உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, 140 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது; சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 4 விக்கெட்களை கைப்பற்றினார். ஆமதாபாத்தின் மோடி மைதானத்தில் முதல் டெஸ்ட் நடக்கிறது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 121/2 ரன் எடுத்து, 41 ரன் பின்தங்கியிருந்தது. நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ஒருபக்கம் அனுபவமில்லா வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் கைவலிக்க பந்துவீசுவதும் மறுபக்கம் நல்ல 'பார்மில்' உள்ள இந்திய பேட்டர்கள் அடிச்சு நொறுக்குவதும் தொடர்ந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=k6mrzqrh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் முதல் இன்னிங்சில் 448/5 ரன் எடுத்து, 286 ரன் முன்னிலை பெற்றிருந்தது. ஜடேஜா (104), வாஷிங்டன் சுந்தர் (9) அவுட்டாகாமல் இருந்தனர். இந்நிலையில் இன்று (அக்., 04) 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தது.இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 45.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், இந்திய அணி, 140 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது; சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 4 விக்கெட்களை கைப்பற்றினார். சிராஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Vasan
அக் 04, 2025 18:50

West Indies ruled Cricket world till 1983, and their decline started after losing World cup in 1983. What a team it was in those years Gorden Greenidge, Desmond Haynes, Richie Ridson, Vivian Rids, Clive Lloyd, Alwin Kalian, Larry Gomes, Gus Logie, Brian Lara, Jeffrey Dujon, Roger Harper, Malcolm Marshall, Andy Roberts, Joel Garner, Patrick Paterson, Courtney Walsh, Ian Bishop, Phil Simmons. Though the above players played in different era.


kumar
அக் 04, 2025 16:25

வாழ்த்துக்கள் வீரர்களே, விளையாட்டு வீரர்களுக்கு ஜெய் ஹிந்த்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை