பட்டு, 25 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் ஒரு ஆசிரியை, தன் மூன்றாவது குழந்தை குறித்த தகவலை மறைத்ததால், பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.சத்தார்புர் மாவட்டம் தமோராவில் உள்ள அரசு பள்ளி ஆசிரியை ரஞ்சிதா சாஹு, சட்டவிதிகளை மீறி மூன்றாவது குழந்தை பெற்றதாக, 2022ல் புகார் எழுந்தது. இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டும், அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, அவரை பணியில் இருந்து நீக்கி சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதற்கு முன்னரும், இதே காரணத்துக்காக பள்ளி கல்வித் துறையில் பலர் வேலையை இழந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் பள்ளிக் கல்வித் துறை, 1,200 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், விசாரணை நடந்து வருகிறது.

தெலுங்கானா

இரண்டு குழந்தைகள் தொடர்பாக தேசிய அளவில் எந்த ஒரு கொள்கையும் இல்லை. அதே நேரத்தில் ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, குஜராத், ஒடிஷா, மத்திய பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் இது தொடர்பாக சட்டங்கள் உள்ளன.இது, பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் அல்ல; ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் இரண்டு குழந்தைக்கு மேல் உள்ளவர்கள், தேர்தல்களில் போட்டியிட முடியாது. அதிக குழந்தைகள் பெற்றால் தொகுதிகள் குறையாது. ஆனால், அதே நேரத்தில் வேலை போய்விடுமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Neelachandran
ஏப் 11, 2025 13:02

மூன்றாவது குழந்தை இருப்பதால் வேலையை பறிப்பது வக்கிரமானது.


ramesh
ஏப் 11, 2025 11:43

அரசு வேலைவாய்ப்பில் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவருக்கு மட்டுமே அரசுப்பணி என்று சட்டம் கொண்டு வர வேண்டும்


Yes your honor
ஏப் 11, 2025 11:10

இதேபோன்ற சட்டம் தமிழகத்தில் கொண்டுவர வேண்டுமானால், ஒரு மனைவிக்கு இரண்டு குழந்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்னும் ஒரு பாயிண்ட்டையும் கட்டாயமாகச் சேர்க்கவேண்டியதாக இருக்கும்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஏப் 11, 2025 10:48

ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் இரண்டு குழந்தைக்கு மேல் உள்ளவர்கள், தேர்தல்களில் போட்டியிட முடியாது. நல்லவேளை, சட்ட திருத்தம் கொண்டு வந்து இரண்டு மனைவிகள் ன்னு சொல்லாம இருந்தாங்களே


Natchimuthu Chithiraisamy
ஏப் 11, 2025 10:21

தப்பு


Keshavan.J
ஏப் 11, 2025 09:29

ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் இரண்டு குழந்தைக்கு மேல் உள்ளவர்கள், தேர்தல்களில் போட்டியிட முடியாது.அப்போ ஒவாய்சிக்கு யார் அனுமதி கொடுத்தது.


ஆரூர் ரங்
ஏப் 11, 2025 09:27

பிள்ளை பெறுவதை முடிவு செய்யும் சுதந்திர உரிமை எத்தனை பெண்களுக்கு கிடைக்கிறது. கணவன் வீட்டார் அல்லவா முடிவு செய்து திணிக்கிறார்கள்?. ஆசிரியைக்கு பதில் கணவர்தான் தண்டிக்கப்பட வேண்டும்.


Keshavan.J
ஏப் 11, 2025 09:25

அப்போ மூன்று குழந்தை பெற காரணமான ஆணுக்கு வேலை உண்டா. இந்த சட்டம் ஹிந்துகளுக்கு மிகவும் ஆபத்தானது இதை பின்பற்றினால் சில நூறு வருடங்கள் கழித்து ஹிந்து ஜனத்தொகை வேகவாக குறைந்து மைனாரிட்டி ஆகும் வாயிப்பு உள்ளது.


Sampath Kumar
ஏப் 11, 2025 08:57

இது எல்லா ரொம்ப ஓவர் குழந்தை தானே பெற்றது அது தானே வளர்க்க போகுது அப்புறம் வேலை போனால் அவ என்னடா பண்ணுவ?/ கேடு கேட்ட குளறுபடிகள் இதுவும் ஓன்று


N Sasikumar Yadhav
ஏப் 11, 2025 08:31

தமிழகத்தில் இதுபோன்ற சட்டத்தை அமல்படுத்தினால் மர்ம மனிதர்களின் வேலை பறிபோகுமே. அப்புறம் புள்ளிராஜா இன்டி கூட்டணிக்கு ஓட்டுப்பிச்சை யார் போடுவதாம்