உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழில்நுட்பக் கோளாறு எதிரொலி: ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ரத்து

தொழில்நுட்பக் கோளாறு எதிரொலி: ரயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு ரத்து

ஹைதராபாத்: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்காக இன்று (மார்ச் 19) ஷிப்ட் முறையில் நடக்க இருந்த 2 தேர்வுகளும் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது.ரயில்வேயில், உதவி 'லோகோ பைலட்' பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு, இன்று (மார்ச் 19) நடைபெற இருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்களுக்கு, தெலுங்கானா மாநிலத்தில் மையம் ஒதுக்கியதற்கு தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aebdx80t&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்வு மையங்களை தமிழகத்திலேயே ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. வேறொரு தேர்வு நடப்பதால் தமிழகத்தில் மையம் ஒதுக்க முடியாது என ரயில்வே தேர்வு வாரியம் கூறியிருந்தது. இந்நிலையில், இன்று (மார்ச் 19) தொழில்நுட்ப காரணமாக, கடைசி நேரத்தில் ஷிப்ட் முறையில் நடக்க இருந்த 2 தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. தேர்வு ரத்து செய்யப்படுவதாக மையங்களில் திடீரென நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருந்தது. திடீரென ரத்து செய்யப்பட்டதால் தெலுங்கானா சென்ற தமிழக தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மீண்டும் தேர்வு நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ரயில்வே தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ray
மார் 19, 2025 21:03

அகில இந்திய அளவிலான தேர்வு நடத்துமளவுக்கு உயர்ந்த பதவியில்லை அந்தந்த ஜோனல் அளவிலேயே நடத்தலாம் அந்தந்த மாநிலத்துக்கொரு ஜோன் என்றாகிவிட்ட நிலையில் மாநில அளவிலேயே தேர்வுமையங்களுக்கு பஞ்சமில்லை இதெல்லாம் அவாளுக்கே உரிய விதண்டாவாதம் அவர்கள் பாஷையில் சொன்னால் கிருத்துருவம் குயுக்தி இதெல்லாம் அவர்களுக்கே உரிய சாடிசம் அடுத்தவர்களை கஷ்டப்படுத்திப்பார்ப்பதில் அலாதி இன்பம். பாவ புண்ணியங்களின் நம்பிக்கை கொண்ட கடவுள் பக்தர்கள் இதுபோன்ற செயல்களுக்கு அந்த கடவுளால் தண்டிக்கப் படுவது நிச்சயம் அரசு அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்.


எவர்கிங்
மார் 19, 2025 14:16

தமிழ் மொழி மட்டுமே தெரிந்தால் கும்மிடிப் பூண்டி தாண்ட முடியாதுதான்..... அதனால்தான் வேற்று மையங்கள் கேட்கின்றனர்


பல்லவி
மார் 19, 2025 14:04

என்றென்றும் தமிழ் மக்களின் உணர்வை சோதித்து பார்க்க வடக்கன் மக்களுக்கு ஒரு விருப்பம் அது வென்றது