மேலும் செய்திகள்
கப்பலேறும் மானம்!
29-May-2025
வைஷாலி: பீஹாரில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் சென்ற கான்வாய் மீது, லாரி வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், தேஜஸ்வி உயிர் தப்பிய நிலையில், அவரது பாதுகாவலர்கள் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.பீஹாரின் மாதேபுராவில் நடந்த நிகழ்ச்சியில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் நேற்று முன்தினம் பங்கேற்றார். அதன்பின் பாட்னா - முசாபர்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் கோரவுல் பகுதியில், சாலையோர கடையில் தேநீர் அருந்த நள்ளிரவு 12:30 மணிக்கு காரை நிறுத்தினார்.அப்போது அவ்வழியே வேகமாக வந்த லாரி, தேஜஸ்வி யாதவின் கான்வாய் மீது மோதி நிற்காமல் சென்றது. இதில், தேஜஸ்வி யாதவ், கடையில் இருந்ததால் உயிர் தப்பினார். எனினும், கான்வாயில் இருந்த மூன்று பாதுகாவலர்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் அருகே உள்ள மருத்துவமனையில் அவர்களை அனுமதித்தனர்.இதற்கிடையே விபத்தை ஏற்படுத்திய அந்த லாரியை, சுங்கச்சாவடி அருகே போலீசார் மடக்கி பிடித்ததுடன் டிரைவரையும் கைது செய்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிடிபட்ட டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
29-May-2025