உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போட்டிக்கு வந்தது டெஸ்லா: நல்வரவு என்கிறார் ஆனந்த் மஹிந்திரா

போட்டிக்கு வந்தது டெஸ்லா: நல்வரவு என்கிறார் ஆனந்த் மஹிந்திரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில் முதல் ஷோரூமை திறந்த எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்துக்கு, போட்டி நிறுவனமான மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா வரவேற்பு தெரிவித்துள்ளார்.உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகனச் சந்தையான இந்தியாவில், அமெரிக்காவை தலைமையிடமாககொண்ட டெஸ்லா நிறுவனம் விற்பனையை துவக்கி உள்ளது. அந்த நிறுவனத்தின் முதல் ஷோரூமை மும்பையில், மஹாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் திறந்து வைத்தார்.இதனை வரவேற்று, மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: எலான் மஸ்க்கையும், டெஸ்லாவையும் இந்தியாவுக்கு வரவேற்கிறோம். உலகின் மிகப்பெரிய மின் வாகன சந்தையில் உற்சாகம் கூடியிருக்கிறது. போட்டியே புதுமை படைப்பதை ஊக்குவிக்கும். சார்ஜிங் மையத்தில் உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஆனந்த் மஹிந்திராவின் மஹிந்திரா நிறுவனமும் மின்சார வாகனத்தை சந்தைப்படுத்த துவங்கி உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கிளை திறந்துள்ள நிலையில் போட்டி நிறுவனத்துக்கு ஆனந்த் மஹிந்திரா வரவேற்பு தெரிவித்தற்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

ராஜா
ஜூலை 17, 2025 08:06

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தயாரிப்புகள் எப்போதுமே சிறந்த வாகனங்கள்,


V Venkatachalam
ஜூலை 16, 2025 15:20

ஆனந்த சார் உங்க பாஸிடிவ் அப்ரோச்சுக்கு எத்தனை சபாஷ் வேணுமின்னாலும் போடலாம். எவ்வளவு முறை வேணுமின்னாலும் கை தட்டலாம். யூ ஆர் ஜெம் ஆஃப் இந்தியா. வாழ்க. வளர்க..


அப்பாவி
ஜூலை 16, 2025 06:47

ஆனந்துக்கு நம்ம ஊர் ரோடுகள், மக்களின் சிவிக் சென்ஸ், குப்பை கூளங்கள் மேலே அவ்வளவு நம்பிக்கை. டெஸ்லா இல்லை. எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.


kgb
ஜூலை 15, 2025 21:02

ஐயா நாம் கப்பல் வாங்கினாலும் km எவ்ளவு தரும் என்று தான் பார்த்து வாங்குவோம் , டெஸ்லா >60 lakhs, ஒரு ஆயிரம் கார் விக்கலாம், மார்கட் முழுவதும் எடுப்பித்து கொள்ள முடியாது. இது இந்தியா.


Ramesh Sargam
ஜூலை 15, 2025 20:47

திருவிளையாடல் படத்தில் என்னை யாரும் பாட்டுப்பாடி வெல்லமுடியாது என்று மார்தட்டிக்கொண்டு வடநாட்டிலிருந்து ஒரு விற்பன்னர் வருவார். அவரின் கர்வத்தை அடக்க சாட்சாத் சிவபெருமானே வழிப்பாடகன் வடிவில் அந்த விற்பன்னர் வீட்டின் முன்பு இரவு வேளையில் நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாமே என்கிற பாடலை பாடிவிட்டு அங்கேயே தூங்கிவிடுவார். அந்த பாடலை கேட்ட அந்த வடநாட்டு விற்பன்னர் இரவோடு இரவாக ஊரைவிட்டே ஓடிவிடுவார். அதுபோல டெஸ்லாவுக்கும் ஆக வாய்ப்புண்டு என்று சொல்ல வருகிறேன்.


மகா
ஜூலை 15, 2025 20:24

டெஸ்லா வந்தவுடன் மஹிந்திரா விற்பனை விண்ணை எட்டிவிடும். ஒப்பிட்டு பார்க்க எதுவும் இல்லாமல் இருந்த சந்தையில் இப்போது டெஸ்லா வந்துஉள்ளதால் போட்டி ஆரம்பம். ஆல் தி பெஸ்ட்.


RK
ஜூலை 15, 2025 20:14

போட்டிகள் இருந்தால்தான் புதியபுதிய அம்சங்கள் மற்றும் விலை குறையும் வாய்ப்பு , வளர்ச்சி இருக்கும். வாழ்த்துக்கள்.


பெரிய குத்தூசி
ஜூலை 15, 2025 20:14

ஆனந்த் மஹிந்திரா சார், உங்கள் மஹிந்திரா கார் தரம், வடிவமைப்பு, கார்களில் உள்ள 20 க்கும் மேற்பட்ட சிறப்பு வடிவமைப்பு அம்சங்கள் உலகில் எந்த காருக்கும் கிடையாது. எப்போதும் முதலில் உங்கள் கார்கள் தரம் விற்பனையில் நம்பர் 1. வாழ்த்துக்கள். மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனம் வருடத்திற்கு தனது லாபத்தில் 20சதவிகிதம் மதிப்புள்ள வாகனங்களை இந்திய ராணுவத்திற்கு இலவசமாக ராணுவ வாகனங்களையும் ஜீப்களையும் இலவசமாக வழங்குகிறது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனத்தின் நாட்டுப்பற்றுக்கு சலூட். ஜெய்ஹிந்த் சார்


NALAM VIRUMBI
ஜூலை 15, 2025 21:57

அருமையாக சொன்னீர் அன்பரே டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் தேசத்தின் பொக்கிஷங்கள் வாழ்க வளர்க கண்டிப்பாக டெஸ்லா இந்தியக் கார்களின் விலையுடன் போட்டி போட முடியாது.