உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி; ஓட்டுத்திருட்டு புகார் துாள்துாள்!

பீஹாரில் தேஜ கூட்டணி அமோக வெற்றி; ஓட்டுத்திருட்டு புகார் துாள்துாள்!

நமது சிறப்பு நிருபர்

பீஹார் தேர்தலில் தேஜ கூட்டணி அமோக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. மதியம் 2 மணி நிலவரப்படி 201 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இண்டி கூட்டணி கட்சிகள், முந்தைய தேர்தலில் வெற்றி பெற்ற இடங்களை கணிசமாக இழந்துள்ளன. ராகுல் தெரிவித்த ஓட்டுத்திருட்டு புகார், இந்த தேர்தல் முடிவுகளின் மூலம் துாள் துாளாகியுள்ளது.பீஹார் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் தேஜ கூட்டணி ஒரு அணியாகவும், இண்டி கூட்டணி ஒரு அணியாகவும் போட்டியிட்டன. தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி தனியாக அனைத்து தொகுதியிலும் போட்டியிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z86ybqsf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பீஹார் சட்டசபையில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. தனிப்பெரும்பான்மைக்கு 122 இடங்கள் மட்டும் போதுமானது. காலை 11 மணி ஓட்டு எண்ணிக்கை நிலவரப்படி பாஜ- ஐக்கிய ஜனதாதளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, 185 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. இதன் மூலம், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறும் நிலை கிடைத்தது.தற்போது, மதியம் 2 மணி நிலவரப்படி தேஜ கூட்டணி 201 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இண்டி கூட்டணி கட்சிகள், கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற இடங்களையும் இழந்துள்ளன. இப்போது வெறும் 37 இடங்களில் மட்டுமே முன்னணியில் உள்ளன. ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. பீஹார் மாநில தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல், ஓட்டுத்திருட்டு புகாரை பெரிதாக முன்னிலைப்படுத்தினார். லட்சக்கணக்கான வாக்காளர்கள், பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார்.இந்த குற்றச்சாட்டுகளை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. எனினும், ராகுல் அந்த புகார்களை தொடர்ந்து தெரிவித்து வந்தார். அவர் தெரிவித்த புகார்களை, பீஹார் மாநில வாக்காளர்கள் பொருட்படுத்தவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுவதாக உள்ளன என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 14, 2025 14:45

திருடன் திருட்டு பொய் என்ற வார்த்தைகள் காங்கிரஸ் கட்சியினராலும் இண்டி கூட்டணி கட்சியினராலும் மிக அதிகமாக கடந்த இரண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் அதற்கு பின் வந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிகமாக பயன்படுத்தினார்கள். அதற்கு பின் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக வளர்ந்து கொண்டு போகிறது.


RAMESH KUMAR R V
நவ 14, 2025 14:12

எல்லாம் குடும்ப அரசியலுக்கு சாவுமணி.


தியாகு
நவ 14, 2025 13:31

வடக்கன், பீடா வாயன் என்று டுமிழர்கள் கிண்டல் செய்தாலும் அவர்கள் தெளிவாக ஊழல் செய்யாத லஞ்சம் வாங்காத மோடிஜியின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். ஆனால் இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலம் என்று தங்களை தாங்களே புகழ்ந்துகொள்ளும் டுமிழர்கள் ஒவ்வொரு முறையும் ஊழலிலும் லஞ்சத்திலும் ஊறிப்போன கட்டுமர திருட்டு திமுகவிற்கு வாக்களித்து தங்களை ஆள வைத்து அழகு பார்க்கிறார்கள். விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.


Santhakumar Srinivasalu
நவ 14, 2025 12:55

அப்பறம் என்ன பாஜக தலைமையில் ஆட்சி அமைத்து வயதான நிதீஷ்க்கு ஒய்வு கொடுத்துறுங்க மோடி ஜி?


rasaa
நவ 14, 2025 12:01

பருப்பு வேகவில்லை.


Rajarajan
நவ 14, 2025 12:00

மிக மிக அடிப்படையான விஷயம் தான் வடக்கிற்கும், தெற்க்கிற்கும் உள்ளது. பா.ஜ.க. வடமாநிலங்களில் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கின்றனர். அதுவே அவர்கள் வெற்றிபெறும் ரகசியம். ஆனால், தமிழகத்தில் தி.மு.க. மக்களை பிரிக்கின்றனர். எனவே, தி.மு.க. இங்கே வெற்றிபெறுகிறது. பா.ஜ.க. வுக்கு வேற்றுமையில் ஒற்றுமை பலம். தி.மு.க.வுக்கு ஒற்றுமையில் வேற்றுமை பலம். இவ்வளவே தான் நிதர்சனம்.


Indianதமிழன்
நவ 14, 2025 11:59

ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் என்றால் முன்னதாகவே தேர்தலை நிறுத்தக்கூறி நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கி இருக்கவேண்டியுதனே. இல்லாததைக்கூறி பொய் பிரஸ்ஸாஞ் செய்வதே இவர்களின் பிழைப்பு


sankar
நவ 14, 2025 11:39

களவாணி கூட்டத்துக்கு மரண அடி கொடுத்துஇருக்கிறார்கள் மக்கள்


Prasath
நவ 14, 2025 11:38

அப்படியா கூட்டத்திற்கு எப்பவும் அப்படிதான் தெரியும்


google
நவ 14, 2025 11:37

என்ன ஒரு ஆனந்தம் இந்த கரடிக்கு...


vivek
நவ 14, 2025 13:17

திராவிட குள்ளநரி புலம்பது


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை