உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் வன்கொடுமையின் உச்சம்: தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்

பாலியல் வன்கொடுமையின் உச்சம்: தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்த இளம்பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஐதராபாத்; தெலுங்கானாவில், பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் உச்சமாக, தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர் குதித்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு; ஆந்திராவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் ஹைதராபாத் புறநகர் பகுதியான மெட்சலில் வசிக்கிறார். தமது மொபைல்போன் கோளாறாகி விட்டதால் அதை சரி செய்ய, ஹைதராபாத்துக்கு புறநகர் ரயிலில் சென்று கொண்டிருந்தார். அவர் பயணித்த பெட்டியில் இவருடன் சேர்த்து மொத்தம் 3 பெண்கள் இருந்துள்ளனர். 2 பேர் வழியில் இறங்கிவிட இந்த பெண் மட்டுமே தனித்து இருந்துள்ளார். அப்போது அதே ரயிலில் பயணித்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன், அந்த பெண்ணை நெருங்கி பாலியல் தொந்தரவு செய்துள்ளான். அதை தடுக்க இளம்பெண் முயற்சித்த போது தாக்க முயற்சித்துள்ளான்.ஒருகட்டத்தில் வாலிபனிடம் இருந்து தப்பிக்க ஓடும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். தலை, கைகளில் ஏற்பட்ட காயங்களுடன் அவர் கீழே விழுந்து கிடப்பதை அவ்வழியே சென்றவர்கள் கண்டு, மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வாலிபர் யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

நிக்கோல்தாம்சன்
மார் 24, 2025 20:44

இந்த கேள்வியை சர்வாதிகாரியிடம் நீ கேட்டிருக்க வேண்டும் தமிழன் , ஏனென்றால் குற்றம் நடந்த மாநிலத்தின் முதல்வர் சமீபத்தில் உன்னுடைய மாநில முதல்வரை நட்புடன் சந்தித்துள்ளார்


ganesh ganesh
மார் 24, 2025 20:40

குற்றவாளிகளை எந்த காலகட்டத்திலும் விடுதலை செய்யாமல் முழு தண்டனையும் அனுபவிக்க செய்யுங்கள் .


இறைவி
மார் 24, 2025 18:37

இருநூறு ரூபாய் உபிக்கள் தலையில் பிஜெபி எதிர்ப்பு எண்ணத்தைத்தவிர ஒன்றும் இல்லை என்று நிரூபிக்கிறார் தமிழன். ஹைதராபாத் தெலுங்கானாவில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.


Appa V
மார் 24, 2025 18:34

வளர்ப்பு சரியில்லையா ?


அப்பாவி
மார் 24, 2025 18:25

இதே தெலுங்கானாவில்தான் இதே மாதிரி கொடுமை செய்தவர்களை ஜகன்மோஹன் ரெட்டி என்கவுண்ட்டரில் போட்டுத்தள்ளினார். இப்போ காங்கிரஸ் ஆட்சி நடக்குது. அதனால் பயம் உட்டுப் போயிருச்சு.


Venugopal, S
மார் 24, 2025 19:34

அப்பாவி தெலுங்கானாவில் எப்போ ஜகன் ஆட்சி...200 ரூவா குடுத்து யார் எதை சொன்னாலும் இங்கே எழுதுவியா?


மொட்டை தாசன்...
மார் 24, 2025 18:14

தண்டணையிலுருந்து எளிதாக தப்பித்துவிடலாம் என்பதால்தான் இவ்வளவு தைரியம் அவனுக்கு. நமது நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் அப்படி.


अप्पावी
மார் 24, 2025 18:00

அது திருட்டு தெலுங்கு திராவிடனா இருக்கும்.


தமிழன்
மார் 24, 2025 17:59

டமிள்நாட்டில் இது நடக்கலயா?? ஓ இது சங்கிகள் கூட்டணி ஆளும் மாநிலமாச்சே எந்த சங்கி கூட்டமாவது இங்க வருதா பாரு வக்காலத்து வாங்க


Appa V
மார் 24, 2025 18:35

வளர்த்த விதம் கேள்விக்குரியது


N Sasikumar Yadhav
மார் 24, 2025 18:48

உங்க மானங்கெட்ட புள்ளிராஜா இன்டி கூட்டணியின் ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் ஆட்சி செய்யும் மாநிலம் தெலுங்கானா திரு கோபாலபுர கொத்தடிமையாரே . அதான் கும்மிடிபூண்டி அடுத்து என்ன இருக்கிறதென படியும்


Venugopal, S
மார் 24, 2025 19:37

ஒங்கோல் kothadimaikku gummidipoondi தாண்டி என்ன நடக்குதுன்னு தெரியல...ஓசி குவார்ட்டர் மகிமை...யாரு எதை எழுதி குடுத்தால் இங்கே வந்து குப்பை kottura


Ganapathy
மார் 24, 2025 20:48

அத என்னடா சங்கி திராவிட சொம்பே? இருட்டில் தாய்க்கும் மனைவிக்கும் வித்தியாசம் பார்க்காதவன்தான் திராவிட சொம்பு.


raja
மார் 24, 2025 17:40

ஹைதராபாத்.. மர்மநபர்கள் அதிகமா இருக்கும் இடம்...புரிந்தவர்கள் புத்திசாலி...


Nandakumar Naidu.
மார் 24, 2025 17:29

அவனை என்கவுண்டரில் போட்டுத்தள்ள வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை