உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திருமலையில் ஜெகன் மன்னிப்பு கோர தெலுங்கு தேசம் வலியுறுத்தல்

திருமலையில் ஜெகன் மன்னிப்பு கோர தெலுங்கு தேசம் வலியுறுத்தல்

அமராவதி 'ஏழுமலையான் கோவில் லட்டு விவகாரத்தில் கலப்படம் செய்த முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, திருமலைக்கு வரும் போது மன்னிப்பு கோருவதுடன், நம்பிக்கை பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும்' என, தெலுங்கு தேசம் வலியுறுத்தியுள்ளது.திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காலத்தில் வழங்கப்பட்ட லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த விவகாரம் நாடு முழுதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், லட்டு பிரசாத விவகாரத்தில் கட்டுக்கதைகளை கூறி, சந்திரபாபு நாயுடு பெரும் பாவத்தை செய்ததாக ஜெகன்மோகன் ரெட்டி புகார் தெரிவித்தார்.இந்நிலையில், ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையான் கோவிலுக்கு நாளை செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு அங்கு வரும் ஜெகன்மோகன், 'ஏழுமலையானிடம் மன்னிப்பு கோருவதுடன், ஏழுமலையானை முழுமையாக நம்புவதாக நம்பிக்கை பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும்' என, தெலுங்கு தேசம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரேம்குமார் ஜெயின் கூறுகையில், “லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது மன்னிக்க முடியாத குற்றம்.''திருமலை திருப்பதிக்கு நாளை வருகை தரும் ஜெகன்மோகன், அதற்கான பரிகாரம் செய்ய வேண்டும். மன்னிப்பு சடங்குகளின் பங்கேற்பதுடன், ஏழுமலையானை நம்புவது தொடர்பான நம்பிக்கை பிரகடனத்தில் அவர் கையெழுத்திட வேண்டும். இல்லையென்றால் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்,” என தெரிவித்துள்ளார்.மற்றொரு செய்தித் தொடர்பாளர் கொம்மரெட்டி பட்டாபிராம் கூறுகையில், “நீங்கள் கிறிஸ்துவத்தில் நம்பிக்கை கொண்டவர் என்பது எங்களுக்குத் தெரியும், அதில் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ''இருப்பினும், வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் ஏழுமலையானை தரிசனம் செய்ய நினைத்தால், அவர் மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறி கையெழுத்திட வேண்டும்; இது ஒரு வழக்கம். நாங்கள் எல்லா மதங்களையும் மதிக்கிறோம்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Nandakumar Naidu.
செப் 27, 2024 14:54

ஒரு ஹிந்து மத விரோதியை எப்படி திருப்பதி திருமலையில் அனுமதிக்கலாம்?


manivannan m
செப் 27, 2024 09:26

வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவர் ஏழுமலையானை தரிசனம் செய்ய நினைத்தால், அவர் மீது நம்பிக்கை இருப்பதாகக் கூறி கையெழுத்திட வேண்டும் இது ஒரு வழக்கம். நாங்கள் எல்லா மதங்களையும் மதிக்கிறோம்,”


Sudha
செப் 27, 2024 07:44

Targeting only ஜகன் gives suspicion over the allegations, what about tge suppliers?


கிஜன்
செப் 27, 2024 06:23

ஜெகனா லட்டு புடிச்சாரு ..... நீங்க தானே புடிசீங்க ..... எல்லாரும் லட்டு சூப்பர்ன்னு ரெண்டு குடு ...மூணு குடுன்னு வாங்கி சாப்பிட்டாச்சுல்ல .... அப்புறம் என்ன .... கொன்றால் பாவம் தின்றால் போச்சு ....


நிக்கோல்தாம்சன்
செப் 27, 2024 09:59

அசிங்கம் , அன்று கேரளாவில் ரம்சான் மாதத்தில் பன்றி கறி சமைக்கக்கூடாது என்று கிருஸ்துவ தேவாலயத்தை தாக்கி உடைத்தனர் , அப்போதும் இப்படியே நீங்க கருத்து எழுதியிருக்கலாம் , பன்றியையும் கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்று தின்பீர்களா என்று உங்களின் முஸ்லீம் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்க


Kasimani Baskaran
செப் 27, 2024 05:43

திருமலை நிர்வாகத்திலுள்ள வேற்று மதத்தினரை முதலில் வெளியேற்ற வேண்டும். அதை செய்தாலே கூட முக்கால் வாசி பிரச்சினைகள் சரியாகிவிடும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை