உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டெம்போ விபத்து மூவர் உயிரிழப்பு

டெம்போ விபத்து மூவர் உயிரிழப்பு

தாவணகெரே டெம்போ விபத்துக்கு உள்ளானதில் ஆந்திராவைச் சேர்ந்த மூவர் பலியாகினர்.ஆந்திரா, கர்னுாலின் மந்த்ராலயா அருகில் உள்ள சிங்கராஜனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த தகரம் ஈரண்ணா, 55, கடபூரின் நாகலாபுரா கிராமத்தில் வசித்த பிஞ்சாசி மஸ்தான் சாப், 55, பெத்த வெங்கண்ணா, 46, ஆகியோர் பணி நிமித்தமாக டெம்போ வாகனத்தில், ஹாவேரியின், பேடகி மார்க்கெட்டுக்கு புறப்பட்டனர்.தாவணகெரே அருகில் தேசிய நெடுஞ்சாலை - 48ல், பஞ்சாபா தாபா அருகில் நேற்று முன் தினம் நள்ளிரவு 11:30 மணியளவில் சென்றபோது, வாகன பின்புறத்தின், இடதுபுற டயர் வெடித்தது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்தது. இதில் தகரம் ஈரண்ணா, பிஞ்சாசி மஸ்தான் சாப், பெத்த வெங்கண்ணா ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.வாகன ஓட்டுனர் ஹுசேன், லிங்கண்ணா, சுதாகர், நாகண்ணா ஆகியோர் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை