உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 259 ரன்னுக்கு ஆல்அவுட்டான நியூசி., அணி: 10 விக்கெட்டையும் ஈஸியா வீழ்த்திய தமிழக வீரர்கள்

259 ரன்னுக்கு ஆல்அவுட்டான நியூசி., அணி: 10 விக்கெட்டையும் ஈஸியா வீழ்த்திய தமிழக வீரர்கள்

புனே: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 259 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. அந்த அணியின் 10 விக்கெட்களையும் தமிழகத்தை சேர்ந்த அஷ்வின் (3), வாஷிங்டன் சுந்தர் (7) கைப்பற்றி அசத்தினர்.இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதில் பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று (அக்.,24) மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் 2வது டெஸ்ட் போட்டி துவங்கியது. 'டாஸ்' வென்ற நியூசி., அணி கேப்டன் டாம் லாதம் பேட்டிங் தேர்வு செய்தார்.

முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் லாதம் (15), வில் யங் (18), அரைசதம் கடந்த கான்வே (76) ஆகியோர் அஷ்வின் பந்துவீச்சில் அவுட்டாகினர். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா (65) தவிர மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசி., 259 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. நியூசிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்களை அஷ்வின் வீழ்த்த, மீதமுள்ள 7 விக்கெட்களையும் மற்றொரு சுழல்வீரரான வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். இவர்கள் இருவரும் தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பு. அடுத்து முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ரோகித் சர்மா, சவுத்தி பந்தில் 'டக்' அவுட்டானார். முதல்நாள் முடிவில் இந்திய அணி 11 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 16 ரன்கள் எடுத்தது. ஜெய்ஸ்வால் (6), சுப்மன் கில் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Ramesh Sargam
அக் 24, 2024 20:44

வாஷிங்டன் சுந்தர் இவ்வளவு நாட்கள் என் புறக்கணிக்கப்பட்டார்? இனியாவது அவரை தொடர்ந்து போட்டிகளில் சேர்க்கவேண்டும். Regional Politics வேண்டாம். திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். ரோஹித் சர்மா எல்லாப்போட்டிகளிலிருந்தும் விலகவேண்டும், டீம் நலன் கருதி.


ramesh
அக் 24, 2024 20:13

தரம் தாழ்ந்த கருத்துக்கள் .இந்த கருத்து போடுபவர்களுக்கு தெரியாத தகவல் .1994 இல் ஜெயலலிதா ஆட்சியின் போது விளம்பர பிரியை ஜெயலலிதா தன்னுடைய பெயரிலேயே பெண்களுக்கான பன்னாட்டு கால்பந்து போட்டி ஜெயலலிதா கப் என்ற பெயரில் சென்னையில் நடத்தப்பட்டது. இதை தெரிந்து கொண்டு கருத்து பதிவு செய்யுங்கள். கிரிக்கெட் யிலும் கேடுகெட்ட அரசியலை நுழைத்து கருத்து போடுவது நல்லது


shakti
அக் 24, 2024 18:39

உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்தும் ஒரு திராவிடனை கிரிக்கெட்டில் கொண்டு வராமல் சுந்தர், அஷ்வின் போன்றவர்களை உலகத்தர விளையாட்டு வீரர்களாக பயிற்சி கொடுத்து ஊக்குவித்து வருவது கண்டிக்க தக்கது .. அட்லீஸ்ட் இன்பநிதியையாவது இந்திய அணியின் கேப்டனாக்க வேண்டும் .. இப்படிக்கு 200 ஓவா உபி


Nellai Ravi
அக் 24, 2024 18:14

தமிழரான வாஷிங்டன் சுந்தரை இந்திய அணியின் கேப்டன் ஆக நியமிக்க வேண்டும். இந்திய அணியில் தமிழக வீரர்களை அதிகம் எடுக்க வேண்டும், எடை ஒதுக்கீடு கொண்டு வந்து பெரியாரின் கனவை நினைவாக்க வேண்டும். இதல்லாம் சாதித்தது, உதயநிதி விளையாட்டு துறை அமைச்சரான பின் தான்.


visu
அக் 24, 2024 18:49

தலையெழுத்து...


ramesh
அக் 25, 2024 16:55

அப்படியே சிதம்பரம் கோயில் தீட்சிதர்ஐயும் இந்தியா அணி கேப்டன் ஆகா நியமிக்கலாம் ரவி


தேச நேசன்
அக் 24, 2024 17:39

இந்தியர்கள்


Kumar Kumzi
அக் 24, 2024 17:37

இருவரும்


SRIDHAAR.R
அக் 24, 2024 17:35

தமிழன்டா இப்ப


Jysenn
அக் 24, 2024 17:27

Tamilargal?


Bala
அக் 24, 2024 16:40

வாழ்த்துக்கள். நமது துணை முதல்வரும், விளையாட்டுத்தறை அமைச்சரினால் தான் இது சாத்தியமாயிற்று என்று கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லாத உடன் பிறப்புக்கள் கூறினாலும் ஆச்சரியம் இல்லை.


சமீபத்திய செய்தி