உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி

பயங்கரவாதி மசூத் அசார் வீடு தரைமட்டம்; குடும்பத்தினர் 10 பேர் பலி

புதுடில்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரி மற்றும் உறவினர்கள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதனை அறிக்கை வாயிலாக மசூத் அசார் ஒப்புக்கொண்டுள்ளான். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் பஹாவல்பூரில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் வீடு தரைமட்டமானது. அவனது குடும்பத்தினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o1euez6r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தனது குடும்பத்தில் 10 பேர் உயிரிழந்துவிட்டனர் என பயங்கரவாதி மசூத் அசார் அறிக்கை வாயிலாக ஒப்புக்கொண்டுள்ளான்.

யார் இந்த மசூத் அசார்?

* ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார். இவன் இந்தியாவிற்கு எதிராக சதி வேலைகளை செய்துள்ளான்.* லஷ்கர் இ தொய்பா ஹபீஸ் சயீத் போல மசூத் அசாரும் இந்தியா தேடும் முக்கிய பயங்கரவாதி என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ., மற்றும் ராணுவத்தின் பாதுகாப்புடன் அவன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.* இந்திய உளவுத்துறை தொடர்ச்சியாக மசூத் அசார் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது. * கடந்த 2001ல் நம் பார்லிமென்ட் மீது நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல், 2008ல் நடந்த மும்பை தாக்குதல் ஆகியவற்றில் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Narayanan
மே 08, 2025 16:10

திருமா உடனடியாக பாகிஸ்தான் போங்கள் . பாவம் உங்களின் மசூத் அசார் வீட்டை தரைமட்டம் ஆக்கி விட்டார்களாம் . அவர்களுக்கு அடைக்கலம் கொடுங்களேன்.


S.V.Srinivasan
மே 08, 2025 08:02

இவன் செஞ்ச பாவத்துக்கு அவங்க போய் சேர்ந்துட்டாங்க. இவன் தப்பிச்சுட்டானே


K.Uthirapathi
மே 08, 2025 03:43

"TheHindu" வாசகரே, வினையை விதைத்தான் மசூத் ஹசார், வினையை அறுவடை செய்துள்ளான். அவன் சம்பதித்த பணத்தை அனுபவித்தது போலவே, அவன் செய்த தீவிவாதத்தின் பலனையும் அவனது வாரிசுகள் அனுபவித்துதான் ஆகவேண்டும். இது "அல்லாவின்" அறம். ஆணை அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும். கொசுறு: "அதீத பாதுகாப்பை பாகிஸ்தான் கொடுத்ததால் மசூத் ஹசார் தன் குடும்பத்துடன் தான் உறங்கி இருப்பான், ஆகவே அவனும் மடிந்து போயிருக்க 99% வாய்ப்புள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் இறந்த, ஹவுதி, ஹமாஸ் தலைவர்களின் இறப்புகளை, இரண்டு நாள் கழித்தே அந்த அமைப்புகள் ஒப்புக்கொண்டு செய்திகள் வெளியிட்டன.


Lakshmanan
மே 07, 2025 21:25

தீவிரவாதி


Natchimuthu Chithiraisamy
மே 07, 2025 17:59

இவன் தீவிரவாத எண்ணம் இந்தியாவில் வாழும் மக்களுக்கு இருக்காது என நம்ப வேண்டியுள்ளது.


India our pride
மே 07, 2025 16:16

இஸ்ரேல் நாடு இந்த தீவிரவாத கும்பல்களை அழிக்க முன்னோடியாக இருந்து உள்ளது. 1967ல் உலகிலேயே முதன் முதலாக உள்நாட்டு தீவிரவாதிகள் வீடுகளை அழித்து பழி வாங்கியது. அதேபோல கிரீஸ் ஒலிம்பிக்ஸில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை கொன்ற தீவிரவாதிகளை கண்டறிந்து Mosad மூலம் பல வருடங்களுக்கு பின்னால் பழி வாங்கியது. இஸ்ரேலிய பிரதமர் கோல்ட மேயர் சொன்னது. "உன்னை கொல்ல வருபவரிடம் நீ எப்படி சமாதானம் பற்றி பேச முடியும்."


Prasanna Krishnan R
மே 07, 2025 16:14

Kill this b..d also


Suresh sridharan
மே 07, 2025 16:12

அப்ப பயம் வந்துருச்சு அப்படின்னு தானே அர்த்தம் வரணும்


Anand
மே 07, 2025 14:43

பாதுகாப்பான இடத்திற்கு சென்று விட்டார்கள் போலிருக்கு.


Yaro Oruvan
மே 07, 2025 14:18

கோழைகளை போல மதத்தின் பெயரை கேட்டு சுட்டு கொல்லவில்லை.. அவனது வீட்டின் பதில் தாக்குதல் - அதில் அவனது பக்கம் இழப்புகள் இருக்கத்தான் செய்யும்.. அவனை பெத்ததது குத்தம்.. சோத்தைப்போட்டு வளர்த்தது குத்தம் .. இன்று பண்ணி மாதிரி கொளுத்துப்போயி அடுத்தவன் மீது ஏவிவிட்டு வேடிக்கை பார்க்கும் அவனை கொல்லும்பொது பக்க விளைவுகள் இருக்கும்.. அது விதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை