உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நம்பகத்தன்மையை சோதிக்கின்றனர் தலைமை நீதிபதி வேதனை!

நம்பகத்தன்மையை சோதிக்கின்றனர் தலைமை நீதிபதி வேதனை!

புதுடில்லி, ''ஒரு குறிப்பிட்ட வழக்கை, பல்வேறு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் குறிப்பிட்டு உத்தரவு பெற முயற்சிக்கின்றனர். இதில், என் நம்பகத்தன்மையை சோதிக்கின்றனர்,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வேதனை தெரிவித்தார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வு நேற்று தன் விசாரணையை துவக்கியது. அப்போது ஒரு வழக்கறிஞர், சுரங்க ஒப்பந்தம் குறித்த ஒரு வழக்கை குறிப்பிட்டார். இதற்கு தலைமை நீதிபதி கூறியதாவது:இந்த வழக்கு தொடர்பாக, முந்தைய நாளிலும் மற்றொரு வழக்கறிஞர் குறிப்பிட்டார். இதுபோன்று தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வழக்கை, வெவ்வேறு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டு, சில உத்தரவுகள் பெறும் முயற்சி நடக்கிறது.இதுபோன்ற முயற்சிகளை ஊக்குவிக்க முடியாது. இவ்வாறு, ஒரே வழக்கை பல வழக்கறிஞர்கள் குறிப்பிடுவதை நிறுத்த வேண்டும். நீங்கள் உங்களுடைய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறீர்கள்.தலைமை நீதிபதி என்ற நிலையில் எனக்குள்ள குறுகிய அதிகாரங்களை, உங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயற்சிக்கிறீர்கள். இது, என் நம்பகத்தன்மையை சோதிப்பதாக அமைந்து விடுகிறது. நான் ஏதோ வழக்குகள் பட்டியலிடுவதை சரியாக செய்வதில்லை என்பதை காட்டுவதாக அமைந்து விடுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

theruvasagan
அக் 02, 2024 19:53

குறுகிய அதிகாரம்தான் இருக்கா. வானளாவிய அதிகாரம் உள்ளது என்பது போலத்தானே பேசுவார்கள் . அரசாங்க நிர்வாகம் சரிவர நடக்காவிட்டால் நாங்களே முன் நின்று நடத்த வேண்டி வரும் என்று கொக்கரித்ததெல்லாம் ஞாபகத்துக்கு வருது.


NATARAJAN R
அக் 02, 2024 18:07

மதிப்பிற்குரிய நீதிபதி அவர்களே நம்பகத்தன்மை குறைந்து வருகிறது என்று வருத்தமாக சொல்கிறீர்கள். மக்களுக்கு உச்ச நீதிமன்றம் மீது இருந்த நம்பிக்கை குறைந்து வருகிறது என்பது உண்மை. ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அரசியல் வாதிகள் வழக்கு என்றால் உடனே விசாரணைக்கு பட்டியல் இடப்படுகின்றன. தமிழக அமைச்சர் திரு பொன்முடி விஷயத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனை விதித்து பதவி பறிப்பு நடந்த பின்னர் எந்த விதமான நியாயமான காரணம் இன்றி உடனடியாக அவரது தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ஏன்? ஆந்திர முதல்வர் திரு சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு, திருப்பதி லட்டு விஷயத்தில் அறிக்கை வெளியிட்டது குறித்து கடுமையான கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தமிழக அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இந்துக்களுக்கு எதிராக, சனாதன தர்மம் ஒழிக்க வேண்டியது என்று பேசியது வீடியோ ஆதாரம் தந்தும், ஆந்திர முதல்வரை கண்டித்து பேசியது போல உச்சநீதிமன்றம் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை ஏன் விடவில்லை. ஆளுநர், சட்டத்தில் முடிவெடுக்க எந்த கால நிர்ணயம் எதுவும் இல்லை. ஆனால் நீங்கள் தலையிட்டு ஆளுநர் உடனே முடிவெடுக்க உத்தரவு பிறப்பிப்பீர்கள். ஆனால் கைது செய்து ஊழல் வழக்கில் காவலில் இருப்பவரை அமைச்சர் " ஆக்க தடை கோரினாரல், அது முதல்வரின் தனிப்பட்ட உரிமை என்பீர்கள். ஒரு வழக்கில் பெரும்பாலான மக்கள் நினைப்பது மட்டுமே தீர்ப்பு என வழங்கவேண்டும். ஆனால் நடைமுறையில்.


theruvasagan
அக் 02, 2024 15:39

அரசிய்வாதிகள் போல தீர்பபுக்கு அப்பாற்பட்ட கருத்துக்களை சொல்லாமல் சட்டத்தின் கோணத்தில் இருந்து மட்டும் பார்க்காமல் தர்மத்தின் அடிப்படையில் நின்று தீர்ப்பு சொன்னால் உங்களை தர்மம் காக்கும். பல தீர்ப்புகள் மேலே சொன்னதற்கு எதிராகவே வந்துள்ளன என்பது நீதித்துறை மீது இருக்கும் நம்பகத்தன்மையை கேள்விக்குறி ஆக்கிவிட்டது.


Ram pollachi
அக் 02, 2024 11:18

மக்களை சோதிக்க, நோகடிக்க எங்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. ஆனால் திருப்பி எங்க கிட்ட காட்டினால் விளைவு மோசமாகிவிடும்.


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 02, 2024 10:55

பல வழக்குகளின் தீர்ப்புகள் பொது ஜன அபிப்ராயத்துக்கு மாறுபட்டே வருகின்றன. வழக்கு நடக்கும்போது மக்கள் தீர்ப்பை அனுமானம் செய்கின்றனர். ஆனால் முடிவு வேறு மாதிரி இருக்கிறது. உதாரணம் தயாநிதி மாறன் தன் வீட்டில் அமைச்சர் என்ற முறையில் தொலைபேசி இணைப்பகம் வைத்து அதை சன் டி வி க்கு பயன்படுத்தியது. உண்மை என்னவென்று அனைவருக்கும் தெரிந்தாலும் தயாநிதி மாறன் புனிதர் ஆகிவிட்டார். அதுபோலவே இரண்டு ஜி வழக்கும். ஆறு ஆண்டுகள் வழக்கு நடந்து, முடிவில் யாருமே சாட்சி சொல்ல வரவில்லை என்று அணு குண்டுதான் தீர்ப்பாக வந்தது. அறுபத்து ஆறு கோடி ஊழலுக்கு நூறு கோடி அபராதம் , அறுநூற்று ஐம்பது கோடி ஊழலுக்கு இருபத்தைந்து இலட்சம் அபராதம் என்ற தீர்ப்பும் இந்த வகையே. சமீபத்திய பொன்முடி வழக்கும் தீர்ப்பும் கூட உதாரணம்தான். திமுகவினர் மீதான அனைத்து வழக்குகளும் திமுகவினருக்கே சாதகமாக தீர்ப்பு வெளியாகின்றன. வழக்கு விசாரணை எல்லாம் முடிந்த பிறகு " தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது" என்ற வாசகங்களை ஆழமாகப்படித்தால் வழக்கு முடிவு தேதிக்கும் தீர்ப்பு வெளியாகும் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் என்னவோ நடப்பது போல தெரிகிறது. மொத்தத்தில் நீதிமன்றங்கள் மீது நம்பிக்கை குறையத்தான் செய்கிறது.


S. Neelakanta Pillai
அக் 02, 2024 10:04

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கே இந்த நிலைமை என்று சொன்னால் இந்த நாட்டில் சுதந்திரம் என்கின்ற பெயரில் அதிகாரம் இருக்கிறது என்கின்ற ஆணவத்தில் சாமானிய பொது மக்களை போட்டு வாட்டி வதைக்கிறார்களே அவர்கள் எங்கே போய் சொல்வார்கள்.


Kalyanaraman
அக் 02, 2024 08:56

உண்மைதான் பாதிக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்வதற்கு தகுதியற்று தான் இருக்கிறது. இருந்தும் பதிவு செய்து நீதிமன்றம் - நீதிபதிகளின் நேரத்தை வீணாக்குகிறார்கள். ஏன் என்று புரியவில்லை.


Anbuselvan
அக் 02, 2024 08:22

உச்ச நீதி மன்றத்தின் முந்தைய தீர்ப்பு இருந்தால் அதை மேற்கோள் காட்டுவது இயல்பானது. அதையே எல்லோரும் மேற்கோள் காட்டுகிறீர்கள் என குறை கூறுவது சரியா என தெரியவில்லை. சட்டம்தான் மாற்ற பட வேண்டும். நாட்டின் பாருளமன்றத்திற்குதான் மாற்ற உரிமை உள்ளது. நீதிபதிகளுக்கு அந்த உரிமை கிடையாது என்பது எல்லா நீதியரசரர்களுக்கும் தெரிந்தேதான் அவர்கள் அந்த பதவியில் உள்ளனர் என மக்கள் நம்புகிறார்கள்.


S.L.Narasimman
அக் 02, 2024 07:58

வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு கொடுப்பதை விட்டு குற்றாவாளிகளுக்கு ஜாமின் கொடுப்பதில் அவசரம் கூடாது.


VENKATASUBRAMANIAN
அக் 02, 2024 07:53

வக்கீல்கள் என்றால் பொய் மட்டுமே பேசுவார்கள் என்று சொல்வதுண்டு. ஒரு சிலர் நேர்மையாக உள்ளனர். அவர்களுக்கும் கெட்ட பேர் வாங்கி கொடுக்கிறார்கள்.


புதிய வீடியோ