மேலும் செய்திகள்
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
4 hour(s) ago | 1
பாலுார் பெருமாள் கோவில் தேரோட்டம்
5 hour(s) ago
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி அந்த பகுதி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 48 மணி நேரம் உண்ணாவிரதம் மேற்கொள்கின்றனர். ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்திபோராட்டம் நடந்து வருகிறது. அந்த பகுதியை சேர்ந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனைதொடர்ந்து தெலுங்கானா குறித்தும் மத்திய அரசு இதுவரை எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தெலுங்கானா வலியுறுத்தி ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் ஐதராபாத்தில் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் பத்தரிகையாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி., கேசவ ராவ், தெலுங்கானாவை வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கவும் ஜூலை 13 முதல் 14ம் தேதி வரை 48 மணிநேர உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.
4 hour(s) ago | 1
5 hour(s) ago