உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிஆர்எஸ் கட்சியில் நேற்று சஸ்பெண்ட்... இன்று விலகல்: அறிவிப்பை வெளியிட்டார் கவிதா

பிஆர்எஸ் கட்சியில் நேற்று சஸ்பெண்ட்... இன்று விலகல்: அறிவிப்பை வெளியிட்டார் கவிதா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: பாரத் ராஷ்டிரிய சமிதியில் இருந்து நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்துள்ளார். தெலங்கானா முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர் ராவின் மகள் கவிதா. அப்பா நடத்தி வரும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியின் எம்எல்சி. சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சியின் போது கட்டப்பட்ட காலேஸ்வரம் அணையின் ஒரு தூண் சரிந்து விழுந்த நிலையில், ஊழல் புகார் எழுந்தது. இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=vjt8l9tn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிபிஐ விசாரணை என்ற அறிவிக்கப்பட்ட நாள்முதலே, எம்எல்சி கவிதா தமது கட்சியினர் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். குறிப்பாக அணை கட்டுமானத்தின் போது அப்போது நீர்வளத்துறை அமைச்சராக இருந்த ஹரிஷ் ராவ் (கவிதாவின் சொந்த தாய்மாமா), எம்பி சந்தோஷ் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதனால் தனது தந்தைக்கு அவப்பெயர் ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டை எழுப்பி இருந்தார்.கவிதாவின் ஊழல் குற்றச்சாட்டு, பாரத் ராஷ்டிரிய சமிதியில் பெரும் புயலைக் கிளப்பியது. உட்கட்சி பூசலின் உச்சக்கட்டம் என்று விமர்சனங்கள் எழுந்த நிலையில், கட்சியில் இருந்து நேற்று கவிதா திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, தந்தை சந்திரசேகர ராவ் தான் பிறப்பித்தார்.தந்தை - மகள் இடையிலான மோதல் காரணமாக கட்சி தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்துள்ளார். தமது எம்எல்சி பதவியையும் ராஜினாமா செய்வதாகவும், இதற்கான கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி விட்டதாகவும் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Barakat Ali
செப் 03, 2025 21:33

கட்சியில் இருந்து வாரிசை நீக்குவதே மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற நடத்தும் நாடகம் ......


Anantharaman Srinivasan
செப் 03, 2025 20:26

கவிதா.. நீ.. சந்திரபாபு நாயுடு கட்சியில் சேர்ந்து விடு. எல்லாவிதத்திலும் சௌகரியம் ..


sankar
செப் 03, 2025 19:15

அடுத்த நகர்வு காங்கிரசா ஊழல்களுக்கு தஞ்சம் காங்கிரஸ்


ஜெய்ஹிந்த்புரம்
செப் 03, 2025 19:06

கேயாரெஸ் பாஜகவில் ஐக்கியமானா கவிதா மேலே வழக்கை தொடரமாட்டோம் ன்னு டீல் பேசியுள்ளார்களா? கவிதா இருக்கும் போதே ஐக்கியமானா வாஷிங் மெசின்னு கலாய்ப்பாங்கன்னுட்டு இந்த டீலிங்ஸ்சா?


M Ramachandran
செப் 03, 2025 18:14

தீய மூக்கா வில் கொஞ்சம் பண முடிப்பு கொடுத்து சேர்ந்திட வேண்டியது தானே. அவுக கட்சியை சேர்ந்த MP களுடன் தானே டீலிங் ஆயி மாட்டினது. உங்களை அகில ஆந்திர தலைவியாக்கி ஆக்கி விடுவார்கள்.200 ஊபீஸ்கள் ஆதரவிசு கொடுப்பார்கள்.


ராஜ்
செப் 03, 2025 15:44

மானம் பார்க்காமல் இங்கொருத்தர் 176000 கோடி ஊழல் செய்துட்டு தில்லா இருக்கிறார்.


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
செப் 03, 2025 14:50

அடுத்து என்ன??? ரேவந்த் ரெட்டியை சந்தித்து காங்கிரஸ்ல் இணைத்து கொள்வதா..... ஸ்டேட் பாலிடிக்ஸ்க்கு ஒரு பிரபல பெண் முகம் தெலுங்கானா காங்கிரஸ்க்கு தேவை தான்.....கங்கிராட்ஸ் கவிதாகாரு


Mahendran Puru
செப் 03, 2025 13:58

பாஜக வீடு புகுந்து குடும்பத்தை பிரித்து விட்டது. ஊழல் புகாரிலிருந்து தப்பிக்க கட்சியையே பாஜகவில் இணைக்க முடிவு செய்தார் கே சி ஆர். மகள் கவிதா விடவில்லை. நீக்கிவிட்டார். இப்போது சிபிஐ விசாரணையை எடுத்துள்ளது.


Raman
செப் 03, 2025 18:37

Rs 200 stuff


sankar
செப் 03, 2025 19:13

மவனா... மகளா... அதான் பிரச்சனை


புதிய வீடியோ